1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:13,764 --> 00:00:17,309
ஒன்று, இரண்டு,
மூன்று, நான்கு.

4
00:01:23,250 --> 00:01:26,920
45 ஆண்டு காலமாக
என்னை சுற்றி இருக்கும்

5
00:01:27,004 --> 00:01:31,091
இந்த ஆண்களோடும் பெண்களோடும்,
உங்களில் சிலரோடும், பேசி வருகிறேன்.

6
00:01:31,967 --> 00:01:35,470
இப்போ, உங்களில் சிலரிடம், சமீபத்தில்தான்
பேச ஆரம்பித்திருக்கிறோம் என நினைக்கிறேன்.

7
00:01:35,554 --> 00:01:36,555
பேக்ஸ்ட்ரீட்ஸ்

8
00:01:37,055 --> 00:01:38,056
எப்படியானாலும்,

9
00:01:38,140 --> 00:01:43,020
அந்த உரையாடலை நான் அவசியமானதாக,
ஜாலியாக, களிப்பாக செய்ய முயற்சித்தேன்.

10
00:01:43,729 --> 00:01:46,481
நான் கிடார் வாசிக்க ஆரம்பித்தது

11
00:01:46,565 --> 00:01:50,652
பேச அல்லது உரையாட
ஒருவரை நான் தேடியதால்தான்.

12
00:01:51,403 --> 00:01:55,115
என் கட்டிலடங்கா கனவுகளை விட
இது நல்லா கூடி வந்திருப்பதா நினைக்கிறேன்.

13
00:01:55,657 --> 00:01:59,036
எனக்கு தெரிந்ததெல்லாம்,
இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னும்,

14
00:01:59,661 --> 00:02:03,498
எனக்கு உரையாட தேவை இருப்பதை
நான் ஆழமாக உணர்கிறேன்.

15
00:02:03,957 --> 00:02:06,502
தினம் காலையில் நான் எழும்போது இருக்கிறது.

16
00:02:06,585 --> 00:02:09,755
என் கூடவே நாள் முழுதும் நடந்து வருகிறது.

17
00:02:10,756 --> 00:02:13,842
நான் உறங்கப் போகும் போது
என்னோடு ஒவ்வொரு இரவும் இருக்கிறது.

18
00:02:15,093 --> 00:02:19,598
கடந்த 50 ஆண்டுகளில் அது தணியவேயில்லை.

19
00:02:19,681 --> 00:02:22,267
அது எதனால் என எனக்கு உண்மையாவே தெரியாது.

20
00:02:22,893 --> 00:02:28,982
தனிமையா, பசியா,
ஆணவமா, குறிக்கோளா, ஆசையா,

21
00:02:29,066 --> 00:02:34,112
உணரத்தேவையா, கேட்கப்படத் தேவையா,
அறியப்பட தேவையா,

22
00:02:34,696 --> 00:02:35,822
மேற்கூறிய எல்லாமேவா?

23
00:02:36,823 --> 00:02:42,496
எனக்கு தெரிந்ததெல்லாம், அது என் வாழ்வில்
மிக நிலையான உணர்வுகளில் ஒன்று.

24
00:02:43,163 --> 00:02:47,876
என் இருதயம் சீராக துடிப்பதை எப்படி
நம்ப முடியுமோ, அதுபோலத்தான்

25
00:02:48,669 --> 00:02:50,921
உங்களோடு உரையாட எனக்கிருக்கும் தேவை.

26
00:02:51,004 --> 00:02:54,383
கனவான்களே, கூடி வாங்க.

27
00:02:56,677 --> 00:02:58,846
நோட்டு புத்தகங்களை எடுத்துக்கோங்க.
ஆரம்பிங்க.

28
00:02:58,929 --> 00:03:00,806
உங்க நோட்டு புத்தகங்களை
எடுத்து கூடி வாங்க.

29
00:03:00,889 --> 00:03:02,266
என் நோட்டு புத்தகம். கிடைத்தது.

30
00:03:02,349 --> 00:03:03,642
உன்னுடையதை விட நல்லா இருக்கு.

31
00:03:05,060 --> 00:03:07,271
அடடா, பனி பொழிகிறது.

32
00:03:07,354 --> 00:03:09,314
-ஆமா.
-பனி பொழிகிறது.

33
00:03:09,940 --> 00:03:16,029
நேற்றிரவு இரவு ஒன்பது மணி வரை
எனது முன்வாசலில் அமர்ந்திருந்தேன்.

34
00:03:16,113 --> 00:03:18,198
இன்றோ, பனி பொழிகிறது.

35
00:03:18,907 --> 00:03:20,784
இலையுதிர் காலத்து ஜெர்சியில்
தட்பவெப்பம் இதுதான்.

36
00:03:20,868 --> 00:03:22,119
எப்படியும், முடிவு தானே.

37
00:03:22,202 --> 00:03:24,371
-எட்டு பாருக்கு ஒன்றா?
-ஆமா.

38
00:03:24,454 --> 00:03:27,916
அப்புறம் ரெண்டு பாருக்கு ஆறு,
ரெண்டில் ஒன்று, ரெண்டில் நாலு.

39
00:04:01,867 --> 00:04:03,118
சரி, முயற்சி செய்யுங்க.

40
00:04:03,202 --> 00:04:07,456
ஒன்று, இரண்டு.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.

41
00:04:09,166 --> 00:04:10,334
பாதக் கருவியை இப்போதைக்கு அடிக்காதே.

42
00:04:14,630 --> 00:04:16,964
இங்கே மிக நீளமாக
நாம் போவதா நினைக்கிறேன், ராய்.

43
00:04:17,048 --> 00:04:21,220
நான் நினைப்பது, ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு.
ஒரு கார்ட்.

44
00:04:21,928 --> 00:04:24,556
ராய், நீ ஈ மைனர் ரொம்ப சீக்கிரமா வாசிக்கற.

45
00:04:24,640 --> 00:04:26,433
-அப்படித்தான் இருக்கு.
-இல்ல...

46
00:04:26,517 --> 00:04:27,351
இல்ல...

47
00:04:27,434 --> 00:04:32,189
ஆமா, அது...
எட்டு பாருக்கு ஒன்னுன்னு இருக்கு.

48
00:04:32,272 --> 00:04:35,275
ஈ ஸ்ட்ரீட் பேண்ட்
சரியாக டியூன் செய்யப்பட்ட

49
00:04:35,359 --> 00:04:37,569
வளைந்து கொடுக்கக்கூடிய, ஆற்றலுடைய கருவி.

50
00:04:37,653 --> 00:04:39,154
ஒன்னு, ரெண்டு, மூனு. ஒரு கார்ட்.

51
00:04:41,949 --> 00:04:45,869
அவங்க வண்ணத்துப்பூச்சி போல பறக்கலாம்,
தேனியைப் போலவும் கொட்டலாம்.

52
00:04:46,620 --> 00:04:48,288
நாங்க பல ஆண்டுகளாக சேர்ந்து வாசிப்பதால்

53
00:04:48,372 --> 00:04:52,209
ஒருவருக்கொருவர் இசைவாக
ஸ்டூடியோவில் செயல்திறன் அதிகமாக

54
00:04:52,292 --> 00:04:55,671
ஒரு நல்ல பதப்பட்ட ரேசிங் இன்ஜின் போல
இருக்கோம்.

55
00:04:58,799 --> 00:04:59,842
பாதக்கருவி.

56
00:04:59,925 --> 00:05:05,138
45 ஆண்டுகளாக கட்டப்பட்ட குழு,
பல தசாப்தங்களாக பதப்பட்டு வருகிறோம்.

57
00:05:05,222 --> 00:05:09,268
அதனால், உங்களிடம் வந்து சேரும் போது
வலிமையுடன் வாசிக்க முடிகிறது.

58
00:05:19,570 --> 00:05:20,696
இரு, இரு, இரு.

59
00:05:20,779 --> 00:05:24,324
தொடக்க பல்லவி மட்டுமே தொடக்கத்தில் வரும்.

60
00:05:24,408 --> 00:05:27,452
மறுபடி அது வராது.
அப்புறமா பாடல் மட்டும் தான்.

61
00:05:27,536 --> 00:05:29,705
எங்களின் பார்வையாளர்களுக்கு
நாங்கள் சேவை செய்கிறோம்.

62
00:05:29,788 --> 00:05:32,833
சம்பளம் நல்லாருக்கு. ஆனாலும், உங்களால்தான்
இந்நிலையில் இருக்கோம்.

63
00:05:32,916 --> 00:05:34,626
அது சிறப்பான செய்தி.

64
00:05:35,335 --> 00:05:37,546
இப்போ,
நாம் ஒன்றை முயற்சிக்கலாம்.

65
00:05:41,049 --> 00:05:44,595
எங்களின் அர்ப்பணிப்புதான்
எங்களின் நோக்கத்தை கடினமாக்கி,

66
00:05:44,678 --> 00:05:46,638
செய் அல்லது செத்துமடி எனும்
உணர்வை உண்டாக்குகிறது.

67
00:05:46,722 --> 00:05:49,641
தொடக்க வரிகள் அதிகம் தான்.
ஆனா பாட்டுக்கு தடையா இருக்கா என தெரியல.

68
00:05:49,725 --> 00:05:55,189
ஈ ஸ்ட்ரீட் குழு என்பது வேலையல்ல.
அது தொழில், ஒரு சேவைக்கான அழைப்பு

69
00:05:55,272 --> 00:05:58,984
அது உங்களின் வாழ்க்கையில்
முக்கியமானதில் ஒன்று,

70
00:05:59,067 --> 00:06:01,987
அப்புறம்,
இது ராக் அண்ட் ரோல்தானே.

71
00:06:02,070 --> 00:06:04,656
சரிதான், ஈ ஸ்ட்ரீட் மக்களே!
நாம் இதை செய்யலாம்.

72
00:06:22,466 --> 00:06:26,720
இவர்கள் என் நண்பர்கள்.
என்னோடு வேலை செய்யும் ஆடவர், மகளிர்:

73
00:06:27,554 --> 00:06:29,181
ஸ்டீவ் வான் ஸாண்ட்...

74
00:06:30,390 --> 00:06:31,725
மேக்ஸ் வெய்ன்பேர்க்...

75
00:06:33,185 --> 00:06:34,478
ராய் பிட்டன்...

76
00:06:35,479 --> 00:06:36,605
கேரி டாலெண்ட்...

77
00:06:38,023 --> 00:06:39,358
பேட்டி ஷியால்பா...

78
00:06:40,359 --> 00:06:41,485
நில்ஸ் லோஃப்க்ரேன்...

79
00:06:43,153 --> 00:06:44,363
சார்லி ஜியார்டோனோ...

80
00:06:45,906 --> 00:06:47,157
சூசி டைரல்...

81
00:06:48,450 --> 00:06:50,202
ஜேக் க்ளெமான்ஸ்.

82
00:06:50,285 --> 00:06:53,038
மற்றும் இன்று வராத இருவர்...

83
00:06:54,164 --> 00:06:57,876
டேனி பெடரிசி மற்றும்
கிளாரென்ஸ் க்ளெமான்ஸ்.

84
00:06:59,127 --> 00:07:00,921
இது தான் ஈ ஸ்ட்ரீட் பேண்ட்.

85
00:11:11,380 --> 00:11:13,257
கேட்க நல்லாயிருக்கு.
உண்மையா நல்லாயிருக்கு.

86
00:11:13,757 --> 00:11:15,050
-மீண்டும் கேட்போமா?
-ஆம்.

87
00:11:15,133 --> 00:11:17,553
ஒன்று, இரண்டு,
மூன்று, நான்கு.

88
00:11:19,179 --> 00:11:21,932
ராய், இசைப்பெட்டி ஒலியை
கொஞ்சம் அதிகமாக்குப்பா.

89
00:11:22,015 --> 00:11:23,392
ஈ ஸ்ட்ரீட், ஈ ஸ்ட்ரீட், ஈ ஸ்ட்ரீட்!

90
00:11:23,475 --> 00:11:25,143
ஒலி கூடுதலா வைக்கட்டுமா?

91
00:11:25,227 --> 00:11:26,603
-ஜாஸ்தி வேணாம்.
-சரி.

92
00:11:26,687 --> 00:11:27,980
ரொம்ப கொஞ்சமாகவும் வேணாம்.

93
00:11:30,107 --> 00:11:31,817
அட நாம ஜாலியா இருக்கோம், இல்லியா...

94
00:11:32,442 --> 00:11:34,194
இந்த கடையில் சர்வர் இல்லியாப்பா?

95
00:11:34,278 --> 00:11:35,195
இல்ல.

96
00:11:35,279 --> 00:11:37,489
நாம் பீட்டல்ஸ் போன்ற கால அட்டவனைக்கு
நாம் திரும்பணும்.

97
00:11:39,157 --> 00:11:41,743
ஒரு பாட்டுக்கு மூன்று மணி, அவ்வளவு தான்.
அதான் பீட்டல்ஸ் செய்த கால நிர்ணயம்.

98
00:11:42,536 --> 00:11:43,829
அது நல்ல முடிவு.

99
00:11:44,913 --> 00:11:47,958
சனியும், ஞாயிறும் கூட வேலை செய்தால்
ரெண்டு ஆல்பம் முடிக்கலாம்.

100
00:11:55,883 --> 00:11:57,217
சரி, இருப்பா.

101
00:11:57,301 --> 00:12:01,263
ஏதோ காரணத்தால் என் கிடார் கதருது.
அதை என்னால் கட்டுப்படுத்த முடியல.

102
00:12:02,806 --> 00:12:06,018
நேற்றை விட 30 மடங்கு அதிக ஒலி ஒலிக்கிறது.

103
00:12:07,102 --> 00:12:08,770
-ஸ்ருதி சரியா வரல.
-சரி, இருங்கப்பா.

104
00:12:08,854 --> 00:12:09,855
கேரிக்கு பிரச்சனை இருக்கு.

105
00:12:09,938 --> 00:12:12,774
சரி, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து
அதில் வேலை செய்யலாம்.

106
00:12:13,317 --> 00:12:15,444
இன்று கொஞ்சம் ஸ்ருதி சரியாக வரவில்லை.

107
00:12:16,778 --> 00:12:19,198
-அதை தள்ளி வச்சிடுங்க.
-ஆம்.

108
00:12:19,281 --> 00:12:21,116
அவரோடு பாடுவது எனக்கு பிடிசசிருக்கு.

109
00:12:21,200 --> 00:12:23,785
அப்புறம், தனியா பாடுவாரா,
அதன்பின் அவரைவிட அதிக ஸ்தாயியில் பாடுவேன்.

110
00:12:24,620 --> 00:12:26,705
அது என்ன?
அந்த பல்லவி இசையை மீண்டும் வாசிக்கறியா

111
00:12:26,788 --> 00:12:30,292
ப்ரூஸ் பாடும் போது இருக்கும்
இன்னிசையை கேட்கணும்...

112
00:12:32,419 --> 00:12:35,464
இது என் ஒன்றுவிட்ட அண்ணன், பிராங்க்.
இதை நிச்சயம் பதிவு செய்யறோமா என பாருங்க.

113
00:12:35,547 --> 00:12:36,798
வணக்கம் மக்களே, எப்படி இருக்கீங்க?

114
00:12:36,882 --> 00:12:42,304
ஜெர்சி ஷோரிலேயே ஜிட்டர்பக் நடனத்தில்
இவர் முதன்மையானவர்,

115
00:12:42,387 --> 00:12:46,016
இவர் தான் எனக்கு முதன்முதலில்
கிடார் வாசிக்க கற்றுத் தந்தார்.

116
00:12:46,099 --> 00:12:47,184
அடடா.

117
00:12:50,270 --> 00:12:52,314
இவை எல்லாம் என் அசல் கிடார்கள்.

118
00:12:52,397 --> 00:12:54,107
எனது கெண்ட், முதல் கிடார்.

119
00:12:54,191 --> 00:12:56,902
உன்னிடம்
ஒரு சியர்ஸ் அண்ட் ரோபக் இருந்தது தானே?

120
00:12:57,945 --> 00:13:00,322
ஜார்ஜ் தீய்ஸ்
பெட்டியில் இதில் ஒன்றை வச்சிருந்தார்.

121
00:13:00,405 --> 00:13:01,823
ஆமா. ஒரு...

122
00:13:01,907 --> 00:13:04,660
ஜார்ஜ் தீய்ஸ்
கிடாரில் ஸ்பீக்கரோடு ஒன்றை வச்சிருந்தார்.

123
00:13:04,743 --> 00:13:06,286
ஓ, கிடாரிலா?

124
00:13:06,370 --> 00:13:08,705
பெட்டியில் ஸ்பீக்கர் வச்ச
ஒரு கிடாரும் நம்மிடம் இருந்ததே.

125
00:13:08,789 --> 00:13:10,999
அதான்பா, அந்த பழைய சியர்ஸ் அன்ட் ரோபக்...

126
00:13:11,083 --> 00:13:12,292
ஓ. சியர்ஸ்,

127
00:13:14,169 --> 00:13:16,213
ரெண்டுமே மோசமா இருக்கும்.
ஒரு கிடாரில் வந்து...

128
00:13:16,296 --> 00:13:18,298
பார், ஸ்பீக்கர் இங்கே இருக்கு.

129
00:13:18,382 --> 00:13:19,633
மோசமா ஒலிக்கும்.

130
00:13:19,716 --> 00:13:21,176
நாம எல்லாருமே அதில் ஒன்றை வைத்திருந்தோமே.

131
00:13:50,664 --> 00:13:52,457
ஒரு வெப்பமான ஜூலை நாளில்,

132
00:13:52,541 --> 00:13:57,171
எனது பழைய குழுவான தி கேஸ்டில்ஸின்
உறுப்பினரான ஜார்ஜ் தீய்ஸின்

133
00:13:57,254 --> 00:13:58,589
படுக்கை அருகே நின்றிருந்தேன்.

134
00:13:59,131 --> 00:14:04,219
ஜார்ஜ், 68 வயதில் நுரையீரல் புற்றுநோயால்
சாகக் கிடந்தார்.

135
00:14:04,303 --> 00:14:05,512
"தி கேஸ்டில்ஸ்"

136
00:14:05,596 --> 00:14:08,223
என் சகோதரி ஜின்னியை
காதலித்த மனிதன் ஜார்ஜ்.

137
00:14:08,307 --> 00:14:11,643
என் தெற்குத் தெரு வீட்டில் இருந்து
ஒருநாள் என்னை அழைத்தார்,

138
00:14:11,727 --> 00:14:15,606
அன்றிருந்து தான் என் வாழ்நாளிலேயே
சாகச பயணங்களிலேயே சிறப்பானதை தொடங்கினேன்.

139
00:14:16,064 --> 00:14:20,527
என் முதல் உண்மையான இசைக்குழுவான
தி கேஸ்டில்ஸில் இணைந்தேன்.

140
00:14:21,653 --> 00:14:26,783
தி கேஸ்டில்ஸ் மூன்று வரலாற்று சிறப்புமிக்க
ஆண்டுகளுக்கு,

141
00:14:27,367 --> 00:14:30,996
1965ல் இருந்து 1968 வரை, இருந்தது.

142
00:14:31,663 --> 00:14:34,166
60களில் அது நித்தியம் போல் தோணும்,

143
00:14:34,249 --> 00:14:38,378
வரலாற்று, கலாசார நிகழ்வுகளுக்கு
இந்த மூன்று ஆண்டுகள் சிறப்பானவை.

144
00:14:39,171 --> 00:14:43,509
புதிய ராக் அன்ட் ரோல் குழு அந்நாட்களில்
"நெருப்பில் ஊற்றப்பட்ட நெய்" யைப் போன்றது.

145
00:14:44,676 --> 00:14:47,262
அது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

146
00:14:48,889 --> 00:14:53,268
ஆனால் சில விடயங்கள் உங்கள் உள்ளத்தில்
பதிந்துவிட்டு, அழியாமல் இருக்கும்.

147
00:14:53,894 --> 00:14:55,771
அது ஆயுள் தண்டனையைப் போல.

148
00:15:06,490 --> 00:15:08,075
ஜார்ஜின் மரணத்தால்,

149
00:15:08,158 --> 00:15:13,539
நான் தான் வலிமைமிகு கேஸ்டில்ஸின்
உயிரோடு இருக்கும் கடைசி ஆள்...

150
00:15:14,581 --> 00:15:17,668
உயிரோடு இருக்கும் கடைசி ஆள்.

151
00:15:19,753 --> 00:15:23,131
அதைப்பற்றி... நிறைய நாள் யோசித்தேன்.

152
00:15:23,215 --> 00:15:28,887
அந்த நினைவுகளின் தியானங்களே
நான் எழுதிய இந்த பாடல்கள்

153
00:15:28,971 --> 00:15:30,389
லெட்டர் டு யூ விற்காக.

154
00:15:36,103 --> 00:15:39,189
ம்யூசிக் ஜஸ்ட் கம்ஸ்.

155
00:15:39,857 --> 00:15:44,361
சில நேரங்களில்... சில நேரங்களில் மட்டுமே,

156
00:15:44,444 --> 00:15:46,154
இந்த மாதிரித்தான் நடக்கும்.

157
00:15:47,281 --> 00:15:50,409
இந்த இசை, இந்த பாடல்கள்,

158
00:15:51,285 --> 00:15:57,916
அவை எனக்கு நினைவூட்டியது ஃப்ரீஹோல்ட்
சகோதரர்களுக்கு திருப்ப வேண்டிய கடன்.

159
00:15:59,459 --> 00:16:05,048
அதனால், இதை நான் அர்பணிக்கிறேன்
டயானா மற்றும் ஜார்ஜ் தீய்ஸ்

160
00:16:05,132 --> 00:16:09,219
பார்ட் ஹேய்ன்ஸ், பிராங்க் மர்சியோடி,
கர்ட் ப்ளூர்,

161
00:16:09,303 --> 00:16:13,974
பால் பாப்கின், பாப் அல்ஃபானோ,
மற்றும் வின்னி மானியெல்லோ இவர்களுக்கு.

162
00:16:14,057 --> 00:16:18,979
என் நண்பர்கள், குழுவினர் மற்றும் என்னோடு

163
00:16:19,062 --> 00:16:25,110
எனது முதல் ராக்கின் பள்ளியான
தி கேஸ்டில்ஸில் கற்றவர்கள்.

164
00:16:25,194 --> 00:16:27,529
இது, "லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங்."

165
00:20:30,689 --> 00:20:32,900
அந்த பதிவு நல்லா இருந்ததென நினைக்கிறேன்.
ஆமா நல்லா இருந்தது.

166
00:20:34,026 --> 00:20:36,278
என்ன சொல்ற சகோ? நல்லா இருந்ததா?

167
00:20:36,361 --> 00:20:38,530
-நன்றி, நன்றி!
-இருமடங்கு நல்லா இருந்தது.

168
00:20:38,614 --> 00:20:43,035
ஜானி பாய் லாண்டா எனும் அரசன்.

169
00:20:44,244 --> 00:20:45,537
உயிரோடு, நேராக பார்க்கிறீர்கள்.

170
00:20:46,872 --> 00:20:50,834
கனவாங்களே, மகளிரே
இது இன்று நாம் சாலையில் செல்வதற்கு.

171
00:20:50,918 --> 00:20:52,002
ஆம்.

172
00:20:53,295 --> 00:20:55,589
-சான் சீரோ!
-சான் சீரோ!

173
00:20:55,672 --> 00:20:58,842
-முதல் நிகழச்சி சான் சீரோல.
-ஓ, சான் சீரோ. இதோ பிடி.

174
00:20:58,926 --> 00:21:02,054
-நாலு இரவுகளில் முதலாவது.
-நாலு இரவுகளில் முதல்.

175
00:21:02,137 --> 00:21:03,430
-ஓ, எனக்கது பிடிச்சிருக்கு.
-சரியா?

176
00:21:03,514 --> 00:21:05,974
சான் சீரோவில் நான்கு இரவுகள்.

177
00:21:06,058 --> 00:21:07,726
-அது இத்தாலியின் மக்கள் தொகையில் பாதி.
-ஏன் கூடாது?

178
00:21:09,102 --> 00:21:11,897
-அது முழு மக்கள் தொகை...
-அது வெறும் மதியக் காட்சி தான்.

179
00:21:13,106 --> 00:21:14,983
-நேரமாச்சு. தயாராகலாம்.
-சரி.

180
00:21:15,067 --> 00:21:18,153
ஒருமுறை நிறுத்திய போது அவங்க
"பிராமிஸ்ட் லேண்ட்" பாடியது நினைவிருக்கு.

181
00:21:18,237 --> 00:21:20,531
அதனால் நீங்கள் அடுத்த பாடலை
துவக்க பிரச்சனை இருந்தது.

182
00:21:20,614 --> 00:21:24,618
ஏன்னா, அப்படி அவர்கள் ஒன்றாகப் பாடும்போது
யாருக்கு நிறுத்த மனசு வரும்?

183
00:21:24,701 --> 00:21:26,203
நேப்பில்ஸில் வாசித்தோம்.

184
00:21:26,286 --> 00:21:29,957
அங்கே ரோஸலிடாவின் பல்லவியை
அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.

185
00:21:30,040 --> 00:21:34,127
அது எப்படின்னா...
மனசுல அதுவே பதிஞ்சிடும்.

186
00:21:34,211 --> 00:21:37,047
இல்லை... வெளிப்படையானவை இல்லை.

187
00:21:37,130 --> 00:21:40,884
அந்த பல்லவியின் சில வரிகளை மட்டும்
மக்கள் பாடினார்கள்.

188
00:21:40,968 --> 00:21:45,097
அங்கிருக்கும் எல்லா மக்களும்
நம்ப முடியாத அளவு இசை ஆர்வமிக்கவர்கள்.

189
00:21:45,681 --> 00:21:49,059
அங்கு தான் அம்மா, டோரா மற்றும் ஏடா...

190
00:21:49,142 --> 00:21:52,145
இங்கே நாம் அமர்ந்திருக்க
காரணமானவர்கள் அவர்களே.

191
00:21:52,229 --> 00:21:53,772
ஆம்.

192
00:21:53,856 --> 00:21:55,607
பிராங்க், நீங்க கிடார்
வாசித்திருக்கிறீர்களா?

193
00:21:55,691 --> 00:21:57,860
ம், கொஞ்சமா வாசித்திருக்கிறேன். அதிகமல்ல.
மறுபடி வாசிக்க ஆரம்பிக்கணும்.

194
00:21:57,943 --> 00:22:00,529
அவர்... புதிய கிடார் வாங்கியிருக்கார்.

195
00:22:00,612 --> 00:22:04,283
ஈ ஸ்ட்ரீட் பேண்டில் அவருக்கு ஒரு நாள்
மேடையில் இடம் கிடைக்கும்.

196
00:22:05,242 --> 00:22:07,035
உங்க இடத்தில் நான் இருந்தால்,
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்குவேன்.

197
00:22:07,119 --> 00:22:08,161
எனக்கு தெரியும்.

198
00:22:22,801 --> 00:22:28,849
எனக்கு முதலில் இருந்தே
பாப் இசை ஆழ்ந்த தியானத்தைப் போலத்தான்.

199
00:22:29,725 --> 00:22:33,270
நம்மெல்லாரும் பிரார்த்தனை செய்ய
அவரவர் வழி உண்டு.

200
00:22:34,188 --> 00:22:40,068
நான் என் பிரார்த்தனைகளை மூன்று நிமிட
45 ஆர்பிஎம் இசைதட்டிற்குள் குறுக்கிட்டேன்.

201
00:22:41,028 --> 00:22:45,824
தூய பாப் இசையின் வலிமை,
மெல்லிசையின் எளிய தன்மை.

202
00:22:46,909 --> 00:22:51,246
சில நிமிடங்களில் குணாதிசயங்களை
வெளிக்கொணரக்கூடியது.

203
00:22:52,080 --> 00:22:57,461
180 விநாடிகளோ அதற்கு கீழாகவோ வாழ்க்கை.

204
00:22:58,378 --> 00:23:02,341
அது சரியாக பதிவானால்,
பிரார்த்தனையின் வலிமை அதில் இருக்கும்.

205
00:26:39,600 --> 00:26:41,143
அருமையா செய்தீங்க, ஆண்களே.

206
00:26:42,436 --> 00:26:43,478
ஈ.

207
00:26:44,271 --> 00:26:45,355
ஏ.

208
00:26:46,231 --> 00:26:48,150
சி - ஷார்ப் மைனர்

209
00:26:48,233 --> 00:26:49,234
ஜி-ஃப்ளாட்

210
00:26:49,318 --> 00:26:52,279
சாக்ஸ் கருவியின் தனி ஆவர்த்தனத்திற்குப்
பின்னர் உடனே நாம்...

211
00:26:52,821 --> 00:26:55,532
நீ பாடும் அந்த பாடல் வரியை
பாடணும்னு நினைக்கிறேன்.

212
00:26:55,616 --> 00:26:58,410
அதில் நமக்கு... அதில் நமக்கு...
சிறப்பானதாக செய்யலாம்.

213
00:26:58,493 --> 00:27:01,371
நாம் பேசுவது
"லெட்டர் டு யூ" வின் தொடக்க இசையா?

214
00:27:03,832 --> 00:27:06,084
-அப்படித்தானே?
-இன்னும் சிறுசா செய்யலாம்.

215
00:27:06,168 --> 00:27:08,837
கொஞ்சமா ஆரம்பித்து அப்படியே உச்சஸ்தாயியை
தொடணும். நான் சொல்றது புரியுதா?

216
00:27:12,132 --> 00:27:14,760
உச்சத்தை தொடணும்...
ஏனென்றால் அவர் கடினமாக பாடுகிறார்.

217
00:27:14,843 --> 00:27:16,720
-ஜால்ராவிலா?
-ஆமா, ஆமா.

218
00:27:21,934 --> 00:27:23,560
அப்படி போடு, போடு.

219
00:27:43,830 --> 00:27:49,670
ஈ ஸ்ட்ரீட் பேண்ட் என்னை
கனவுகாண, யோசிக்க, நல்லா எழுத வைக்கிறாங்க.

220
00:27:50,462 --> 00:27:53,006
நான் என் நண்பர்களுடன் இருக்கையில்,

221
00:27:53,090 --> 00:27:59,304
என் மனதில் ஒரு பகுதியை அவர்களுக்கென
ஒதுக்கிவிடுவேன்,

222
00:28:00,055 --> 00:28:01,890
மனதை விடுதலையாக்க,

223
00:28:01,974 --> 00:28:06,395
பின்னர் என் ஆயிரங்கனவுகள் கொண்ட
வீட்டில் குடியிருப்பேன்.

224
00:28:07,396 --> 00:28:10,566
விீட்டில் என்ன நடக்கிறதோ அது எனக்கு
மிக முக்கியம்.

225
00:28:11,859 --> 00:28:14,361
நம்மை இறைவன் பழுதற்றவர்களாக படைக்கவில்லை,

226
00:28:15,153 --> 00:28:19,324
ஆனால் இங்கே எனது நல்ல தேவதைகளின்
குரல்கொண்டு பேச முயற்சிக்கிறேன்.

227
00:28:20,576 --> 00:28:25,664
நமக்கு அதற்கான கருவிகளும், இடமும்
ஆன்மாவில் தரப்பட்டிருக்கின்றன,

228
00:28:26,248 --> 00:28:28,625
அதை நாம் சந்தித்து,
அதன்படி நடக்க வேண்டும்.

229
00:28:30,085 --> 00:28:31,712
அதற்கு பயிற்சி வேண்டும்.

230
00:28:33,213 --> 00:28:39,928
காதல், விடுதலை, சகோதரத்துவம் என்ற
மூல உணர்வுகளால் கட்டப்படும் பயிற்சி,

231
00:28:40,512 --> 00:28:45,893
நல்வாழ்க்கை மற்றும் மனித சமுதாயத்தின்
மூலங்களாக கருதப்படும்

232
00:28:45,976 --> 00:28:48,020
புராதான எண்ணங்கள்.

233
00:28:48,604 --> 00:28:52,524
வீட்டில் என்ன நடக்கிறதோ அது முக்கியம்.

234
00:28:54,067 --> 00:28:57,029
அதனால், சகோதர சகோதரிகளே,
நீங்கள் எங்கே இருந்தாலும்...

235
00:28:59,489 --> 00:29:01,325
இந்த வீட்டை ஒளியேற்றுவோம் வாருங்கள்.

236
00:33:31,303 --> 00:33:33,805
-நல்லா இருந்தது.
-அதை திரும்ப கேட்கணுமா?

237
00:33:33,889 --> 00:33:35,516
ஆமா, திரும்ப கேட்போம்.

238
00:33:37,601 --> 00:33:41,104
என்ன அருமையான குழு இசை இசைக்கிறோம் நாம்!

239
00:33:41,188 --> 00:33:42,272
கேட்க அருமையா இருக்கு.

240
00:33:42,356 --> 00:33:44,233
-நன்றி.
-இடைவெளி இருந்ததாகவே தோணல.

241
00:33:44,316 --> 00:33:46,610
விட்டு போனோம், ஆனா நல்லா ஆவதற்காக போனோம்.
பின்னர் திரும்ப வந்துவிட்டோம்.

242
00:33:46,693 --> 00:33:47,819
அது சரி.

243
00:33:49,821 --> 00:33:53,534
பேராசிரியரே, நீங்கள் பிறந்த நோக்கத்தை
நிறைவேற்றுங்கள்.

244
00:33:53,617 --> 00:33:55,285
களாக்கன்ஸ்பீல் வாசியுங்கள்.

245
00:33:58,121 --> 00:33:59,164
அந்த களாக்கன்ஸ்பீல் வாசியுங்கள்.

246
00:33:59,248 --> 00:34:01,416
ஹெட்போன் எனக்கு கிடைத்தவுடன்
அதை நிச்சயம் செய்வேன்.

247
00:34:02,209 --> 00:34:04,837
டான் பெடரிசியின் நினைவாக.

248
00:34:06,839 --> 00:34:08,297
டான் பெடரிசி.

249
00:34:09,882 --> 00:34:11,385
பேய் எங்களை பயமுறுத்துகிறது.

250
00:34:13,303 --> 00:34:16,723
நாளை 50 ஆண்டு பழைய பாடல்களை
பதிவு செய்யப்போறோம்.

251
00:34:17,516 --> 00:34:21,687
ம், ஜான் ஹாமண்ட் டெமோவிற்காக
அவற்றை நேரடியாக பதிவு செய்தேன்.

252
00:34:21,770 --> 00:34:24,022
க்ரீட்டிங்ஸ் ஃப்ரம் ஆஸ்பரி பார்க்கிற்கு
முந்தைய நாட்கள் அது.

253
00:34:24,106 --> 00:34:27,734
-காட்டுத்தன கவிதைக்கு ஆயத்தமாகு.
-ஆம்.

254
00:34:27,818 --> 00:34:30,112
-எனக்கு ஒரு யோசனை ப்ரூஸ்.
-சொல்லுப்பா.

255
00:34:30,195 --> 00:34:31,905
ஆக, கோரஸில் நீங்க இதை பாடும்போது...

256
00:34:33,782 --> 00:34:36,326
...அவர்கள் நிறுத்தி,
நீங்க தனியா வாசித்தால் என்ன...

257
00:34:40,121 --> 00:34:42,123
...பின்னர் அவர்கள் மீண்டும் பாடலாம்,
நீங்க மட்டும் தான் அந்த இடம் பாடுவீங்க.

258
00:34:52,009 --> 00:34:54,178
-அதான். அதை செய்யலாம்.
-அதேதான்.

259
00:41:35,704 --> 00:41:38,498
கோடையில் அங்கே வெளியில் இருந்த மண்டபத்தில்
வாசிப்பது மிக அழகாக இருக்கும்.

260
00:41:38,582 --> 00:41:40,209
லெ டீன்டெவோ கன்ட்ரி க்ளப்
இன்றிரவு தி கேஸ்டில்ஸ்

261
00:41:40,292 --> 00:41:43,837
அது தான் பதின்வயதினருக்கான
முதலில் துவங்கிய இரவு கிளப்.

262
00:41:43,921 --> 00:41:45,881
-அதை யார் கேட்டிருப்பா?
-நம்பமுடியல.

263
00:41:45,964 --> 00:41:48,717
அது பதின்வயதினரின்
கண்டரி கிளப் போன்றது.

264
00:41:48,800 --> 00:41:52,596
நடுத்தட்டு, மேல்தட்டு பதின்வயதினர்
நிறைய வருவார்கள் தெரியுமா?

265
00:41:52,679 --> 00:41:53,847
அங்கே கல்லூரி மாணவர்கள் இருந்தனர்.

266
00:41:53,931 --> 00:41:57,893
அதனால், அங்கே வாசிக்கக் கிடைத்தாலே

267
00:41:57,976 --> 00:41:59,895
அது... அது மிகப்பெரிய விஷயம்.

268
00:41:59,978 --> 00:42:02,397
ஃப்ரீஹோல்ட் பேண்ட் டீன்டேவோவில்
வாசிக்கறாங்களா?

269
00:42:03,649 --> 00:42:06,693
நீங்க நல்ல வாசித்தீர்கள்.
அருமையான கலைஞர்.

270
00:42:06,777 --> 00:42:09,947
அதோடு ஆறு வெவ்வேறு பல்வகை கிளப்புகளிலும்

271
00:42:10,030 --> 00:42:11,114
அதே வார இறுதியில் பாடக்கிடைத்தது,

272
00:42:11,198 --> 00:42:14,493
-விஎப்டபிள்யூ கூடங்களும்...
-கடற்கரை கிளப்புகளும்.

273
00:42:14,576 --> 00:42:18,956
...யூனியன் ஹால்களும், லீஜன் ஹால்களும்,
கத்தோலிக்க இளைஞர் நிறுவனங்களிலும்...

274
00:42:19,039 --> 00:42:23,794
-இவைகளே ராக் பேண்ட்களின் மேடைகள்.
-சமூக நடனங்கள், சகோதரத்துவ நடனங்கள்.

275
00:42:32,302 --> 00:42:33,637
"கோஸ்ட்ஸ்."

276
00:42:34,304 --> 00:42:36,974
ஒரு ராக் குழு என்பது சமூக கட்டமைப்பு,

277
00:42:37,057 --> 00:42:39,893
அதாவது எங்களின் தனித்துவங்களின்
கூட்டமைப்பைவிட

278
00:42:39,977 --> 00:42:43,647
நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால்
வலிமை அதிகம் என்ற அடிப்படையில்,

279
00:42:44,398 --> 00:42:49,194
தனியாக சாதிக்க முடியாததை
அதனால் சாதிக்கலாம்,

280
00:42:49,278 --> 00:42:52,990
ஒன்று சேர்ந்து, சாதித்து முன்னேறலாம்.

281
00:42:53,740 --> 00:42:58,203
எங்கள் குழுவில், பாடல்களும், தனித்துவ
எண்ணமும் என்னுடையதாக இருக்கையில்,

282
00:42:58,287 --> 00:43:01,456
அந்த எண்ணத்தை உருவம்கொடுத்து
உலகிற்கு அளித்து

283
00:43:01,540 --> 00:43:07,129
நிஜமாக்குவது எங்கள் அனைவரின் பொறுப்பு.

284
00:43:08,380 --> 00:43:10,340
நாங்கள் ஒரு இசைக்குழு.

285
00:43:10,424 --> 00:43:16,722
என் இசைக்குழுவோடு வேலை செய்வதில் வரும்
மகிழ்ச்சியை விவரிப்பது மிகக்கடினம்.

286
00:43:16,805 --> 00:43:19,558
அறையில் நிறைய யோசனைகள் வரும்.

287
00:43:19,641 --> 00:43:25,147
மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவர்.
அபஸ்வரங்களும் நீண்ட பாடலகளும் இருக்கும்.

288
00:43:25,230 --> 00:43:28,525
பல நேரங்களில் குழப்பமே ஆளுகை செய்யும்.

289
00:43:28,609 --> 00:43:29,776
அப்புறம் திடீரென...

290
00:43:31,028 --> 00:43:32,654
வெடிகுண்டு வெடிக்கும்.

291
00:43:33,322 --> 00:43:38,952
"கோஸ்ட்ஸ்" ஒரு குழுவில் இருக்கும் அழகைப்
பற்றியது,

292
00:43:39,703 --> 00:43:45,083
காலத்தாலும், நோயாலும் ஒருவரை ஒருவர்
இழப்பதைப் பற்றியது.

293
00:43:46,585 --> 00:43:50,756
"கோஸ்ட்ஸ்" இசையின் ஆன்மாவிடமே
பேச முயற்சிக்கிறது...

294
00:43:52,090 --> 00:43:58,305
நம்மில் யாருமே சொந்தம் கொண்டாட முடியாத
ஆனாலும் கண்டுபிடித்து பகிரக்கூடியது.

295
00:43:59,348 --> 00:44:04,603
இங்கே ஈ ஸ்ட்ரீட் பேண்டில்
அது எங்கள் ஆன்மாவில் இருக்கிறது...

296
00:44:05,771 --> 00:44:06,980
இருதயத்தால் வலிமை கொள்கிறது.

297
00:44:49,439 --> 00:44:52,693
அந்த இடைவெளிக்கு முன்னர் கோரஸ்
தேவையில்லையென நினைக்கிறேன்.

298
00:44:52,776 --> 00:44:55,571
"கோஸ்ட்ஸ்" ஐ பாடி, இடைவெளி,
பின்னர் உச்சம் தொடலாமே.

299
00:44:55,654 --> 00:44:57,197
டிரம் ஓசை
அதிகமாவதை சொல்கிறாயா?

300
00:44:57,281 --> 00:44:59,199
-ஆம்.
-இந்த கோரஸை விடறீங்களா?

301
00:44:59,283 --> 00:45:01,076
பதினாறு பாரில் கோரஸ்,
பின்னர் டிரம்பீட் அதிமாகும்.

302
00:45:01,159 --> 00:45:03,412
-ஆக, ஏ, ஏபி, ஏபி, சி என வாசிக்கணும்.
-பி, சி.

303
00:45:03,495 --> 00:45:06,999
அது வரி.
பி-இல் கோஸ்ட்ஸ். சி-இல் கோரஸ்.

304
00:45:07,082 --> 00:45:08,667
ஆம், மீண்டும்.

305
00:45:08,750 --> 00:45:12,671
ஏ, ஒரு வரி,
பி-இல் கோஸ்ட், சி-இல் கோரஸ்.

306
00:45:12,754 --> 00:45:15,674
இன்னும் மூன்றாவது வரிக்கு முன்னர்
நாம் நிறுத்தியாக வேண்டும்.

307
00:45:15,757 --> 00:45:18,677
-இல்ல, நாம நிற்கணும்...
-மூன்றாம் வரிக்கு முன்னர்.

308
00:45:18,760 --> 00:45:21,346
-அந்த மூன்றாம் வரி...
-அந்த வரி மட்டும்,

309
00:45:21,430 --> 00:45:23,140
பின்னர் நிறுத்தி அங்கே முடியும்.

310
00:45:23,223 --> 00:45:25,809
இடைவெளிகளிலும் மூன்றாம் வரி இருக்கு தானே.

311
00:45:25,893 --> 00:45:28,562
யாருக்காவது எங்கே நிறுத்தனும்னு
தெரியணும்னா என்னை பாருங்க.

312
00:45:28,645 --> 00:45:30,314
நான் சைகை காட்டுவேன், சரியா?

313
00:45:30,939 --> 00:45:32,566
சைகை இல்லன்னா, நிறுத்தாதீங்க.

314
00:45:36,653 --> 00:45:37,779
ஆம்.

315
00:45:38,280 --> 00:45:39,740
அருமையா இருந்தது.

316
00:45:41,825 --> 00:45:43,327
அதோ, இப்போது.

317
00:45:45,829 --> 00:45:48,081
-ஆமா, அது எதிர்மறை.
-ஆம்.

318
00:45:48,707 --> 00:45:49,750
என்னை இங்கே கொண்டு செல்.

319
00:45:51,126 --> 00:45:52,211
சரி, முயற்சி செய்.

320
00:45:52,294 --> 00:45:54,505
சும்மா வச்சிக்கோ.
பின்னர் அதை வைத்து விளையாடலாம்.

321
00:46:18,153 --> 00:46:19,404
கைத்தட்டல்.

322
00:46:23,075 --> 00:46:26,078
கைத்தட்டல்களும் தானன்னனேயும் போடலாம்.

323
00:52:13,967 --> 00:52:15,636
அருமை! அருமை!

324
00:52:25,229 --> 00:52:27,856
1972 ஆம் ஆண்டில் வந்த பாடல்கள்...

325
00:52:29,525 --> 00:52:33,153
எனக்கு எப்பவுமே ரகசியங்களாகவே இருக்கின்றன.

326
00:52:33,237 --> 00:52:37,991
அக்காலத்தில் நான் எழுதிய விதம் அதுதான்.
நிறைய சொற்களிருக்கும்.

327
00:52:38,075 --> 00:52:40,035
கிளைவ் டேவிஸ் என்னிடம் ஒருமுறை சொன்னார்,

328
00:52:40,118 --> 00:52:44,581
ஜான் ஹாமண்டுடன் கொலம்பியா ரெகார்ட்ஸிற்காக
என்னை கையெழுத்திட வைத்தவர் அவர்தான்,

329
00:52:44,665 --> 00:52:49,586
"க்ரீட்டிங்ஸ் ஃப்ரம் ஆஸ்பரி பார்க்"
வெளியான பின்னர் என்னை அழைத்து

330
00:52:49,670 --> 00:52:53,632
அவரிடம் ஒருவர் அழைத்து சொன்னாராம்,
நான் ஜாக்கிரதையா இல்லாவிட்டால்

331
00:52:53,715 --> 00:52:57,553
முழு ஆங்கில மொழியையும்
பயன்படுத்தி முடித்துவிடுவேன் என்றாராம்.

332
00:52:58,554 --> 00:53:01,265
அப்படி சொன்னவர் பாப் டிலன் என்றார்.

333
00:53:01,348 --> 00:53:05,018
இப்போ, பாப், எனது குரு,
கூடப்பிறக்காத சகோதரன்,

334
00:53:05,102 --> 00:53:08,230
அதனால் தான் சொற்களை நான்
தீவிரமா எடுத்துக்கறேன்.

335
00:53:09,273 --> 00:53:15,863
ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம், என் மனதில்
இந்த பாடல்களுக்கென சிறந்த இடம் உள்ளது.

336
00:53:16,488 --> 00:53:20,284
"சாங் ஃபார் ஆர்பன்ஸ்" ஒருவருடைய பயத்தை

337
00:53:20,367 --> 00:53:22,911
சந்தேகங்களை,
காலங்களை மேற்கொள்வது பற்றியது.

338
00:53:22,995 --> 00:53:25,747
தங்களுக்கென ஒரு இடத்திற்காக
போராடுவதைப் பற்றியது.

339
00:53:25,831 --> 00:53:31,461
ஒரு சிறுவனாக, 1972ல் என்னைப்பற்றி நான்

340
00:53:31,545 --> 00:53:34,840
உயர்வாகவே நினைத்தேன்,
வளர்ந்துவரும் பாதுகாப்பின்மையிலும்.

341
00:53:36,091 --> 00:53:40,470
நான் ஒரு அனுபவமிக்க
கிடார் வாசிக்கும் இளைஞன்,

342
00:53:40,554 --> 00:53:43,307
அதனாலேயே செய்யவேண்டிய வேலை
எனக்கு இருப்பதாக உணர்ந்தேன்,

343
00:53:43,390 --> 00:53:47,311
விரட்டிட பலபேய்கள், மீட்டெடுக்க ஒரு உலகம்

344
00:53:47,394 --> 00:53:50,355
என் உலகம், அது எதுவாக இருந்தாலும்...

345
00:53:50,439 --> 00:53:56,945
அந்நேரத்தில் நான் உலகில் வாழ்வது
ஒரே காரணத்திற்கென உணர்ந்தேன்:

346
00:53:57,029 --> 00:54:02,326
என் விதியை சந்தித்து,
சண்டையிட்டு, வெற்றி பெறுவது.

347
00:54:02,409 --> 00:54:07,039
மேடையில் ஏறி வாழ்க்கைகளை மாற்றுவது,

348
00:54:07,706 --> 00:54:08,999
என்னால் முடிந்தால்.

349
00:54:09,082 --> 00:54:12,211
என் பதின்வயதில் அநாதை ஆனதால்
உணர்வுப்பூர்வமாக

350
00:54:12,294 --> 00:54:14,421
என்னுள் இருக்கும் கைவிடப்பட்ட உணர்வை
ஜெயிப்பேன்,

351
00:54:14,505 --> 00:54:19,176
எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்
கொண்டிருந்தேன், கொஞ்சம் உதவியுடன்,

352
00:54:19,259 --> 00:54:21,303
எனக்கென ஒரு இடத்தை.

353
00:54:22,638 --> 00:54:25,307
இப்போது குழுவின் கூட்டாட்சி என்பது
இப்போ என் பெயரிலேயே இருக்கிறது,

354
00:54:25,390 --> 00:54:30,270
அதற்கென பொறுப்பும் நம்பகத்தன்மையையும்
நானே ஏற்கிறேன்.

355
00:54:30,354 --> 00:54:32,105
இது முடிந்துவிடும்.

356
00:54:32,731 --> 00:54:39,112
ஏனென்றால், நான் இளைஞனாய், உறுதியாய்
வெற்றியை தேடினேன், அது தேவையாய் இருந்தது.

357
00:54:40,322 --> 00:54:41,740
22 வயது இளைஞனாக இருந்தேன்.

358
01:00:53,278 --> 01:00:56,823
ஸ்டூடியோவில் மற்றொரு அருமையான நாள்.

359
01:00:57,449 --> 01:00:59,993
வலிமைமிகு ஈ ஸ்ட்ரீட் பேண்டுக்கு
வாழ்த்துகள்.

360
01:01:00,077 --> 01:01:01,245
பாதி முடிச்சாச்சு.

361
01:01:01,995 --> 01:01:03,664
அதிகமென நினைக்கிறேன்.

362
01:01:08,293 --> 01:01:09,294
அருமை.

363
01:01:33,360 --> 01:01:36,738
பயணியர் இரயில்கள்,
சரக்கு இரயில்கள் இருந்தன,

364
01:01:37,197 --> 01:01:40,242
அவை ஃப்ரீஹோல்ட் வழியாக 50களில் வந்தன.

365
01:01:40,951 --> 01:01:43,954
நீண்ட கோடை மதியங்களில்,

366
01:01:44,037 --> 01:01:49,042
அவை வந்தால் அதில் நகர் நீளத்திற்கு
பயணிக்க காத்திருந்தோம்,

367
01:01:49,126 --> 01:01:53,589
அல்லது எங்கள் காசுகளை தண்டவாளத்தில் போட்டு

368
01:01:53,672 --> 01:01:56,592
அவை நசுங்கி சூடா
இருக்கும் போது எடுத்துக்கொள்வோம்.

369
01:01:58,552 --> 01:02:02,181
மரணத்தைப் போலவே அந்த ரயில்களும்
திடீரென வந்து போயின.

370
01:02:03,348 --> 01:02:06,310
பல ஐரிஷ், இத்தாலிய குடும்பத்தினர்
உள்ள சமூகம் ஆதலால்

371
01:02:06,393 --> 01:02:10,063
சிறுவயதிலேயே மரணம் எனக்கு சகஜமாகிவிட்டது.

372
01:02:10,856 --> 01:02:14,735
ஆறு அல்லது ஏழு வயதில் பெற்றோருடன்
செல்ல எதிர்பார்க்கப்படுவோம்

373
01:02:14,818 --> 01:02:19,156
பெற்றோரின் கைகளை பிடித்தபடி,
இறுதிச்சடங்கு நடக்கும் இல்லத்தின்

374
01:02:19,239 --> 01:02:22,826
கதவுகள் வழியே, மக்கள் நிறைந்த அறையைத்
தாண்டி சவப்பெட்டியை அடைய.

375
01:02:23,535 --> 01:02:28,332
அங்கே முழங்காலிட்டு மரணத்தை
ஒரு கண நேரம் நேரே பார்ப்போம்.

376
01:02:29,750 --> 01:02:31,960
பெற்றோரோ, சோகமாக மற்றவரிடம் பேசுவர்.

377
01:02:32,669 --> 01:02:33,670
அப்புறம்,

378
01:02:33,754 --> 01:02:39,009
ஏதோ சாதித்த உணர்வுடன்
வீட்டுக்கு வருவோம்...

379
01:02:40,010 --> 01:02:41,637
நம் இளைய ஆன்மாவை நிறைத்தபடி.

380
01:02:43,347 --> 01:02:47,309
வீடு வந்ததும், கட்டில் அருகே
முழங்காலிட்டு சொல்வோம்,

381
01:02:47,935 --> 01:02:53,899
"உறங்கப்போகிறேன் ஆண்டவரே,
என் ஆன்மாவை பாதுகாத்திடும்

382
01:02:54,399 --> 01:02:57,778
விழிக்கும் முன்னர் நான் மரித்தால்

383
01:02:58,362 --> 01:03:01,740
ஆண்டவரே என் ஆன்மாவை எடுத்துக்கொள்ளும்."

384
01:03:03,033 --> 01:03:05,786
"விழிக்கும் முன்னர் நான் மரித்தால்."

385
01:03:07,621 --> 01:03:09,540
அந்த வரியை நான் பொருட்படுத்தியதே இல்லை.

386
01:03:12,125 --> 01:03:15,170
என் இளைய மனதுக்கு புரிந்தது...

387
01:03:16,380 --> 01:03:19,258
ஏதோ ஒரு நாள் நம் கண்களை மூடினால்

388
01:03:19,341 --> 01:03:23,220
சாம்பல்நிற மாலை வானம்
நம் மேல் விரிந்து...

389
01:03:24,429 --> 01:03:27,015
அந்த நீண்ட நித்திய உறக்கத்தை
கொண்டு வரும்.

390
01:07:19,414 --> 01:07:21,834
நாம் வந்து...
இது நாம் பதிவுசெய்யும் நாலாவது நாள்.

391
01:07:21,917 --> 01:07:23,752
முன்பே வந்திருக்கணும்.
ஆனா எனக்கு ஜலதோஷம் இருந்தது.

392
01:07:23,836 --> 01:07:27,714
-சொன்னேனே, "இரு. இரு. இரு."
-கவலைப்படாதே. எந்நேரமும் பரவாயில்ல.

393
01:07:28,590 --> 01:07:32,386
நாம் வெறுமனே...
பதிவுசெய்து அதை மீண்டும் கேட்கிறோம்.

394
01:07:32,886 --> 01:07:33,887
அது நல்லா இருக்கு.

395
01:07:36,849 --> 01:07:39,226
கிளாரென்ஸ்

396
01:07:39,309 --> 01:07:42,646
ஜேக் க்ளெமான்ஸின்
முதல் அதிகாரப்பூர்வ பதிவு

397
01:07:43,397 --> 01:07:46,316
-தனி ஆவர்த்தனமாக ஈ ஸ்ட்ரீட் பேண்டில்.
-அடடா.

398
01:07:46,400 --> 01:07:47,526
அழுத்தம் ஏதுமில்லை.

399
01:07:49,695 --> 01:07:51,530
நீங்க அழகாக வாசித்தீர்கள்.

400
01:07:51,613 --> 01:07:54,908
இந்த பாடல்களை மீண்டும் கேட்டால்,
அவை அருமையானவை.

401
01:07:55,534 --> 01:07:58,161
நம்பிக்கை அதிகமாகும்.
உங்களால் இதை செய்ய முடியும்.

402
01:07:58,996 --> 01:08:00,330
-ஆமா.
-சியர்ஸ்.

403
01:08:00,414 --> 01:08:01,498
என் புது முதலாளிக்கு.

404
01:08:01,582 --> 01:08:03,208
-ஆமா பேபி.
-நம்பிக்கைக்காக கொண்டாடுவோம்.

405
01:08:03,667 --> 01:08:05,502
-பிக் மேனை மறக்க வேண்டாம்.
-பிக் மேன்.

406
01:08:05,586 --> 01:08:07,087
-பெரிய மனிதனுக்கு.
-பெரிய மனிதனுக்கு.

407
01:08:07,171 --> 01:08:08,255
-டேனி பெடரிசி.
-டேனி.

408
01:08:08,338 --> 01:08:10,465
-டேனி பெடரிசி.
-டேனி பெடரிசி.

409
01:08:20,893 --> 01:08:22,978
நாம் இறந்தவுடன் எங்கே போகிறோம்?

410
01:08:24,354 --> 01:08:25,772
ஒருவேளை நாம எங்கேயும் போக மாட்டோம்...

411
01:08:26,773 --> 01:08:29,109
அல்லது எல்லா இடத்திற்கும் போக நேரிடலாம்.

412
01:08:30,359 --> 01:08:33,404
நம் ஆன்மா காற்றோடு கலந்திருக்கலாம்,

413
01:08:33,488 --> 01:08:36,116
அந்த நட்சத்திரமில்லாத வானில்

414
01:08:36,742 --> 01:08:41,412
ஒரு சலனமற்ற குளத்தில் விழுந்த கல்லைப்போல

415
01:08:41,496 --> 01:08:45,667
அதனால் உருவாகும் அலைகளே
நமது வாழ்க்கையால் நம்மால்

416
01:08:45,751 --> 01:08:48,170
வாழ்க்கையில் தொடப்பட்டவர்கள்.

417
01:08:49,505 --> 01:08:56,178
யாருக்குமே அந்த ஆன்மாக்கள் எங்கே,
எவ்வளவு தூரம் போகும் எனத் தெரியாது.

418
01:08:57,595 --> 01:09:04,185
இல்லையென்றால், வெறும் எலும்புகளும்,
தூசியும், ஆமைகளும் தானோ.

419
01:09:05,562 --> 01:09:06,647
எனக்கு தெரியாது.

420
01:09:07,481 --> 01:09:09,149
ஆனாலும் நான் நேசித்தவ்ர்களை இனிமேல்

421
01:09:09,233 --> 01:09:13,487
காணமுடியாது என துக்கப்பட்டிருக்கிறேன்.

422
01:09:14,821 --> 01:09:18,492
ஆனாலும், இறந்தவர்கள் முழுமையாக மறைவதில்லை.

423
01:09:19,326 --> 01:09:21,745
அவர்களை வழக்கமான வீதிகளில் காண்கிறோம்,

424
01:09:22,328 --> 01:09:23,830
காலியாக உள்ள கிளப்புகளில்...

425
01:09:24,915 --> 01:09:27,334
மற்றும் நீண்ட நாள் முன் நள்ளிரவுகளில்.

426
01:09:28,210 --> 01:09:33,966
நம் கண்களின் கடையோரங்களில் மட்டும்
அவர்கள் நகர்வார்கள், நிழலாய்.

427
01:09:35,300 --> 01:09:37,594
அவர்களை நம் கனவுகளில் காண்போம்.

428
01:11:01,803 --> 01:11:02,846
கோரஸ்.

429
01:11:31,458 --> 01:11:34,670
அவ்வளவு தான். மிக எளிதானது, இல்லியா?

430
01:15:01,376 --> 01:15:02,503
நல்லா இருக்கு.

431
01:15:06,173 --> 01:15:08,217
அதற்கென ஒரு மகிமை இருக்கு.

432
01:15:17,059 --> 01:15:18,352
-ஸ்டீவன்?
-ஆச்சு.

433
01:15:18,936 --> 01:15:19,937
-எல்லாரும் குடிச்சாச்சா?
-ஆச்சு.

434
01:15:20,020 --> 01:15:23,106
-நாங்க எல்லாரும் குடிச்சாச்சு
-சரி, நான் என்ன சொல்லட்டும்?

435
01:15:25,025 --> 01:15:28,529
நாம் எல்லாரும் சாகும் வரை
இதை செய்யப்போகிறோம், மக்களே.

436
01:15:31,490 --> 01:15:33,867
இனியும் பயணிக்க முடியாத வரை.

437
01:15:33,951 --> 01:15:36,328
-இதோ இங்கே.
-நாம் எல்லாரும் சாகும் வரை.

438
01:15:36,411 --> 01:15:41,083
நான் சொல்லக்கூடியது என்னவென்றால்...
சிலிர்ப்பு.

439
01:15:41,166 --> 01:15:43,710
மைக் முன்னே நின்று,
நீங்கள் அனைவரும் பின்னே நிற்க

440
01:15:43,794 --> 01:15:49,049
வரும் அந்த சிலிர்ப்பு தான்
என் வாழ்வின் சிறந்தது.

441
01:15:49,132 --> 01:15:53,220
பதிவில் பாடியதில் இதான் சிறந்தது.
அப்படின்னு நினைக்கிறேன்...

442
01:15:53,971 --> 01:15:55,931
இன்னும் நல்லா வந்திருக்கு.
மனதை ஆட்கொள்கிறது.

443
01:15:56,014 --> 01:15:59,768
எல்லாரும் ஒரே அறையில் இருந்து
வாசிப்பது என்பது

444
01:15:59,852 --> 01:16:03,146
அப்படியே இசை வெளிவருவது என்பது...

445
01:16:03,730 --> 01:16:06,483
உனக்கு தெரியுமே, அது...

446
01:16:07,901 --> 01:16:11,113
வாழ்வின் ஆழமான அனுபவங்களில் ஒன்றாகும்.

447
01:16:11,196 --> 01:16:14,741
-உங்களை சொல்ல முடியாத அளவு நேசிக்கிறேன்.
-நன்றி.

448
01:16:14,825 --> 01:16:16,702
-சொல்ல முடியாத அளவு.
-பாடலில் தொடங்கவும்.

449
01:16:16,785 --> 01:16:18,787
பாடல்கள் தானே
நமக்கு எல்லாமே. இல்லியா?

450
01:16:18,871 --> 01:16:20,622
எனக்கு இந்த பாடல்களுக்கு கரு வரும் இடம்

451
01:16:20,706 --> 01:16:23,500
நீங்கள் வாசிக்கப் போவதில் இருந்தே
வருகிறதென தெரியும்.

452
01:16:23,584 --> 01:16:25,544
ரொம்ப ஜாலியாக இருக்கப் போகிறோம்.

453
01:16:26,128 --> 01:16:29,089
திரு. லான்டா,
நீங்களும் நல்லாத்தான் செஞ்சீங்க.

454
01:16:29,840 --> 01:16:30,924
சரிதான்.

455
01:16:31,800 --> 01:16:34,094
இங்கே அமர்ந்து, கேட்பதே கடினமான வேலை தான்.

456
01:16:34,178 --> 01:16:35,762
-நாம் செய்யலாம்.
-ஆமா, செய்யலாம்.

457
01:16:51,069 --> 01:16:52,070
"ஏஜ்"

458
01:16:53,947 --> 01:16:59,620
நள்ளிரவில் வரும் ரயிலின் ஒளியைக்
கண்டு வரும் தெளிவைப்போல

459
01:17:00,412 --> 01:17:05,292
முதிர்ச்சி நமக்குள் ஞானத்தையும்
தெளிவையும் கொண்டு வருகிறது.

460
01:17:07,294 --> 01:17:09,463
அதிசீக்கிரமே முதிர்ச்சி வருகிறது...

461
01:17:10,672 --> 01:17:13,258
கொஞ்சம் தான் வாழ்க்கையில் மீதம் இருக்கு.

462
01:17:15,052 --> 01:17:19,473
நட்சத்திரங்கள் ஒளிவீசும் இரவுகள்,
பனிப்பொழிவுகள்...

463
01:17:20,891 --> 01:17:26,063
இலையுதிர்கால மதியங்கள்,
கோடை மழைகள் எல்லாம் கொஞ்சமே.

464
01:17:27,022 --> 01:17:31,944
அதில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்,
எப்படி வேலைசெய்கிறீர்கள் என்பதே முக்கியம்.

465
01:17:33,111 --> 01:17:37,616
உங்கள் நண்பர்களை, குடும்பத்தினரை,
காதலரை எப்படி நடத்துகிறீர்கள்.

466
01:17:38,909 --> 01:17:42,538
நல்ல நாட்களில் ஆசீர்வாதம் வரும்.

467
01:17:43,205 --> 01:17:45,541
அது தன் கரங்களை உன்மேல் விரித்திட

468
01:17:45,624 --> 01:17:50,504
இந்த உலகத்தில் சுதந்திரமாக
ஆழமாக உணர்வீர்கள்.

469
01:17:51,213 --> 01:17:55,217
வாழ்வது தான் வாழ்க்கையின் பலன்.

470
01:17:57,469 --> 01:18:00,305
அது தான் நீங்கள் அடுத்த காலை
எழுந்திருக்க உதவுகிறது...

471
01:18:01,306 --> 01:18:04,434
ஆசீர்வாதத்தை பெற புதிய வாய்ப்பை தருகிறது.

472
01:18:05,435 --> 01:18:11,650
காலையில் ரொட்டியில் வெண்ணெய் தடவும் போது,
தயாராகும்போது, வீடு திரும்பும் போதும்

473
01:18:11,733 --> 01:18:14,361
இந்த தருணங்களை நீங்கள் எதிர்கொள்ளலாம்

474
01:18:14,444 --> 01:18:19,700
இறைவனின் கரத்தை உங்கள் மேல்
நீங்கள் மெலிதாக உணரும்போது.

475
01:18:20,701 --> 01:18:24,329
எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என உணருவீர்கள்.

476
01:18:24,913 --> 01:18:27,040
வாழ்வதால் அதிர்ஷ்டசாலிகள்,

477
01:18:27,124 --> 01:18:33,505
மூச்சுவிடுவதால் அதிர்ஷ்டசாலிகளாக, அழகான,
நம்பிக்கை நிறைந்த, ஆனால் கொடூரமான உலகில்.

478
01:18:34,923 --> 01:18:39,636
ஏனெனில் இது தான் இருக்கிறது: வாய்ப்பு.

479
01:18:39,720 --> 01:18:44,892
அன்பை பெறவும் காட்டவும் அதிர்ஷ்டம்
செய்தவர்களாக உலகில் இருக்கிறோம்.

480
01:18:45,893 --> 01:18:49,479
ஆக, அது உங்களை நிரப்பிடும் வரை,

481
01:18:50,272 --> 01:18:54,359
வியர்வை, இரத்தம், கண்ணீர்
எல்லாம் புரியும் வரை போகலாம்.

482
01:18:54,985 --> 01:18:59,364
வானில் தூர நட்சத்திரங்களின் ஒளி
உங்கள் கால்களில் விழும் வரை

483
01:18:59,448 --> 01:19:01,366
பயணியுங்கள்.

484
01:19:02,951 --> 01:19:06,079
போங்கள், இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

485
01:21:50,452 --> 01:21:55,374
லெட்டர் டு யூ

486
01:24:38,495 --> 01:24:39,621
ஆம்.

487
01:24:41,707 --> 01:24:43,125
சரி, இது தான்...

488
01:24:43,625 --> 01:24:46,712
இது தான் ஜார்ஜும் நானும் எழுதிய
முதல் பாடல் என நினைக்கிறேன்,

489
01:24:46,795 --> 01:24:49,006
அதன் பெயர் "பேபி ஐ."

490
01:25:00,684 --> 01:25:01,685
ஏதோ ஒன்று.

491
01:25:37,221 --> 01:25:39,515
நான் வீட்டிற்கு போய்
அதை பயிற்சி செய்யணும்.

492
01:25:39,598 --> 01:25:41,391
பேட்டி, ஈவன், ஜெஸ் மற்றும்
சேம்மிற்கு நன்றியும் எல்லா அன்பும்.

493
01:25:42,643 --> 01:25:46,271
ஜார்ஜ் தீய்ஸ் மற்றும் தி கேஸ்டில்ஸ்
ஆஃப் ப்ரீஹோல்ட், என்.ஜே. நினைவாக.

494
01:25:49,983 --> 01:25:51,985
தமிழில் மொழிபெயர்ப்பு: சாயி கிரிதர்



