1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:22,815 --> 00:00:25,985
"அமானுட ஆதாரம் அவசியம்
தீயதாக இருக்க வேண்டியதில்லை;

4
00:00:26,068 --> 00:00:28,487
மானுடரே எத்தகைய தீயதையும்
செய்யும் திறன் கொண்டவர்கள்."

5
00:00:28,571 --> 00:00:29,488
-ஜோசஃப் கான்ராட்

6
00:01:15,951 --> 00:01:18,496
பரவாயில்லை. பரவாயில்லை.

7
00:01:52,154 --> 00:01:53,364
பெதோ?

8
00:02:02,915 --> 00:02:04,375
அது கேட்டுதா?

9
00:02:14,301 --> 00:02:16,720
இல்லை! இல்லை! இல்லை, இல்லை, இல்லை, இல்லை!

10
00:02:16,804 --> 00:02:20,850
இல்லை! இல்லை! இல்லை! இல்லை!

11
00:02:45,916 --> 00:02:48,711
கோல்டன் வேலிக்கு வரவேற்பு - நிறுவனம் 1877,
1977 - எங்கள் 100வது வருடம்!

12
00:02:48,794 --> 00:02:50,754
-வெரானிகா சொன்னது சரி.
-என்ன?

13
00:02:51,589 --> 00:02:53,883
இங்கே மெக்டானல்ட்ஸ் கூட இல்லை.

14
00:02:54,925 --> 00:02:58,637
-கடவுளே, நாம திரும்பணும்!
-ஆமாம்!

15
00:02:59,138 --> 00:03:03,100
அதாவது, இப்ப கிளம்பினா, இரவு உணவுக்கு முன்
லாஸ் ஏஞ்சலஸ் திரும்பலாம்.

16
00:03:04,184 --> 00:03:07,980
உன் சகோதரிக்கு இங்கே பிடிக்காது,
ஆனா உனக்கு பிடிக்கும்னு நம்பறேன்.

17
00:03:09,148 --> 00:03:10,357
இரண்டு பேருக்கும்.

18
00:03:12,610 --> 00:03:14,820
இது உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும்.

19
00:03:15,696 --> 00:03:19,491
அமெரிக்காவுக்கு வந்து ஐந்து வருஷம்தான்
ஆச்சு, ஏற்கனவே நீ மேனேஜர்.

20
00:03:22,411 --> 00:03:24,580
-அது நான்தான்.
-அது பெரிய விஷயம்.

21
00:03:27,333 --> 00:03:29,168
இது நமக்கு முக்கியம்.

22
00:03:30,669 --> 00:03:32,880
பெதோ. நல்லா இருக்கோம்.

23
00:03:33,964 --> 00:03:34,798
நிஜமா.

24
00:03:44,767 --> 00:03:47,895
வாழ்கையை விட அதிக நேரமிருக்கு.

25
00:03:49,813 --> 00:03:51,231
தருணத்தை விட கூடாது.

26
00:03:53,025 --> 00:03:54,443
வாழ்க்கை குறுகியது.

27
00:03:55,694 --> 00:03:57,321
இங்கே அப்படித்தான் சொல்லுவோம்.

28
00:03:58,489 --> 00:04:00,115
நான் சொன்னது நல்லா இருக்கு.

29
00:04:41,615 --> 00:04:46,370
நீகோவின் மருந்தகம்

30
00:04:46,453 --> 00:04:50,499
முனேகா ப்ரெசியோசா
அழகு

31
00:04:50,582 --> 00:04:54,545
உடை கடை

32
00:04:54,628 --> 00:04:56,505
பானாடேரியா
மெக்சிகானா

33
00:04:56,588 --> 00:04:58,674
புது சரக்கு

34
00:04:58,757 --> 00:05:02,761
உள்ளூர் நிலையம்
முடிதிருத்துபவர்

35
00:05:02,845 --> 00:05:06,974
பாதை 190
உணவகம்

36
00:05:09,101 --> 00:05:11,061
ஆங்கிலம்
மட்டுமே

37
00:05:42,718 --> 00:05:43,844
வீட்டுக்கு வந்தாச்சு.

38
00:05:51,769 --> 00:05:52,978
நீ வர்றியா?

39
00:05:58,275 --> 00:06:02,529
மாதரேஸ்

40
00:06:16,168 --> 00:06:19,755
உண்மை நிகழ்வுகளால் தூண்டப்பட்டது...

41
00:07:31,451 --> 00:07:32,369
அது,

42
00:07:34,538 --> 00:07:38,458
படத்தில கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.

43
00:07:42,462 --> 00:07:44,047
அவை பழசா இருக்கும்.

44
00:07:47,176 --> 00:07:50,304
பெரிசா இருக்காதுன்னு தெரியும், ஆனால்...

45
00:07:51,346 --> 00:07:52,848
என்ன சொல்லுவாங்க?

46
00:07:53,432 --> 00:07:56,935
இலவசமா கொடுத்த மாட்டை, பல்லைப் பிடுங்கி
பார்க்கக்கூடாது?

47
00:07:57,603 --> 00:07:59,271
தானம் கொடுத்த மாட்டையா?

48
00:07:59,354 --> 00:08:02,941
ஆமாம்! அதான். தானம் கொடுத்த மாட்டை
பல்லை பிடுங்கி பார்க்காதே.

49
00:08:03,692 --> 00:08:06,528
அந்த திருத்தமெல்லாம் சுலபம்.
சீக்கிரம் செய்யலாம்.

50
00:08:08,405 --> 00:08:09,740
நாம சேர்ந்து செய்வோம்.

51
00:08:15,954 --> 00:08:17,331
புது பெயின்ட் தேவை.

52
00:08:18,916 --> 00:08:21,043
கொஞ்சம் மரச்சாமான்கள். புதுசா.

53
00:08:22,002 --> 00:08:22,878
நல்லது.

54
00:08:24,796 --> 00:08:26,089
நம்ம குடும்ப படங்கள்.

55
00:08:34,056 --> 00:08:35,724
தெய்வ நம்பிக்கை உடையவங்களா?

56
00:08:37,851 --> 00:08:40,479
ஒவ்வொரு கதவு மீதும் ஒன்று
பேயை அண்ட விடாது.

57
00:08:43,857 --> 00:08:46,193
இது எழுத நல்ல இடமா இருக்கும்.

58
00:08:46,735 --> 00:08:49,780
பழைய செய்தித்தாள்
குறுவறைய விட நல்லா இருக்கும்.

59
00:08:50,656 --> 00:08:53,533
சேமகம் பத்தாதோன்னு கவலைப்பட்டியே.

60
00:08:57,704 --> 00:09:00,374
இப்ப போதிய டெடனஸ் ஊசிகள்
இல்லைன்னு கவலை.

61
00:09:03,585 --> 00:09:07,047
வா, உணவு சாப்பிடுவோம்.
ஊரை தெரிஞ்சுப்போம்.

62
00:09:12,094 --> 00:09:14,554
பொடானிகா

63
00:09:19,893 --> 00:09:21,353
-ஹலோ.
-எப்படி இருக்கீங்க?

64
00:09:21,436 --> 00:09:23,897
-மதிய வணக்கம், வரவேற்கிறேன்.
-நன்றி.

65
00:09:30,654 --> 00:09:32,572
நீங்க இந்த ஊர் இல்லை, சரியா?

66
00:09:35,325 --> 00:09:36,201
இல்லை.

67
00:09:37,911 --> 00:09:40,163
மன்னிக்கணும், என் ஸ்பானிஷ் சிறப்பில்லை.

68
00:09:41,748 --> 00:09:43,208
ஆனால் நீங்க...

69
00:09:44,001 --> 00:09:46,837
பரவாயில்லை. என் பெயர் அனிதா.

70
00:09:46,920 --> 00:09:49,965
டியானா, இதை பார். குழந்தையோட அறைக்கு.

71
00:09:50,048 --> 00:09:52,718
-இன்னொரு சிலுவை வேணுமா?
-வாப்பா.

72
00:09:52,801 --> 00:09:55,095
வளரும் போது இப்படி ஒன்று இருந்தது.

73
00:09:57,139 --> 00:09:59,933
-ஹாய்! சந்தித்ததில் மகிழ்ச்சி.
-எனக்கும்.

74
00:10:01,268 --> 00:10:03,687
-உங்க கடை அழகா இருக்கு.
-நன்றி.

75
00:10:03,812 --> 00:10:06,231
சரியான சில்லறை இருக்கான்னு பார்க்கிறேன்...

76
00:10:08,900 --> 00:10:10,193
ஆமாம், இதோ இருக்கு.

77
00:10:11,194 --> 00:10:12,279
நன்றி.

78
00:10:15,032 --> 00:10:15,866
இந்தாங்க.

79
00:10:17,159 --> 00:10:18,744
-நன்றி.
-வரவேற்கிறேன்.

80
00:10:21,413 --> 00:10:22,456
கிளம்பும் முன்...

81
00:10:25,000 --> 00:10:27,044
ஆசீர்வாதம் செய்யலாமா?

82
00:10:27,544 --> 00:10:30,756
உங்களுக்கும், உங்க புது குழந்தைக்கும்?

83
00:10:30,839 --> 00:10:32,132
ஆமாம், நிச்சயமா.

84
00:10:41,308 --> 00:10:44,311
அருள் நிறைந்த மரியே வாழ்க,
கர்த்தர் உம்முடனே இருக்கிறார்.

85
00:10:44,394 --> 00:10:46,188
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே.

86
00:10:46,271 --> 00:10:48,774
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

87
00:10:48,857 --> 00:10:51,943
சர்வேசுவரனுடைய அருள் நிறைந்த மரி மாதாவே,
பாவிகளாகிய எங்களுக்காக,

88
00:10:52,027 --> 00:10:54,404
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக் கொள்ளும்.

89
00:10:54,821 --> 00:10:55,739
ஆமென்.

90
00:10:56,907 --> 00:10:57,824
ஆமென்.

91
00:11:00,077 --> 00:11:02,120
உங்க இருவரையும் சந்தித்தது இனிமை.

92
00:11:05,123 --> 00:11:08,794
இந்த ஊர் வாழ அற்புதமான இடமா இருக்கலாம்.

93
00:11:10,420 --> 00:11:13,256
-எப்போ வேணும்னாலும் வாங்க.
-ஆமாம், நிச்சயமா.

94
00:11:24,059 --> 00:11:26,978
இது நமக்கு சிறந்த தொடக்கமா
இருக்கும்னு தோணுது.

95
00:11:27,938 --> 00:11:30,065
-அப்படியா?
-ஆமாம்.

96
00:11:31,400 --> 00:11:32,901
ஏன்னு தெரியலை,

97
00:11:33,443 --> 00:11:35,987
இந்த ஊர், நான் வளர்ந்த
இடத்தை நினைவூட்டுது.

98
00:11:41,535 --> 00:11:43,537
குடும்பத்தை தொடங்க கச்சிதமான இடம்.

99
00:11:50,168 --> 00:11:52,629
அந்த அனிதா பெண் சொன்னதுக்கு
என்ன அர்த்தம்,

100
00:11:52,712 --> 00:11:55,382
"இந்த ஊர் வாழ அற்புதமான இடமா இருக்கலாம்?"

101
00:11:56,341 --> 00:11:59,469
-அப்படியா சொன்னாங்க?
-இல்லை.

102
00:12:00,220 --> 00:12:01,888
ஏன் "இருக்கலாம்"னு சொன்னாங்க?

103
00:12:02,264 --> 00:12:04,891
"இது அற்புதமான இடம்..."னு
சொல்லியிருக்கலாமே.

104
00:12:06,601 --> 00:12:09,855
-அது என்னது?
-ஒருவேளை ஓநாயா இருக்கும்.

105
00:12:11,398 --> 00:12:13,358
கிராமப்புற வாழ்க்கை பழகிடும்.

106
00:12:20,449 --> 00:12:22,617
பெதோ. வெளியே யாரோ இருக்காங்க.

107
00:12:22,701 --> 00:12:27,122
கண்ணே, புது வீட்டில் இது நம் முதல் இரவு.

108
00:12:27,205 --> 00:12:28,999
புது சத்தங்கள் கேட்கும்.

109
00:13:20,175 --> 00:13:21,009
போகலாம்!

110
00:13:22,219 --> 00:13:23,136
வெளியே போ!

111
00:14:32,581 --> 00:14:34,833
-எப்படி இருக்கீங்க? மதிய வணக்கம்.
-நல்லா இருக்கேன்.

112
00:14:36,042 --> 00:14:38,253
-நான் ராபர்டோ.
-எர்னெஸ்டோ. சந்திக்க மகிழ்ச்சி.

113
00:14:38,336 --> 00:14:40,338
சந்திக்க மகிழ்ச்சி, எர்னெஸ்டோ.
சந்திக்க இனிமை.

114
00:14:41,965 --> 00:14:42,966
காபி?

115
00:14:44,050 --> 00:14:45,176
நிச்சயமா, ஏன் கூடாது?

116
00:14:45,885 --> 00:14:46,803
நன்றி.

117
00:14:49,055 --> 00:14:50,015
நல்லா இருக்கு.

118
00:14:57,731 --> 00:14:58,690
டோமாஸ்?

119
00:14:59,107 --> 00:15:00,734
உண்மையில், பெயர் "தாமஸ்."

120
00:15:02,319 --> 00:15:06,406
-மன்னிக்கணும், எழுத்துக்களை பார்த்து...
-பரவாயில்லை. எப்பவும் நடக்கும்.

121
00:15:06,489 --> 00:15:07,574
ரொம்ப நல்லது.

122
00:15:08,074 --> 00:15:09,909
நீங்க நல்லபடியா வந்தது சந்தோஷம்.

123
00:15:09,993 --> 00:15:10,952
-ஆமாம்.
-அப்படியா?

124
00:15:11,036 --> 00:15:13,580
வீடு எப்படி இருக்கு?
கொஞ்சம் சரி பண்ணணும்...

125
00:15:13,663 --> 00:15:15,040
இல்லை, கச்சிதமா இருக்கு.

126
00:15:15,123 --> 00:15:16,041
-நிஜமா.
-அப்படியா?

127
00:15:16,124 --> 00:15:19,294
தங்க அனுமதிச்சதுக்கு
திரு. க்வில்லுக்கு நன்றின்னு கூறுங்க.

128
00:15:19,377 --> 00:15:20,879
உண்மையில், எல்லாத்துக்கும்.

129
00:15:23,465 --> 00:15:24,507
என்னோடு நட.

130
00:15:26,760 --> 00:15:28,553
பிரமாதம், சரிதானே?

131
00:15:28,970 --> 00:15:29,804
ஆமாம்.

132
00:15:29,888 --> 00:15:34,893
ஒவ்வொரு வருஷமும் மகசூல் பெருகுதுப்பா.
புது வேளாண் உரங்கள் கடவுளா அனுப்பினது.

133
00:15:35,852 --> 00:15:40,565
எர்னெஸ்டோவை சந்திச்சே. அவன் மனைவி
மாரிசோல், இது ஹெக்டர். அணுக்கமா பணி செய்வ.

134
00:15:40,649 --> 00:15:41,900
-எப்படி இருக்கீங்க?
-மதிய வணக்கம்.

135
00:15:41,983 --> 00:15:43,818
-சந்திக்க மகிழ்ச்சி.
-எனக்கும்.

136
00:15:45,111 --> 00:15:47,489
புது விநியோகஸ்தர்களை
நான் பார்த்துப்பேன்,

137
00:15:47,572 --> 00:15:49,949
-பணியாளர்களை நீ பாரு.
-சரி.

138
00:15:50,408 --> 00:15:54,412
-ரொம்ப நாளா கிராமத்தில இருக்கியா?
-என் 25 வயசுல வந்தேன்.

139
00:15:56,247 --> 00:15:57,248
சட்டப்பூர்வமாவா?

140
00:16:00,377 --> 00:16:02,879
மன்னிக்கணும். எனக்கு சம்பந்தமில்லை.

141
00:16:04,422 --> 00:16:07,550
-நீங்க எப்படி?
-நான் லாஸ் ஏஞ்சலஸ்ல பிறந்தேன்.

142
00:16:08,718 --> 00:16:10,887
-என் மனைவியும்.
-அப்படியா? என்...

143
00:16:11,429 --> 00:16:15,475
என் பெற்றோர் இங்கே '40களில் வந்தாங்க.
அவங்க ப்ரேசெரோஸ்.

144
00:16:16,476 --> 00:16:18,436
-அது விளக்குது.
-என்ன?

145
00:16:18,520 --> 00:16:20,355
ஆங்கிலம் கச்சிதமா இருக்குன்னு!

146
00:16:20,897 --> 00:16:23,692
எனக்கு ஷி-ப்னு சரியா சொல்ல வராது.

147
00:16:23,775 --> 00:16:25,568
எப்பவும் "ஷீப்"னு வரும்.

148
00:16:26,528 --> 00:16:28,738
-அல்லது மோசமா.
-அல்லது மோசமா.

149
00:16:31,199 --> 00:16:33,493
நீ இங்கே இருக்கிறது நல்லது. ஆமாம்.

150
00:16:35,078 --> 00:16:37,831
பணியாட்கள் பணி செய்ய விரும்புவாங்க...

151
00:16:38,373 --> 00:16:40,083
உண்மையான மெக்சிகனோட.

152
00:16:45,338 --> 00:16:47,173
அப்ப, மோசமா இருக்கு, இல்லையா?

153
00:16:47,257 --> 00:16:48,216
நல்லா இருக்கு.

154
00:16:48,299 --> 00:16:51,136
ஏதோ மூலைக்கு போக
எல்ஏவை விட்டேன்னு நம்ப முடியலை.

155
00:16:51,219 --> 00:16:55,557
எனக்கு வேலை போச்சு, குழந்தை பிறக்க போகுது.
எனக்கு வேற வாய்ப்புகளும் இல்லை.

156
00:16:55,640 --> 00:16:58,727
குழந்தை பிறக்க போறதால உனக்கு
வேலை போச்சுன்னு சொல்றே.

157
00:16:58,810 --> 00:17:00,687
நீ அதை எதிர்த்திருக்கணும்!

158
00:17:01,354 --> 00:17:03,064
நிஜமா, எல்லாம் சரி ஆயிடுச்சு.

159
00:17:03,565 --> 00:17:07,110
குழந்தை இரண்டு மாசத்தில பிறக்கும்,
என் புத்தகத்தை எழுதுவேன்.

160
00:17:07,193 --> 00:17:09,738
எதைப்பற்றி எழுதப் போறேன்னு தெரியுமா?

161
00:17:09,821 --> 00:17:10,947
இல்லை.

162
00:17:11,030 --> 00:17:14,075
ஆனா புரிஞ்சிடும்.
முக்கியமான ஏதாவது.

163
00:17:14,576 --> 00:17:18,705
-அப்ப, அம்மா எப்படி இருக்காங்க?
-தெரியும்ல, அவங்க அம்மாவா இருக்காங்க.

164
00:17:19,080 --> 00:17:21,416
-இன்னும் நீங்க பேசறதில்லையா?
-இல்லை.

165
00:17:21,499 --> 00:17:23,918
நீ கர்ப்பமான பிறகும்
இதையேதான் செஞ்சாங்க.

166
00:17:24,002 --> 00:17:26,838
சில வாரங்களுக்கு அமைதி,
பிறகு சரி ஆயிடுவாங்க.

167
00:17:26,921 --> 00:17:29,674
பெதோ பற்றி மீண்டும் என்னால
சண்டை போட முடியாது,

168
00:17:29,758 --> 00:17:32,385
அல்லது எப்படி என் ஜர்னலிஸம் பட்டத்துக்கு

169
00:17:32,469 --> 00:17:35,388
படிப்புக்கு பணம் தந்தும்
ஏழை விவசாயி மனைவி ஆனேன்னோ.

170
00:17:35,472 --> 00:17:38,933
உதவ முயலறாங்க. நீ அதுக்கும்
மேல தகுதி வாய்ந்தவனு நம்பறாங்க.

171
00:17:39,017 --> 00:17:40,685
-வெரானிகா!
-உனக்கு புரியுமே.

172
00:17:40,769 --> 00:17:44,773
நல்லதுன்னா வெள்ளை குழந்தைகளும்,
வேலைக்கு சூட் அணியற கணவனும்.

173
00:17:44,856 --> 00:17:47,859
உதவ நினைச்சிருந்தா,
ஸ்பானிஷ் கற்பிச்சிருக்கலாம்.

174
00:17:47,942 --> 00:17:51,112
"பெண்களே, பாட்டி பேசற மாதிரி பேச
வேண்டாம், இல்லையா?"

175
00:17:51,196 --> 00:17:52,864
அதாவது, ஏற்கனவே மோசம் நான்...

176
00:17:54,616 --> 00:17:55,658
நீ, என்ன?

177
00:17:59,496 --> 00:18:02,749
-திரும்ப கூப்பிடறேன்.
-நிச்சயமா. இருப்பேன்.

178
00:19:13,027 --> 00:19:15,363
தெரெஸா

179
00:19:34,632 --> 00:19:36,259
புலம்பெயர் பண்ணையாட்கள் சங்கம்

180
00:19:36,342 --> 00:19:38,928
"நுண்ணிய மரணம்"
புலம்பெயர் பண்ணையாட்கள் சங்கம்

181
00:19:39,387 --> 00:19:41,890
பூச்சிகொல்லிகள் பற்றிய உண்மை

182
00:20:01,618 --> 00:20:02,535
ஹேய்.

183
00:20:03,202 --> 00:20:05,538
ஹலோ? ஹேய்!

184
00:20:09,083 --> 00:20:11,628
ஹலோ? ஹலோ!

185
00:20:11,711 --> 00:20:12,837
ஹேய்!

186
00:20:54,504 --> 00:20:57,006
யார் அப்படி செய்வாங்க?

187
00:20:58,383 --> 00:21:00,885
அது எவ்வளவு காலமா
அங்கிருக்குன்னு தெரியாது.

188
00:21:02,428 --> 00:21:04,472
நோண்டி எடுத்த கண் நம் மரத்தில்

189
00:21:04,555 --> 00:21:07,058
தொங்கறது சில காலமா இருந்தா, பயமில்லையா?

190
00:21:07,141 --> 00:21:11,312
பசங்க விளையாட்டா இருக்கும் அல்லது
பழைய சொந்தக்காரங்க போட்டிருப்பாங்க.

191
00:21:14,649 --> 00:21:16,901
பழைய உரிமையாளர்களை பற்றி
ஏதும் தெரியுமா?

192
00:21:16,985 --> 00:21:17,860
இல்லை.

193
00:21:19,237 --> 00:21:21,823
இந்த வாரயிறுதி பார்பெக்யூவில நாம கேட்போம்.

194
00:21:22,323 --> 00:21:25,034
-நாம அதுக்கு போயாகணுமா?
-ஆமாம், போகணும்.

195
00:21:25,535 --> 00:21:28,788
இங்கிருக்கிற மற்ற குடும்பங்களை
தெரிஞ்சுக்க வாய்ப்பு.

196
00:21:28,871 --> 00:21:29,956
நல்லது.

197
00:21:30,373 --> 00:21:33,001
வம்பு பேசுவோம். ஸ்பானிஷில்.

198
00:21:34,502 --> 00:21:35,753
எனக்கு பிடிச்சது.

199
00:21:40,675 --> 00:21:43,761
பெண்களே, உங்களுக்கு பிடிச்ச
ஆக்வா ஃப்ரெஸ்கா அங்கிருக்கு.

200
00:21:43,845 --> 00:21:45,722
மகிழுங்க. புதுசா செஞ்சது.

201
00:22:00,862 --> 00:22:04,532
அது இடத்தை மட்டும் அழிக்கலை,
ஆனால் பீப்பாய்க்குள்ளும் நுழைஞ்சுது!

202
00:22:04,615 --> 00:22:06,743
குடிச்ச ஓநாயை பார்த்திருக்கியா?

203
00:22:12,540 --> 00:22:13,624
மாரிசோல் நலமா?

204
00:22:13,958 --> 00:22:15,084
நல்லா இருக்கா...

205
00:22:15,376 --> 00:22:21,049
குழந்தை பிறக்கிற வரை அவ மருத்துவமனையில
படுக்கையில இருக்கணும்னாங்க மருத்துவர்கள்.

206
00:22:21,841 --> 00:22:23,092
காத்திருக்க முடியலை.

207
00:22:25,053 --> 00:22:26,596
உன் நெக்லஸ் பிடிச்சிருக்கு.

208
00:22:26,971 --> 00:22:28,931
நன்றி. அது பரிசு.

209
00:22:29,724 --> 00:22:32,018
-பரிசா?
-அனிதா தந்தது, பாதுகாப்புக்கு.

210
00:22:32,935 --> 00:22:34,312
அது நல்ல உடை.

211
00:22:34,771 --> 00:22:36,814
என் உடையா? நன்றி!

212
00:22:36,898 --> 00:22:40,526
புதுசு. பயணத்துக்கு முன்னால வாங்கினது.

213
00:22:40,610 --> 00:22:43,029
லேசா, காத்தோட்டமா தேவைன்னு தோணிச்சு.

214
00:22:43,112 --> 00:22:44,822
பாரு, பைகூட இருக்கு!

215
00:22:44,906 --> 00:22:46,407
விலை அதிகம் போலிருக்கு.

216
00:22:46,491 --> 00:22:47,575
ரோசா!

217
00:22:48,242 --> 00:22:49,994
மன்னிக்கணும். எனக்கு புரியலை.

218
00:22:52,246 --> 00:22:56,250
பள்ளியில் ஸ்பானிஷ் பேசினதுக்கு என்
பெற்றோருக்கு தண்டனை கிடைச்சுது.

219
00:22:56,334 --> 00:22:57,835
அதனால எங்களுக்கு கற்பிக்கலை.

220
00:22:57,919 --> 00:22:59,462
பாவம் வெள்ளை பொண்ணு.

221
00:22:59,545 --> 00:23:01,380
-ரோசா, போதும்.
-கேலியா சொன்னேன்.

222
00:23:02,965 --> 00:23:05,676
உன் உடை அழகா இருக்குன்னு தோணுது.

223
00:23:06,761 --> 00:23:07,762
நன்றி.

224
00:23:09,347 --> 00:23:10,431
முதல் குழந்தையா?

225
00:23:11,349 --> 00:23:12,266
ஆமாம்.

226
00:23:14,352 --> 00:23:16,521
உனக்கு குழந்தைகள் உண்டா?

227
00:23:16,604 --> 00:23:20,066
இன்னும் இல்லை, ஆனால் ஒரு நாள், நம்பறேன்.

228
00:23:22,485 --> 00:23:25,738
-பெதோவுக்கும் எனக்கும் இரண்டாவது வேணும்.
-அதிகம் நல்லது.

229
00:23:28,407 --> 00:23:30,076
உன் குடும்ப ஆரோக்கியத்துக்கு.

230
00:23:32,286 --> 00:23:35,665
உனக்கு எப்படி, ரோசா?
உனக்கு இன்னும் குழந்தைங்க வேணுமா?

231
00:23:36,374 --> 00:23:37,625
ஆமாம், ஆனால்...

232
00:23:38,584 --> 00:23:39,752
வாய்ப்பில்லை.

233
00:23:40,128 --> 00:23:41,254
வருந்தறேன்.

234
00:23:42,421 --> 00:23:43,631
ஆனால், கடவுளுக்கு நன்றி...

235
00:23:43,714 --> 00:23:44,882
ஹைமிடோ இருக்கான்.

236
00:23:46,300 --> 00:23:48,010
நாங்க அதிர்ஷ்டசாலிகள்.

237
00:23:49,887 --> 00:23:51,097
அங்கே போ.

238
00:24:00,022 --> 00:24:02,150
உன் கஸின்கள் எங்கே? நண்பர்கள்?

239
00:24:03,693 --> 00:24:04,986
உனக்கு யாரும் இல்லையா?

240
00:24:07,655 --> 00:24:08,865
நீ கேள்விப்பட்டியா...

241
00:24:08,948 --> 00:24:10,366
ஹுவானா எங்கே?

242
00:24:10,908 --> 00:24:14,287
-வம்படிக்க மாட்டேன் ஆனால்...
-நீ வம்படிக்க மாட்டியா?

243
00:24:14,662 --> 00:24:17,832
ஹேய்! நான் எப்ப வம்படிச்சேன்?

244
00:24:17,915 --> 00:24:19,625
சரி, அது வந்து...

245
00:24:29,468 --> 00:24:31,554
ஆக்வா ஃப்ரெஸ்கா? வீட்டில செஞ்சது.

246
00:24:31,637 --> 00:24:33,639
-குடிச்சு பாரு.
-சரி.

247
00:24:36,350 --> 00:24:38,311
-எப்படி?
-அது சுவையா இருக்கு.

248
00:24:38,394 --> 00:24:40,855
நன்றி. உங்களை வரவேற்க கூடை வைச்சிருக்கேன்.

249
00:24:40,938 --> 00:24:43,441
-வீட்டுக்கு கொடுத்து அனுப்பறேன்.
-நன்றி.

250
00:24:43,524 --> 00:24:44,775
கவலைப் படாதே.

251
00:24:48,154 --> 00:24:52,325
கவனி, கடினம்னு தெரியும்.
மொழி எல்லாம் தெரியாமல், ஆனால்...

252
00:24:53,034 --> 00:24:55,828
பரவாயில்லை. சீக்கிரமே வந்துடும்.

253
00:24:55,912 --> 00:24:56,996
-என்னை நம்பு.
-நன்றி.

254
00:24:57,079 --> 00:24:58,122
நிச்சயமா.

255
00:25:14,680 --> 00:25:16,682
நல்ல நாள்னு நினைச்சேன்.

256
00:25:17,767 --> 00:25:19,602
அது ஏன்னா அவங்க உன் நண்பர்கள்.

257
00:25:21,938 --> 00:25:23,147
நம்ம நண்பர்கள்.

258
00:25:29,320 --> 00:25:31,113
கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.

259
00:25:31,781 --> 00:25:32,740
பெதோ!

260
00:25:36,953 --> 00:25:39,121
என்னை கேலி செய்து வெளியூர்காரினாங்க.

261
00:25:40,289 --> 00:25:41,290
என்ன?

262
00:25:42,625 --> 00:25:44,126
-எப்ப?
-நான் வந்து...

263
00:25:48,631 --> 00:25:51,008
நான் வெளியாள் போல உணர்ந்ததே கிடையாது.

264
00:25:53,010 --> 00:25:55,596
ஆமாம். உனக்கு பழகிடும்.

265
00:26:45,438 --> 00:26:48,607
-அனிதா?
-காலை வணக்கம், டியானா.

266
00:26:48,691 --> 00:26:50,276
நீ இங்கே என்ன பண்றே?

267
00:26:50,359 --> 00:26:52,028
எப்படி உணர்றே?

268
00:26:55,239 --> 00:26:56,407
உனக்காக இது.

269
00:26:58,492 --> 00:27:01,454
அழகா இருக்கு ஆனால் எடுத்துக்க முடியாது.

270
00:27:01,537 --> 00:27:02,413
டியானா.

271
00:27:03,748 --> 00:27:07,043
புதிய தாய்களை பாதுகாப்பது
மிகவும் முக்கியம்.

272
00:27:07,752 --> 00:27:10,046
எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் தருவேன்.

273
00:27:13,257 --> 00:27:15,843
எங்களுக்கு முன்னால இங்கிருந்த
பெண்ணை தெரியுமா?

274
00:27:17,470 --> 00:27:20,639
தெரெஸா. ஏன் கேட்கிறே?

275
00:27:20,723 --> 00:27:24,477
பொருட்களை விட்டு போயிருக்காங்க.
படங்கள், டைரி, பசங்க பொம்மைங்க.

276
00:27:24,560 --> 00:27:27,772
-அவங்க முகவரி தந்தா அனுப்பிடுவேன்.
-விடு.

277
00:27:30,524 --> 00:27:33,736
சரி, நீ கிளம்பணும்.
எனக்கு வேலை இருக்கு.

278
00:27:34,153 --> 00:27:37,281
இந்த நெக்லஸை எடுத்துக்கோ.
உனக்கு பாதுகாப்பு தேவை.

279
00:27:37,365 --> 00:27:38,532
தயவு செய்து, போ.

280
00:28:10,981 --> 00:28:12,149
பாதுகாப்பு.

281
00:28:35,798 --> 00:28:39,635
பள்ளத்தாக்கு காய்ச்சல்

282
00:29:15,713 --> 00:29:18,382
நார்த்வெஸ்ட்
மகப்பேறு மருத்துவமனை

283
00:29:21,552 --> 00:29:25,055
நான் ஏதேதோ பார்க்கிறது போலிருக்கு.

284
00:29:25,556 --> 00:29:26,807
தெளிவா இல்லை.

285
00:29:29,310 --> 00:29:31,562
-தசைப்பிடிப்பு இருக்கு.
-தடிப்புகள்?

286
00:29:32,563 --> 00:29:33,689
இல்லை.

287
00:29:34,273 --> 00:29:37,401
சரி. நல்ல விஷயம் என்னன்னா
குழந்தை நல்லா இருக்கு.

288
00:29:37,485 --> 00:29:40,738
விழுந்ததினால தசைப்பிடிப்பு
ஏற்பட்டிருக்கலாம்.

289
00:29:40,821 --> 00:29:43,782
இரவு நீ இங்கே இருக்கணும்.
முன்னெச்சரிக்கையா.

290
00:29:44,617 --> 00:29:46,160
நாம சந்திச்சது மகிழ்ச்சி.

291
00:29:46,243 --> 00:29:49,288
திட்டமிட்ட அடுத்த வார
பரிசோதனையில், செய்ய விருப்பம்.

292
00:29:49,371 --> 00:29:50,456
நன்றி.

293
00:29:52,333 --> 00:29:55,836
-ஹாய், டியானா.
-இது செவிலி கேரல், நம்ம இரவு செவிலி.

294
00:29:55,920 --> 00:29:59,215
பிறகு, நாளை காலை ஷிஃப்டில்
செவிலி மாலியை சந்திப்பே,

295
00:29:59,298 --> 00:30:00,758
அதுதான் முழு அணி.

296
00:30:00,841 --> 00:30:02,259
நீங்க மூன்று பேர்தானா?

297
00:30:02,968 --> 00:30:05,679
பெரிய நகரத்துல பழகின அளவு
இங்கில்லைதான்,

298
00:30:05,763 --> 00:30:07,932
ஆனால் உன்னை நல்லா பார்த்துப்போம்.

299
00:30:08,015 --> 00:30:10,434
உன் அறிகுறிகள் மோசமாகிறது போல தெரிஞ்சா,

300
00:30:10,518 --> 00:30:13,145
நீ உடனே செவிலி கேரலிடம் தெரிவிக்கணும்.

301
00:30:13,229 --> 00:30:15,439
அடிக்கடி வந்து கவனிப்பாங்க,

302
00:30:15,523 --> 00:30:17,775
ஆனால் காலையில் கிளம்புவேன்னு நம்பறேன்.

303
00:30:17,858 --> 00:30:20,069
ஓய்வு எடு. அடுத்த வாரம் பார்க்கிறேன்.

304
00:30:20,569 --> 00:30:22,947
ஏதாவது வேணும்னா, என்னிடம் சொல்லு.

305
00:30:23,030 --> 00:30:23,906
சரி.

306
00:30:23,989 --> 00:30:26,116
சுருட்டி வைக்கும் படுக்கை இருக்கா?

307
00:30:26,200 --> 00:30:29,328
இல்லை. துணைக்கு ஆட்களை
இரவு தங்க விடறதில்லை.

308
00:30:29,411 --> 00:30:32,831
-நிஜமாவா?
-மருத்துவமனை கொள்கை, மன்னிக்கணும்.

309
00:30:32,915 --> 00:30:35,459
ஆனால் சந்திப்பு நேரம்,
காலை சீக்கிரமே ஆரம்பம்.

310
00:30:44,134 --> 00:30:47,596
-நான் தங்கறேன்.
-இரவு முழுதும் நாற்காலியில தூங்குவியா?

311
00:30:49,848 --> 00:30:52,935
கண்ணே, பரவாயில்லை.
எப்படியும் நான் தூங்கிடுவேன்.

312
00:30:54,103 --> 00:30:55,938
ஓய்வு எடு, உனக்கு வேலை இருக்கு.

313
00:30:56,355 --> 00:30:59,275
போ! இங்கிருந்து வெளியே போ.

314
00:31:00,651 --> 00:31:01,694
சரி.

315
00:31:02,695 --> 00:31:05,197
காலை முதலில் வந்துடுவேன்.

316
00:31:09,952 --> 00:31:10,953
ஓய்வெடு, பேபி.

317
00:31:11,036 --> 00:31:13,080
-லவ் யூ.
-லவ் யூ.

318
00:31:57,916 --> 00:32:00,252
குழந்தை நல்லா இருக்குன்னு
சொல்ல நினைச்சேன்.

319
00:32:00,336 --> 00:32:05,382
-நல்லா இருக்கேன். எல்லாம் நல்லா இருக்கு.
-அது, கேட்க... நல்லா இருக்கு.

320
00:32:06,884 --> 00:32:10,471
-நாளைக்கு கேட்டுக்கிறேன். லவ் யூ.
-லவ் யூ, டூ. பை.

321
00:32:34,286 --> 00:32:35,496
செவிலி கேரல்?

322
00:33:08,153 --> 00:33:09,947
-நீ நல்லா இருக்கியா?
-இல்லை.

323
00:33:14,576 --> 00:33:16,787
மாரிசோல், நான் மருத்துவரை அழைக்கவா?

324
00:33:20,499 --> 00:33:22,334
மன்னிக்கணும், எனக்கு புரியலை.

325
00:33:27,256 --> 00:33:28,090
என்ன?

326
00:33:32,720 --> 00:33:35,931
-டியானா, என்ன...
-அவங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு.

327
00:33:36,014 --> 00:33:38,934
நான் திருமதி. ஹெர்னான்டெஸை
பார்த்துக்கறேன். நீ படு.

328
00:33:39,017 --> 00:33:41,770
நீ ஓய்வெடுக்கணும்.
படு, நான் பார்த்துக்கறேன்.

329
00:33:45,482 --> 00:33:50,320
திருமதி ஹெர்னான்டெஸ்.
திருமதி ஹெர்னான்டெஸ், அமைதியாகுங்க.

330
00:33:51,196 --> 00:33:52,114
பரவாயில்லை.

331
00:34:44,374 --> 00:34:45,459
தயாரா, கண்ணே?

332
00:34:53,550 --> 00:34:55,969
ஹாய், எப்படி இருக்கே?

333
00:34:56,428 --> 00:34:57,638
ஹாய் மாரிசோல்.

334
00:34:57,888 --> 00:34:58,806
ஹாய்.

335
00:34:59,848 --> 00:35:01,099
டியானா, என் மனைவி.

336
00:35:01,183 --> 00:35:02,392
சந்திக்க மகிழ்ச்சி.

337
00:35:03,602 --> 00:35:06,939
நினைவிருக்கா தெரியலை,
நேற்றிரவு உன் அறைக்கு வந்தேன்.

338
00:35:07,022 --> 00:35:09,358
நீ ரொம்ப வலியில இருந்தே.

339
00:35:10,234 --> 00:35:12,152
மன்னிக்கணும், புரியலை.

340
00:35:12,236 --> 00:35:15,697
நீ நல்லா இருக்கியான்னு கேட்கிறா.
நேற்றிரவு ஏதாவது நடந்ததுதா?

341
00:35:16,281 --> 00:35:19,827
இல்லை, நல்லா இருக்கேன்.
நேற்றிரவை பற்றி நினைவு இல்லை.

342
00:35:20,494 --> 00:35:22,162
மருந்து வலுவா இருந்தது.

343
00:35:24,706 --> 00:35:25,958
உன் முதல் குழந்தையா?

344
00:35:27,543 --> 00:35:28,502
ஆமாம்.

345
00:35:31,129 --> 00:35:32,297
எனக்கு இரண்டாவது.

346
00:35:33,382 --> 00:35:35,133
இன்னொன்று வேணும்.

347
00:35:36,510 --> 00:35:38,595
திருமதி ஹெர்னான்டெஸ், நேரமாச்சு...

348
00:35:38,679 --> 00:35:39,847
நன்றி மாலி.

349
00:35:39,930 --> 00:35:40,848
அப்ப சரி...

350
00:35:41,390 --> 00:35:43,475
-நல்லா கவனிச்சுக்கோ.
-நீங்களும்.

351
00:35:43,559 --> 00:35:44,476
குட்பை.

352
00:35:47,271 --> 00:35:50,774
சந்திக்க... மகிழ்ச்சி.

353
00:35:52,568 --> 00:35:53,902
உன்னையும்.

354
00:36:06,498 --> 00:36:09,459
நேற்றிரவு "லா மால்டிசியான்"னு கத்தினாங்க.

355
00:36:10,794 --> 00:36:12,087
அது என்னது?

356
00:36:14,882 --> 00:36:15,883
சாபம்.

357
00:36:22,014 --> 00:36:25,142
எனக்கு குளியலும் பீட்ஸாவும் வேணும்.

358
00:36:28,645 --> 00:36:29,855
ஏதாவது கவனிச்சியா?

359
00:36:30,731 --> 00:36:32,441
வீடு ரொம்ப சுத்தமா இருக்கா?

360
00:36:40,240 --> 00:36:43,076
-உன்னை பார்.
-உன் சேவையில்.

361
00:36:44,119 --> 00:36:45,329
பிறகு இது இருந்தது.

362
00:36:48,624 --> 00:36:50,167
இது கொட்டகையிலிருந்து.

363
00:36:50,250 --> 00:36:53,086
இங்கிருந்த பெண்ணோடதுன்னு நினைக்கிறேன்.

364
00:36:53,170 --> 00:36:57,633
ஆமாம், அதை புரட்டிப் பார்த்தேன்.
இந்த ஊரில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு.

365
00:36:58,508 --> 00:36:59,801
நிறைய ஆராய்ச்சி.

366
00:37:00,969 --> 00:37:03,388
அவளும் எழுத்தாளரா இருந்திருக்கலாம்.

367
00:37:05,557 --> 00:37:06,475
அப்புறம்...

368
00:37:07,017 --> 00:37:10,103
அல் மால் டியெம்போ
புயெனா காரா

369
00:37:19,321 --> 00:37:22,240
"துன்பம் நேர்கையில்,
தைரியமாக இருக்க வேண்டும்."

370
00:37:22,741 --> 00:37:24,034
கவிதையா இல்லை?

371
00:37:27,621 --> 00:37:29,331
இன்னும் ஒன்று காட்டணும்.

372
00:37:29,414 --> 00:37:31,249
-என்ன?
-வா, வா.

373
00:37:32,376 --> 00:37:33,669
கவனமா இரு.

374
00:37:34,962 --> 00:37:36,171
ஒழுங்கா.

375
00:37:36,254 --> 00:37:39,841
-சரி. சரி.
-சரியா? சரி.

376
00:37:40,717 --> 00:37:43,762
நான் தூங்கவே இல்லை, ஆனால்
பரவாயில்லைன்னு தோணுது.

377
00:37:45,889 --> 00:37:47,557
சரி, இதோ.

378
00:37:48,475 --> 00:37:49,726
கண்களைத் திற.

379
00:37:56,108 --> 00:37:56,942
பெதோ...

380
00:37:57,609 --> 00:38:00,487
நீ வீட்டுக்கு வரும்போது ஏதாவது
நல்லா இருக்கணும்.

381
00:38:07,619 --> 00:38:08,954
நல்லா என்பது விட மேல்.

382
00:38:18,755 --> 00:38:21,174
இதையும் பார்.

383
00:38:22,009 --> 00:38:24,261
சுத்தம் பண்ணா புதுசு போல இருக்கு.

384
00:38:28,098 --> 00:38:29,307
வினோதமா இருக்கா?

385
00:38:29,725 --> 00:38:32,310
ஏதோ குழந்தையோட இசை பெட்டியை எடுப்பதா?

386
00:38:32,394 --> 00:38:35,522
சமையலறையில் இருந்ததால
உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன்.

387
00:38:35,939 --> 00:38:39,943
இனிமைதான், ஆனால் குழந்தைக்கு புதுசா
ஏதாவது வாங்க நினைச்சேன்.

388
00:38:41,653 --> 00:38:42,612
சரி.

389
00:38:43,405 --> 00:38:44,698
உனக்கு வேண்டியதுதான்.

390
00:38:48,076 --> 00:38:50,954
மற்ற பொருட்களோடு நாம
இதை தானம் செய்யணும்.

391
00:38:51,455 --> 00:38:52,581
தானம்

392
00:38:58,503 --> 00:39:00,130
இன்னும் அதை படிக்கிறியா?

393
00:39:03,967 --> 00:39:07,304
-இன்று சுத்தம் செய்யணும்னு நினைச்சேன்.
-தெரியும்.

394
00:39:07,763 --> 00:39:11,016
ஆனால் தெரெஸா இந்த சுவாரஸ்யமான
கட்டுரைகளை சேகரிச்சிருக்கா.

395
00:39:12,934 --> 00:39:15,187
நோய்வாய்ப்பட்ட பணியாட்கள் பற்றி பேசுது.

396
00:39:15,854 --> 00:39:17,814
ஏதோ "பள்ளத்தாக்கு காய்ச்சல்"னு.

397
00:39:18,231 --> 00:39:21,193
அவளுக்கு பண்ணையில் ஏதாவது
ஒவ்வாமை இருந்திருக்கும்.

398
00:39:21,818 --> 00:39:23,445
நம்ம எல்லாருக்கும் இல்லையா?

399
00:39:28,533 --> 00:39:31,745
-இது பெரிய வெளிப்பாடாகும்.
-தெரெஸா பற்றியா?

400
00:39:33,330 --> 00:39:34,831
பண்ணை ஆட்கள் பற்றி.

401
00:39:38,460 --> 00:39:39,544
அது,

402
00:39:40,837 --> 00:39:43,673
இங்கே வெளியில் ரொம்ப இருக்காதே,
வெயிலா இருக்கு.

403
00:39:49,054 --> 00:39:49,888
நீ நலமா?

404
00:39:56,812 --> 00:39:58,063
நலமா, பேப்?

405
00:40:01,358 --> 00:40:02,317
ஆமாம்.

406
00:40:36,393 --> 00:40:40,355
திடீர் வெளிப்பாடு பெ. தடிப்பு.

407
00:41:04,129 --> 00:41:05,172
பெதோ?

408
00:42:44,980 --> 00:42:46,856
-உன் உதவி தேவை.
-வா.

409
00:42:51,444 --> 00:42:52,404
உனக்கு.

410
00:42:54,990 --> 00:42:56,241
அது இனிமை.

411
00:42:57,325 --> 00:42:59,411
ஆனால் எனக்கு தேவை அது இல்லை.

412
00:43:00,245 --> 00:43:02,205
பூச்சிக்கொல்லிகள் தெரியுமா?

413
00:43:02,664 --> 00:43:06,001
அவை புதுசு.
விவசாயிகள் பயிர்கள்மீது உபயோகிக்கிறாங்க.

414
00:43:06,084 --> 00:43:09,170
அது மக்களுக்கு பாதுகாப்பானதுன்னு
ஆதாரம் இல்லை.

415
00:43:09,254 --> 00:43:12,215
வயலில் வேலை செய்யறவங்க
இதை தினமும் எதிர்கொள்றாங்க.

416
00:43:12,507 --> 00:43:14,759
-இதெல்லாம் எங்கே கிடைச்சுது?
-தெரெஸா!

417
00:43:14,843 --> 00:43:19,723
அதனாலதான் அவ பொருட்களை விட்டு போனா.
இதை கண்டுபிடிச்சிட்டு காணாம போயிட்டா.

418
00:43:21,141 --> 00:43:24,686
இங்கே எல்லாரும் உன்னை நம்பறாங்க.
நீ சொல்றதை கேட்கிறாங்க.

419
00:43:25,437 --> 00:43:28,648
இதைப்பற்றி ஊரில் மக்களை எச்சரிக்க
உன் உதவி தேவை.

420
00:43:30,984 --> 00:43:34,070
-எப்போ இருந்து இது இருக்கு?
-என்ன?

421
00:43:35,155 --> 00:43:38,533
இல்லை, இரு. இது சாபம் இல்லை.
இது உண்மை.

422
00:43:38,616 --> 00:43:40,994
சாபம் உண்மை, டியானா.

423
00:43:41,077 --> 00:43:43,079
ஷாமன் அபத்தம் எல்லாம் போதும்!

424
00:43:43,872 --> 00:43:46,374
இங்கே நடக்கிறதுக்கு நான்
ஆதாரம் காட்டறேன்.

425
00:43:46,458 --> 00:43:48,585
பூச்சிக்கொல்லிகள்தான் காரணம்னா,

426
00:43:49,294 --> 00:43:51,254
இந்த தடிப்பு ஏன் வந்திருக்கு?

427
00:43:51,671 --> 00:43:54,007
நீ நிலத்தில வேலை செய்யறதில்லையே.

428
00:43:54,090 --> 00:43:56,634
நீ எப்ப இந்த இரசாயனங்களை எதிர்கொண்டே?

429
00:43:56,718 --> 00:43:59,763
பாதுகாப்பா, வீட்டில்.
தெரெஸா உடைமைகளை குடையும் போதா?

430
00:44:12,734 --> 00:44:15,779
தயவு செய்து உட்காருவியா?
சாப்பிட உணவு செஞ்சிருக்கேன்.

431
00:44:15,862 --> 00:44:18,782
இல்லை. பெதோ, நான் சொல்றதை நீ கவனிக்கலை.

432
00:44:18,865 --> 00:44:22,869
நீ சொல்றது கேட்குது. நான் என்ன செய்யணும்னு
நீ நினைக்கிறேன்னு புரியலை.

433
00:44:23,411 --> 00:44:25,830
திரு. க்வில் மற்றும் தாமஸிடம் சொல்லணும்.

434
00:44:25,914 --> 00:44:28,833
பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கிறதை
நிறுத்தணுங்கறேன்.

435
00:44:29,542 --> 00:44:32,462
டியானா, இப்பத்தான் இங்கே வந்திருக்கோம்.

436
00:44:33,171 --> 00:44:36,174
பழைய ஃப்ளையர்ஸை எடுத்துக்கிட்டு
என் பாஸிடம் போய்

437
00:44:36,257 --> 00:44:38,301
அவங்க செயல்பாடுகளை மாத்த கேட்கணுமா?

438
00:44:39,302 --> 00:44:41,721
வினோதம்னு தெரியும், ஆனால் நீ நம்பணும்.

439
00:44:41,805 --> 00:44:44,224
பூச்சிக்கொல்லிகள்
எல்லாருக்கும் நோய் தருது.

440
00:44:44,349 --> 00:44:45,517
எனக்கு நோய் இல்லை.

441
00:44:46,059 --> 00:44:48,311
வயல்களில் யாருக்கும் நோய் இல்லை.

442
00:44:49,104 --> 00:44:50,480
நீ ஏன் இதை செய்யறே?

443
00:44:52,148 --> 00:44:55,276
என்ன சொல்றே? உதவ முயற்சி செய்யறேன்.

444
00:44:57,320 --> 00:44:58,780
உன் புத்தகத்துக்கு இல்லையே?

445
00:45:02,700 --> 00:45:04,327
நாம பாதுகாப்பா இருக்கணுமே.

446
00:45:05,245 --> 00:45:08,331
நீ இங்கே இழுத்துட்டு வந்து,
நம்ம குடும்பத்தை ஆபத்தில்

447
00:45:08,415 --> 00:45:10,375
விடறே, ஏதும் செய்ய விரும்பாம.

448
00:45:11,459 --> 00:45:13,086
இப்ப நான் உன்னை இங்கே இழுத்துட்டு வந்தேன்!

449
00:45:13,169 --> 00:45:14,879
ஒருவேளை நீ உங்கம்மா
சொன்னதை கேட்டிருக்கணும்

450
00:45:14,963 --> 00:45:17,257
என்னோட சேர்ந்திருக்கவே கூடாது,
இந்த பயனற்ற விவசாயியோட!

451
00:45:17,340 --> 00:45:18,716
அபத்தமா பேசாதே.

452
00:45:19,717 --> 00:45:22,929
இதோட இப்பத்தான் உன்னை முதல்
முறையா பார்க்கிறேன்.

453
00:45:23,012 --> 00:45:25,807
ஸ்பானிஷ் கத்துக்கிறதை பற்றி
பல வருஷமா சொல்றேன்.

454
00:45:25,890 --> 00:45:28,935
திடீர்னு மொழியை கத்துக்கறதுல
உனக்கு ஆர்வமா?

455
00:45:29,018 --> 00:45:30,895
எனக்கெதிரா பயன்படுத்த முடியும்னா?

456
00:45:30,979 --> 00:45:33,148
ஸ்பானிஷ் தெரியாததுக்கு என்னை தாக்காதே!

457
00:45:33,231 --> 00:45:36,067
இறுதியா கத்துக்க ஆரம்பிக்கிறேன்.
அது போதாதா?

458
00:45:36,151 --> 00:45:39,320
உள்ளூர் மொழிகள் தெரியலைன்னு
நான் தாக்கறேனா?

459
00:45:39,404 --> 00:45:42,824
நஹுவாத்ல் தெரியுமா? உன் தாத்தா
பாட்டி மொழி கத்துக்கிட்டியா?

460
00:45:43,408 --> 00:45:45,452
நீ கத்துக்கலைன்னு கேலி செய்தேனா?

461
00:45:47,954 --> 00:45:49,622
இது உன்னைப்பற்றி இல்லை.

462
00:45:50,707 --> 00:45:54,335
மக்கள், கலாச்சாரம் பற்றி இவ்வளவு
உணர்ச்சிவசப்படற ஒருவருக்கு,

463
00:45:54,419 --> 00:45:57,130
எழுந்து அவங்களை காப்பாற்றுவேன்னு
எதிர்பார்ப்பேன்.

464
00:45:58,423 --> 00:45:59,716
நீ மாட்டேன்னா, நான்.

465
00:46:03,261 --> 00:46:05,472
சரி. இதோ ஆரம்பிச்சாச்சு.

466
00:46:05,555 --> 00:46:10,810
வெள்ளை மீட்பர், ஏழை, முட்டாள் விவசாயிகளை
காப்பாற்ற வந்துட்டார்.

467
00:46:14,689 --> 00:46:16,357
மன்னிக்கணும். இரு.

468
00:46:23,615 --> 00:46:25,283
இருவரும் அழுத்தத்தில் இருக்கோம்.

469
00:46:27,827 --> 00:46:30,288
நம்மிருவருக்கும் இது பெரிய மாற்றம்.

470
00:46:32,373 --> 00:46:35,793
என் குடும்பத்தில் மேலாளர் ஆன முதல்
ஆள் நான்தான்.

471
00:46:39,214 --> 00:46:41,758
இங்கே நல்லா வேலை செய்யணும்.

472
00:46:45,178 --> 00:46:46,387
அப்ப தொழிலாளிகள்?

473
00:46:52,477 --> 00:46:54,312
நீ அவங்களை காப்பாற்றணும்.

474
00:46:56,272 --> 00:46:57,273
காப்பாற்றுவேன்.

475
00:47:23,424 --> 00:47:24,592
அது என்னது?

476
00:47:26,553 --> 00:47:28,221
இது நம்ம பண்ணையிலிருந்து.

477
00:47:29,973 --> 00:47:33,810
செலரி வளர்க்க உண்மையான விவசாயி
வேணும்னு எங்கப்பா சொல்லுவார்.

478
00:47:34,727 --> 00:47:38,565
செலரிக்குதான் பயிர்களில்
நீண்ட முதிர்ச்சி காலம்.

479
00:47:39,482 --> 00:47:41,985
அது மென்மையானது, உடையக்கூடியது,

480
00:47:42,068 --> 00:47:46,864
சீக்கிரம் லாபம் பார்க்க நினைக்கும்
விவசாயிகளை பயமுறுத்தும்.

481
00:47:49,993 --> 00:47:50,910
ஆனால்...

482
00:47:53,246 --> 00:47:54,747
அந்த கரகரப்பு வர,

483
00:47:56,749 --> 00:47:58,209
பொறுமையும்

484
00:47:58,960 --> 00:48:00,044
நம்பிக்கையும் தேவை.

485
00:48:06,009 --> 00:48:08,011
என்மீது குறியீட்டை பயன்படுத்தினியா?

486
00:48:09,262 --> 00:48:11,764
உன் மொழியில் உன்னிடம் பேச விரும்பறேன்.

487
00:48:15,685 --> 00:48:16,519
நான்...

488
00:48:17,687 --> 00:48:18,688
நல்லா இருக்கியா?

489
00:48:21,816 --> 00:48:23,151
தெரியாது. நான்...

490
00:48:25,111 --> 00:48:28,406
ஓ, கடவுளே. உட்கார். உட்கார், பேபி.

491
00:48:31,909 --> 00:48:34,621
உங்களுக்கு சோதனைகள் செய்ய திட்டமிடுவோம்.

492
00:48:34,704 --> 00:48:37,707
-என்ன அது?
-எதுவுமில்லாம இருக்கலாம்.

493
00:48:37,790 --> 00:48:40,752
-ஒவ்வாமை.
-அப்படி இல்லைன்னா?

494
00:48:42,337 --> 00:48:45,089
ஊரில் சில தொழிலாளர்களுக்கு
தடிப்புகள் இருக்காம்.

495
00:48:45,590 --> 00:48:47,800
நோயாளி வரலாற்றுக்குள்ள போக முடியாது.

496
00:48:47,884 --> 00:48:51,054
பூச்சிக்கொல்லிகள் பற்றி
கட்டுரைகள் படித்தேன்.

497
00:48:52,847 --> 00:48:56,643
அதுவா இருக்கும்னு தோணுதா?
உள்ளூர்காரங்க சாபம்னு நினைக்கிறாங்க.

498
00:48:59,729 --> 00:49:02,607
முதன்முதலில் கோல்டன் வேலிக்கு
வந்தபோது, நான்...

499
00:49:03,232 --> 00:49:04,776
ஒரு நிலையை கவனித்தேன்.

500
00:49:05,735 --> 00:49:08,946
நோயாளிகள் ஒரே மாதிரி அசாதாரண
அறிகுறியை சொன்னார்கள்.

501
00:49:09,697 --> 00:49:13,117
திடீரென தலைசுற்றுவது, பலவீனமாக
உணர்வது, கவனமற்று இருப்பது,

502
00:49:13,201 --> 00:49:16,412
தொடர் இருமல், மாயத்தோற்றங்கள்,

503
00:49:16,496 --> 00:49:19,207
பிறகு உடலில் தடிப்புகள் வர ஆரம்பித்தது.

504
00:49:19,290 --> 00:49:21,000
எனக்கு அதுதான்னு தோணுதா?

505
00:49:21,417 --> 00:49:23,378
நானும், குழந்தையும் நலம் தானே?

506
00:49:28,466 --> 00:49:30,051
ஆன்மீகத்தில் நாட்டமில்லை.

507
00:49:30,802 --> 00:49:34,013
ஆனால சில விஷயங்களை
அறிவியலால் விளக்க முடியாது.

508
00:49:34,097 --> 00:49:36,307
உங்களுக்கு நல்ல பதில் தர ஆசை,

509
00:49:36,391 --> 00:49:38,976
ஆனால் பலர் பிரார்த்தனையில்
ஆறுதல் தேடுவர்.

510
00:49:39,769 --> 00:49:41,312
நீங்களும் அதையே செய்யுங்க.

511
00:49:42,647 --> 00:49:44,148
நீங்க நிஜமா சொல்ல முடியாது.

512
00:49:44,857 --> 00:49:46,234
சீக்கிரமே தெரிஞ்சிடுச்சு.

513
00:49:46,317 --> 00:49:50,113
நான் நேரம் குறிக்கிறேன்,
சோதனைகளை எடுக்கலாம்.

514
00:50:04,711 --> 00:50:06,963
பூச்சிக்கொல்லிகளால யாருக்கும்
நோய் வந்ததா?

515
00:50:07,046 --> 00:50:09,549
இல்லை, எங்களுக்கு இல்லை.
பெண்களுக்கு மட்டும்.

516
00:50:09,632 --> 00:50:10,800
என்ன?

517
00:50:13,928 --> 00:50:15,430
மருத்துவர் என்ன சொல்றார்?

518
00:50:16,389 --> 00:50:19,267
நாங்க செல்வி அனிதாகிட்ட போவோம்.
அவங்க எங்களை பாதுகாக்கிறாங்க.

519
00:50:20,393 --> 00:50:21,853
யாரு பாதுகாக்கிறாங்க?

520
00:50:25,022 --> 00:50:26,733
அனிதாவை பற்றி பேசறோம்.

521
00:50:29,110 --> 00:50:30,445
சூனியக்காரி.

522
00:50:31,779 --> 00:50:34,323
நீயும் அதை நம்பறேன்னு சொல்லாதே.

523
00:50:48,671 --> 00:50:50,423
பெண்களுக்குதான் இது நடக்குது.

524
00:51:11,027 --> 00:51:12,779
தகவல், நான் எப்படி உதவலாம்?

525
00:51:12,862 --> 00:51:15,740
கோல்டன் கௌண்டி எழுத்தர் அலுவலக
எண் கிடைக்குமா?

526
00:51:15,823 --> 00:51:16,908
ப்ளீஸ் காத்திருங்க.

527
00:51:26,292 --> 00:51:28,878
இன்னொரு ஊரில்
அது நடந்திருக்கு

528
00:51:39,347 --> 00:51:41,057
கிளம்பும் போது பூட்டிட்டு போ.

529
00:52:22,014 --> 00:52:25,226
கோல்டன் வேலி,
சிஏ 1968 - '76

530
00:52:25,309 --> 00:52:27,645
கோல்டன் வேலி
பிறப்பு விகிதங்கள்

531
00:52:41,701 --> 00:52:42,827
இது கர்ப்பிணி பெண்களுக்கு நடக்குது

532
00:52:46,205 --> 00:52:48,749
ஆர்பிங்டன், சிஏ 1968 - '76
பிறப்பு விகிதங்கள்

533
00:52:51,294 --> 00:52:53,337
இன்னொரு ஊரா???
ஆர்பிங்டன்

534
00:52:54,672 --> 00:52:58,009
வெள்ளை
ஹிஸ்பானிக்

535
00:53:08,060 --> 00:53:10,521
ஹிஸ்பானிக் பிறப்பு விகிதங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டது

536
00:53:19,322 --> 00:53:24,744
கிளம்பும் முன் பைகள் சோதிக்கப்படும்

537
00:53:57,902 --> 00:54:00,237
குடும்ப பெயர் - எஃப்
097-010117

538
00:54:00,321 --> 00:54:02,531
இறப்பு ஆவணம் 1971 கோல்டன் கௌண்டி
இறப்பு ஆவணம் 1973 கோல்டன் கௌண்டி

539
00:54:02,615 --> 00:54:04,659
இறப்பு ஆவணம் 1974 கோல்டன் கௌண்டி

540
00:54:14,585 --> 00:54:15,920
பதிவு

541
00:54:21,175 --> 00:54:26,555
அக்டோபர் 11 தெரெஸா ஃப்ளோரெஸ்
ஜூன் 11, 1955

542
00:54:26,639 --> 00:54:28,057
தெரெஸா இறந்துட்டா.

543
00:54:28,557 --> 00:54:32,269
பைத்தியக்காரத்தனமா இருக்கலாம்,
ஆனால் அவ எனக்கு காட்ட நினைக்கிறா.

544
00:54:32,353 --> 00:54:35,189
இந்த பூச்சிக்கொல்லிகள்
கர்ப்பிணி பெண்களுக்கு விஷம்.

545
00:54:37,733 --> 00:54:42,571
கௌண்டி க்ளர்க் அலுவலகம் போனேன். ஹிஸ்பானிக்
பெண்களுக்கு இங்கே குழந்தைகள் பிறக்கலை!

546
00:54:43,781 --> 00:54:44,949
யோசி, பெதோ!

547
00:54:46,033 --> 00:54:48,035
மெக்சிகன் குழந்தைகள் எல்லாம் எங்கே?

548
00:54:49,078 --> 00:54:50,663
நாம ஹைமேயை சந்தித்தோம்,

549
00:54:51,497 --> 00:54:53,582
அவ்வளவுதான்! அவ்வளவுதான்.

550
00:54:54,834 --> 00:54:59,005
அதைப்பற்றி எர்னெஸ்டோவிடம் பேசினேன்.
அது சாபம்னு சொல்றான்.

551
00:55:03,509 --> 00:55:06,554
பக்கத்துல ஆர்பிங்டன் என்ற
இன்னொரு ஊர்லயும் நடந்தது.

552
00:55:08,431 --> 00:55:10,433
ஊர் மகப்பேறு மருத்துவமனையை அழைத்தேன்.

553
00:55:11,434 --> 00:55:13,644
அவங்க என்ன சொல்லுவாங்கன்னு நினைச்சே?

554
00:55:14,437 --> 00:55:17,440
கடந்த சில வருடங்களில் ஆர்பிங்டன்
எண்கள் மேம்பட்டன.

555
00:55:18,983 --> 00:55:21,360
பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சிருந்தா?

556
00:55:23,654 --> 00:55:26,657
எல்லாரும் சொல்வது சரின்னு நமக்கு தெரிஞ்சா?

557
00:55:27,033 --> 00:55:29,035
அது சாபம்னு.

558
00:55:31,412 --> 00:55:33,456
இது தெரிய ஒரு வழி இருக்கு.

559
00:55:44,341 --> 00:55:46,343
நான் இதை செய்யறேன்னு நம்ப முடியலை.

560
00:56:02,860 --> 00:56:05,154
-முடிஞ்சுது.
-சரி.

561
00:56:05,237 --> 00:56:06,906
இது மேல படுத்துக்கோ.

562
00:56:07,740 --> 00:56:09,909
காலையில இன்னும் தெரியும்.

563
00:56:14,455 --> 00:56:16,248
அதைப்பற்றி யோசிக்காதே.

564
00:56:53,369 --> 00:56:54,495
பெதோ.

565
00:57:27,194 --> 00:57:29,280
உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு.

566
00:58:52,905 --> 00:58:54,949
பெதோ! தீ!

567
00:59:41,203 --> 00:59:42,496
நீ என்ன...

568
00:59:46,417 --> 00:59:47,334
நீ.

569
00:59:49,086 --> 00:59:52,089
நீ இதை செய்தே! தெரெஸாவை திரும்ப
அழைச்சிட்டு வந்தே.

570
00:59:52,172 --> 00:59:54,383
டியானா. கத்தியை கீழே போடு.

571
00:59:54,466 --> 00:59:57,511
உன் பாதுகாப்புக்காக செய்யறேன்.
உனக்கு பாதுகாவலர் தேவை.

572
00:59:57,594 --> 00:59:59,138
என்னிடமிருந்து தள்ளி இரு!

573
01:00:01,932 --> 01:00:02,850
டியானா!

574
01:00:03,517 --> 01:00:04,601
என்ன செஞ்சே?

575
01:00:07,271 --> 01:00:08,439
கத்தியை கீழே போடு.

576
01:00:08,897 --> 01:00:10,816
-நான் உதவ நினைக்கிறேன்.
-வேண்டாம்.

577
01:00:11,317 --> 01:00:13,319
டியானா. டியானா.

578
01:00:13,402 --> 01:00:15,571
பேபி. பேபி, என்னைப் பார்.

579
01:00:16,697 --> 01:00:18,073
கத்தியை கீழே போடு.

580
01:00:20,701 --> 01:00:21,910
உனக்கு ரத்தம் வருது.

581
01:02:37,212 --> 01:02:38,255
தெரெஸா.

582
01:02:56,106 --> 01:02:57,691
உனக்கு என்ன வேணும்?

583
01:03:02,946 --> 01:03:04,990
இல்லை! இல்லை!

584
01:03:06,909 --> 01:03:08,285
இல்லை!

585
01:03:46,323 --> 01:03:48,242
கையெழுத்திடணும்,
திருமதி ஹெர்னான்டெஸ்.

586
01:03:48,325 --> 01:03:50,869
எனக்கு புரியலை!

587
01:03:52,746 --> 01:03:53,747
கட்டுப்பாடான அணுகல்

588
01:03:53,830 --> 01:03:55,707
குழந்தைக்காக, கையெழுத்திடணும்.

589
01:03:55,791 --> 01:04:00,379
ரஃபாயெலை கூப்பிடுங்க!
என் கணவரை அழைங்க!

590
01:04:00,462 --> 01:04:03,924
நாங்க முயற்சி பண்றோம் ஆனால் பதில் இல்லை.
மாரிசோல், கவனி.

591
01:04:04,800 --> 01:04:07,302
சொல்றதை கவனி.
உனக்கு உதவ முயற்சிக்கிறேன்.

592
01:04:07,386 --> 01:04:10,681
கையெழுத்து இல்லைன்னா மருத்துவர் இல்லை.
குழந்தைக்கு பிரச்சினை.

593
01:04:11,098 --> 01:04:13,308
அவன் சாகலாம். இறக்கலாம்.

594
01:04:14,935 --> 01:04:17,688
கையெழுத்து இல்லைன்னா
நீங்க இருவரும் இறக்கலாம்.

595
01:04:17,771 --> 01:04:21,775
இருவரும், இருவரும் இறக்கலாம்.
கையெழுத்து போடுங்க!

596
01:04:23,193 --> 01:04:24,111
இங்க.

597
01:04:26,154 --> 01:04:28,532
நன்றி. நல்லது. அது நல்லது.

598
01:04:34,580 --> 01:04:35,497
ஹலோ?

599
01:04:36,164 --> 01:04:37,040
பெதோ?

600
01:04:37,124 --> 01:04:40,794
-டியானா? முழுச்சிட்டு என்ன பண்றே?
-பயமா இருக்கு.

601
01:04:41,378 --> 01:04:44,965
-என்ன நடக்குது?
-அறிகுறிகள் மோசமாயிட்டு இருக்கு.

602
01:04:45,465 --> 01:04:46,842
தடிப்பு மோசமா இருக்கு.

603
01:04:47,718 --> 01:04:48,969
மாயத்தோற்றங்கள் வருது.

604
01:04:49,720 --> 01:04:51,221
செவிலியிடம் சொன்னியா?

605
01:04:53,432 --> 01:04:54,391
இல்லை.

606
01:04:57,686 --> 01:04:59,229
இன்றிரவு ஏதோ பார்த்தேன்.

607
01:05:02,983 --> 01:05:04,818
மாரிசோல் வலியில கத்தினா,

608
01:05:04,901 --> 01:05:07,529
கையெழுத்திட செவிலி கேரல்
கட்டாயப்படுத்தினாங்க.

609
01:05:09,823 --> 01:05:10,866
அது என்னது?

610
01:05:14,328 --> 01:05:15,370
எனக்கு தெரியலை.

611
01:05:16,455 --> 01:05:17,706
எனக்கு தெரியலை.

612
01:05:18,123 --> 01:05:21,335
ஆனால் நாளைக்கு வேலைக்கு பிறகு
நீ ஆர்பிங்டன் போகணும்.

613
01:05:22,753 --> 01:05:24,921
நீ அங்கிருக்கிற மருத்துவரிடம் பேசி

614
01:05:25,005 --> 01:05:27,758
பூச்சிக்கொல்லிகள் பற்றி
என்ன தெரியும்னு கேள்.

615
01:05:39,353 --> 01:05:41,313
நம்ம குழந்தையை காப்பாத்தணும்.

616
01:08:04,998 --> 01:08:10,253
ஆர்பிங்டன்
மெடிகல் மருத்துவமனை

617
01:08:10,337 --> 01:08:14,174
முதல்முறையா இந்த ஊரில் மக்கள் தொகை
ஏற்றத்தாழ்வுகளை கேள்விப்படறேன்.

618
01:08:14,883 --> 01:08:18,136
கர்ப்பிணி பெண்களிடம் இந்த
அறிகுறிகளை பார்த்தீங்களா?

619
01:08:18,220 --> 01:08:21,640
என் பதவிக்காலத்தில் இல்லை,
ஆனால் இது என் காலத்துக்கு முன்.

620
01:08:23,475 --> 01:08:24,768
அதை பார்க்க முடியுமா?

621
01:08:26,436 --> 01:08:30,190
துரதிர்ஷ்டவசமாக, என் முன்னோடி
நோயாளி பதிவுகளை விட்டுப் போகலை.

622
01:08:34,069 --> 01:08:36,404
அவருடைய தொடர்பு தகவல் தர்றேன்.

623
01:08:44,579 --> 01:08:47,833
டாக்டர் டபுள்யூ. பெல் எம்டி
9932 ஏழாவது அவென்யூ - கோல்டன் வேலி, சிஏ

624
01:08:51,127 --> 01:08:52,587
தொலைபேசியை உபயோகிக்கலாமா?

625
01:09:09,896 --> 01:09:10,939
ஹலோ.

626
01:09:13,316 --> 01:09:14,901
பெதோ, என்ன பிரச்சினை?

627
01:09:17,195 --> 01:09:18,154
என்ன?

628
01:09:38,842 --> 01:09:40,176
கடவுளே.

629
01:11:06,221 --> 01:11:10,308
டாக்டர் வெல்டன் பெல், எம்டி
நார்த்வெஸ்ட் மகப்பேறு மருத்துவமனை

630
01:11:29,911 --> 01:11:31,329
கருத்தடைக்கு ஒப்புதல்

631
01:11:31,413 --> 01:11:35,166
நோயாளி - கேப்ரியலா ஆர்டிஸ்
கோல்டன் வேலி மகப்பேறு மருத்துவமனை நிறுவனம்

632
01:12:13,788 --> 01:12:16,875
கருத்தடைக்கு ஒப்புதல்

633
01:12:23,757 --> 01:12:24,883
முதல் குழந்தையா?

634
01:12:26,634 --> 01:12:27,844
ஆமாம்.

635
01:12:31,973 --> 01:12:33,975
உனக்கு குழந்தைகள் உண்டா?

636
01:12:35,435 --> 01:12:36,519
இன்னும் இல்லை.

637
01:12:37,812 --> 01:12:38,980
ஆனால் என்றாவது.

638
01:12:40,815 --> 01:12:41,816
நான் நம்பறேன்.

639
01:12:44,152 --> 01:12:46,154
பெதோக்கும் எனக்கும் இரண்டாவது வேணும்.

640
01:12:48,156 --> 01:12:49,783
அதிகம் நல்லது.

641
01:12:54,204 --> 01:12:58,083
நோயாளி - ரோசா
பால் பெண் - குழந்தைகள் 1

642
01:12:58,166 --> 01:13:00,085
உன் குடும்ப ஆரோக்கியத்துக்கு.

643
01:13:02,253 --> 01:13:03,922
உனக்கு, ரோசா?

644
01:13:05,215 --> 01:13:07,092
இன்னும் பெற ஆசையா?

645
01:13:09,344 --> 01:13:12,388
ஆமாம். ஆனால், வாய்ப்பில்லை.

646
01:13:15,850 --> 01:13:17,268
வருந்தறேன்.

647
01:13:22,690 --> 01:13:23,983
ஹைமிடோ இருக்கான்.

648
01:13:24,984 --> 01:13:26,778
நாங்க அதிர்ஷ்டசாலிகள்.

649
01:13:29,364 --> 01:13:31,157
நேற்றிரவை பற்றி நினைவு இல்லை

650
01:13:34,744 --> 01:13:37,122
மருந்து வலுவா இருந்தது.

651
01:13:40,416 --> 01:13:41,668
உன் முதல் குழந்தையா?

652
01:13:43,670 --> 01:13:44,712
ஆமாம்.

653
01:13:45,630 --> 01:13:46,840
எனக்கு இரண்டாவது.

654
01:13:49,384 --> 01:13:50,844
எனக்கு இன்னொன்று வேணும்.

655
01:14:00,812 --> 01:14:03,314
நோயாளி - தெரெஸா ஃப்ளோரெஸ்
பால் பெண் - குழந்தைகள் 0

656
01:14:07,861 --> 01:14:12,740
இறந்தவர். ட்யூபல் லிகேஷனில் பிரச்சினைகள்

657
01:14:19,122 --> 01:14:20,456
வருந்தறேன்.

658
01:14:32,302 --> 01:14:34,053
என் குழந்தை.

659
01:14:37,056 --> 01:14:38,725
என் குழந்தை.

660
01:14:55,825 --> 01:14:58,077
நான் ஏன் ஆபரேஷன் அறையில் இருக்கேன்?

661
01:15:00,872 --> 01:15:03,458
வேண்டாத இடத்தில் மூக்கை நுழைச்சே.

662
01:15:04,584 --> 01:15:08,421
மற்ற பெண்கள் போல நீயும் அந்த
சாபத்தை நம்பி இருக்கணும்.

663
01:15:11,633 --> 01:15:13,593
-தொற்றுநோய் இருக்கையில்...
-இல்லை!

664
01:15:13,676 --> 01:15:15,511
...அதை குணப்படுத்துவது என் கடமை.

665
01:15:15,595 --> 01:15:16,804
நிறுத்து!

666
01:15:18,139 --> 01:15:20,683
அரக்கனே!

667
01:15:22,268 --> 01:15:23,937
இதை செய்ய முடியாது!

668
01:15:25,271 --> 01:15:28,399
துரதிர்ஷ்டவசமா, உனக்கு வலி வந்து

669
01:15:28,483 --> 01:15:32,070
குழந்தை பிறக்கும் போது
சிக்கலாகி இறந்துட்டே.

670
01:15:32,528 --> 01:15:34,030
ஆனால் நல்ல செய்தி இருக்கு.

671
01:15:34,113 --> 01:15:35,698
குழந்தையை காப்பாற்றுவேன்.

672
01:15:35,782 --> 01:15:39,953
வேறு யாரிடமாவது இதைப்பற்றி
சொன்னியான்னு தெரியணும்.

673
01:15:41,621 --> 01:15:45,375
-கேரல்! அவன் எங்கே?
-வந்துட்டே இருக்கான்.

674
01:15:45,458 --> 01:15:48,294
அவங்களை இங்கே கூட்டி வந்து
குழப்பிட்டான். வாயுவை எடு.

675
01:15:49,128 --> 01:15:51,839
வேணாம். வேணாம்!

676
01:15:51,923 --> 01:15:53,841
உதவி! உதவுங்க!

677
01:15:53,925 --> 01:15:57,679
நிறுத்து! நிறுத்து. நிறுத்து.

678
01:16:01,516 --> 01:16:03,518
ப்ளீஸ், இதை நீங்க செய்ய வேண்டாம்.

679
01:16:04,227 --> 01:16:08,022
இதை செய்ய வேண்டாம்.
என் குழந்தையை எதுவும் செய்யாதீங்க.

680
01:16:10,233 --> 01:16:11,442
பெதோ!

681
01:16:14,028 --> 01:16:15,154
பெதோ!

682
01:16:23,496 --> 01:16:24,497
வேணாம்!

683
01:16:46,602 --> 01:16:47,520
வா, நாம போகலாம்.

684
01:16:47,603 --> 01:16:49,605
-பரவாயில்லை. பரவாயில்லை.
-சரி.

685
01:16:59,949 --> 01:17:01,701
இல்லை!

686
01:17:08,624 --> 01:17:13,504
உன் மருந்தை குடிச்சிட்டு
உன் வேலையை ஏன் பார்க்கலை?

687
01:17:16,466 --> 01:17:17,675
மருந்தா?

688
01:17:18,843 --> 01:17:20,386
ஆக்வா ஃப்ரெஸ்காவா?

689
01:17:21,637 --> 01:17:23,473
பூச்சிக்கொல்லிகள் இல்லை.

690
01:17:24,140 --> 01:17:25,808
நீ எங்களுக்கு விஷம் வெச்சே.

691
01:17:25,892 --> 01:17:28,227
வெட்பேக்ஸ் தானா மருத்துவமனை
வர மாட்டாங்க.

692
01:17:29,187 --> 01:17:30,688
கொஞ்சம் தூண்டுதல் தேவை.

693
01:17:30,772 --> 01:17:32,190
ஒரு தடிப்பு,

694
01:17:32,940 --> 01:17:34,233
தலைவலிகள்.

695
01:17:34,817 --> 01:17:38,738
டாக்டர் பெல், அவர் சொன்னது சரி.
இந்த குழந்தைகளை சமாளிக்க முடியாது.

696
01:17:41,282 --> 01:17:42,700
எனக்கு உதவு!

697
01:18:49,642 --> 01:18:52,019
பெதோ. பரவாயில்லை.

698
01:18:52,103 --> 01:18:54,605
பரவாயில்லை. என்னோட இரு, என்னோட இரு.

699
01:18:54,689 --> 01:18:58,359
என்னோட இரு, என்னோட இரு!
பரவாயில்லை, பரவாயில்லை.

700
01:19:00,153 --> 01:19:03,281
பரவாயில்லை, பரவாயில்லை

701
01:19:21,799 --> 01:19:23,468
உன்னை பார்க்க வந்திருக்காங்க.

702
01:19:24,886 --> 01:19:28,764
-வந்துட்டியா!
-அழகா இருக்கே.

703
01:19:30,266 --> 01:19:32,643
-இதெல்லாம் என்ன?
-இவை அம்மாவிடமிருந்து.

704
01:19:34,395 --> 01:19:37,607
தானே கொடுக்கணும்னு நினைச்சாங்க,
காத்திருக்க முடியலை.

705
01:19:37,690 --> 01:19:39,400
நாளைக்கு வர்றாங்க.

706
01:19:39,859 --> 01:19:41,068
அவங்களை தெரியுமே.

707
01:19:43,279 --> 01:19:44,614
ஹேய், அழகா.

708
01:19:46,240 --> 01:19:47,617
குட்டி ஹோஸே.

709
01:19:47,700 --> 01:19:50,786
அழகு. அவன் ப்ரேஸ்லெட் பிடிக்குது.

710
01:19:50,870 --> 01:19:52,163
அது இருக்கட்டும்.

711
01:20:01,047 --> 01:20:02,131
அப்ப இதுதானா?

712
01:20:02,215 --> 01:20:05,259
மாதரேஸ் அல் மால் டியெம்போ, புயெனா காரா
டியானா எழுதியது

713
01:20:12,975 --> 01:20:15,353
துன்பமான நேரத்தில், தைரியமா இருக்கணும்.

714
01:20:15,811 --> 01:20:19,357
சரியானதுக்கு சண்டையிட நினைவூட்டல்,
எவ்வளவு பயமாக இருந்தாலும்.

715
01:20:21,901 --> 01:20:24,862
-அது யார்? அது யார்?
-ஹாய்.

716
01:20:25,530 --> 01:20:27,448
அது யார், பேபி?

717
01:20:38,042 --> 01:20:43,422
புனித அகாதா மகப்பேறு மையம்
லாஸ் ஏஞ்சலஸ், சிஏ

718
01:20:49,804 --> 01:20:54,308
என் குழந்தையை பார்த்துக்கோங்க.

719
01:20:56,477 --> 01:21:01,023
கவலை படாதே.
உன்னை நல்லா பார்த்துப்போம். சரியா?

720
01:21:01,107 --> 01:21:04,694
நீ இதுல கையெழுத்து போடணும். ஆமாம்.

721
01:21:08,948 --> 01:21:13,369
ஆமாம், நல்லது, நன்றி.
அது நல்லது. அது நல்லது.

722
01:21:16,455 --> 01:21:17,665
சுவாசி.

723
01:21:19,000 --> 01:21:20,209
சுவாசி.

724
01:21:30,720 --> 01:21:32,138
20ம் நூற்றாண்டு முழுவதும்,

725
01:21:32,221 --> 01:21:35,391
64,000க்கும் மேற்பட்ட ஆண், பெண்களுக்கு
கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது

726
01:21:35,474 --> 01:21:40,021
அமெரிக்கா முழுவதும் தேசிய இன ஆக்க
மேம்பாட்டு மையத்தின் பங்காக.

727
01:21:41,439 --> 01:21:43,107
அவர்கள் தங்கள் இனவெறியை வெளிப்படுத்தினர்,

728
01:21:43,190 --> 01:21:47,486
மரபணு தகுதியற்றவர் என தோன்றியவர்களின்
மகப்பேறு உரிமைகளை கட்டுப்படுத்தி.

729
01:21:48,529 --> 01:21:50,740
1975ல், ஒரு மெக்சிகன்
குடியேற்ற பெண்கள் குழு

730
01:21:50,823 --> 01:21:54,327
லாஸ் ஏஞ்சலஸின் ஒரு மருத்துவமனைக்கு எதிராக
க்ளாஸ் ஆக்ஷன் வழக்கு போட்டது,

731
01:21:54,410 --> 01:21:56,287
தங்கள் அனுமதி இன்றி
கருத்தடை செய்யப்பட்டதாக.

732
01:21:58,205 --> 01:22:02,627
வழக்கு தோல்வி அடைந்தது.

733
01:22:04,253 --> 01:22:06,130
சமீபத்தில், இந்த வழக்கம் மீண்டும்
பொது வெளிச்சத்துக்கு வந்தது

734
01:22:06,213 --> 01:22:08,215
ஜார்ஜியாவில்
ஐசிஈ தடுப்புக்காவல் மையத்தில்.

735
01:22:08,299 --> 01:22:10,009
இது ஒரு அரசு மையம்...

736
01:22:10,092 --> 01:22:11,218
ஏதாவது
சொல்லுங்க

737
01:22:11,302 --> 01:22:16,057
...அவர்கள் பராமரிப்பிலும், காவலிலும்
இருந்த புலம்பெயர் பெண்களின்

738
01:22:16,140 --> 01:22:18,976
இனப்பெருக்க உறுப்புகளை
மருத்துவ காரணங்களின்றி

739
01:22:19,060 --> 01:22:22,146
நீக்கிய மருத்துவரிடம்
அனுப்பியதாக குற்றச்சாட்டு.

740
01:22:22,980 --> 01:22:27,902
2020ல் இந்த திரைப்படம் எடுத்த வரையில்,

741
01:22:27,985 --> 01:22:32,657
பாதிக்கப்பட்டவர்கள் யாருக்குமே
நியாயம் கிடைக்கவில்லை.

742
01:23:23,666 --> 01:23:25,668
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

743
01:23:25,751 --> 01:23:27,753
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்



