1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:35,786 --> 00:00:40,207
இன்று, கோவிட்-19-ஐ ஒரு சர்வதேச
தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

4
00:00:40,290 --> 00:00:44,127
"வீட்டில் இருங்க, பாதுகாப்பாக
இருங்க" செயலாக்க ஆணையை வெளியிடுகிறேன்.

5
00:00:44,211 --> 00:00:46,672
...குடியிருப்பாளர்கள் அனைவரும்
வீட்டிலேயே தங்கியிருக்க

6
00:00:46,755 --> 00:00:49,424
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7
00:00:49,508 --> 00:00:53,262
இன்று மாலையில் இருந்து, நான் ஒரு
மிக எளிய கட்டளையை இடுகிறேன்.

8
00:00:53,345 --> 00:00:55,264
நீங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்.

9
00:00:57,558 --> 00:01:02,354
மார்ச் 2020. ஒரு உயிர்கொல்லும் வைரஸ்
உலகமெங்கும் பரவுகிறது.

10
00:01:02,437 --> 00:01:04,982
முடிந்தால் வீட்டிலேயே இருங்கள்

11
00:01:05,065 --> 00:01:08,819
ஓரே இரவில், நம் வாழ்க்கை நிற்க
வேண்டியதாயிற்று.

12
00:01:14,533 --> 00:01:16,201
நாம் நிற்கையில்…

13
00:01:17,536 --> 00:01:22,583
இயற்கை உலகில்
குறிப்பிடத்தக்க மாற்றங்கள் துவங்குகின்றன.

14
00:01:25,919 --> 00:01:27,546
மிக தூய்மையான காற்று.

15
00:01:29,923 --> 00:01:31,550
மிக தூய்மையான தண்ணீர்.

16
00:01:33,135 --> 00:01:38,974
விலங்குகள் பல தசாப்தாங்களாக நாம்
பார்த்திராத வழிகளில் செழிக்க தொடங்குகின்றன

17
00:01:41,894 --> 00:01:46,607
ஐந்து கண்டங்களில் பொது முடக்கம்
துவக்கத்தில் இருந்தே படம் பிடித்ததில்...

18
00:01:48,692 --> 00:01:52,154
இயற்கையின் அசாதாரணமான மறுமொழியை
நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

19
00:02:01,121 --> 00:02:04,833
புதிய வழிகளில் தனது குட்டிகளுடன் தொடர்பு
கொள்ளும் மாபெரும் கடல் உயிரினங்கள்...

20
00:02:08,920 --> 00:02:13,675
தனது குட்டிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான
சாத்தியங்களை உருமாற்றிய சிறுத்தைகள்...

21
00:02:14,343 --> 00:02:17,429
அவள் ஒரு தாயாக இருப்பதற்கு இது தான்
சிறந்த நேரம்.

22
00:02:18,430 --> 00:02:24,019
அழிந்துவரும் பென்குயின்கள்
முன்பு எப்போதையும் விட பெருகி வருகின்றன.

23
00:02:26,939 --> 00:02:32,152
வனவிலங்குகளின் உலகிற்குள்ளும் அவற்றின்
வாழ்க்கைக்குள்ளும் எட்டிப் பார்த்து

24
00:02:32,778 --> 00:02:37,199
அனைத்தும் எப்படியுள்ளது என்று நாம்
தெரிந்துக் கொள்ள இது ஒரு தனி சந்தர்ப்பம்.

25
00:02:37,950 --> 00:02:41,578
மாபெரும் விகிதாச்சாரங்களின்
ஒரு உலகளாவிய பரிசோதனை.

26
00:02:43,163 --> 00:02:47,459
இது தான் பூமி மாறிய வருடம்.

27
00:03:00,222 --> 00:03:04,351
டேவிட் அட்டென்பரோவின் வர்ணனையில்

28
00:03:05,894 --> 00:03:11,483
பொது முடக்கம் தொடங்கிய சில
மணிநேரங்களிலேயே அமைதியை நாம் கவனித்தோம்.

29
00:03:11,567 --> 00:03:12,818
ரேடியோ சிட்டி மியூசிக் ஹால்

30
00:03:14,236 --> 00:03:19,199
உலக போக்குவரத்து இரைச்சல் 70%
வரை வீழ்ச்சி அடைந்திருக்கையில்,

31
00:03:19,283 --> 00:03:22,452
ஒரு புதிய பாடல் ஒலி கேட்கிறது...

32
00:03:25,581 --> 00:03:26,999
...பறவையின் பாடல்.

33
00:03:31,503 --> 00:03:33,547
சான் ஃபிரான்சிஸ்கோ
அமெரிக்கா

34
00:03:33,630 --> 00:03:35,257
மாநகர மக்கள் தொகை 4.7 மில்லியன்

35
00:03:35,340 --> 00:03:37,426
இந்த வெள்ளை கிரீடமுடைய குருவிகள்

36
00:03:37,509 --> 00:03:41,346
அதிசயத்தக்க ஒன்றை செய்து, இந்த அமைதிக்கு
ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன.

37
00:03:43,640 --> 00:03:46,476
கோல்டன் கேட் பிரிட்ஜின் நிழலில் வாழ்வதால்,

38
00:03:46,560 --> 00:03:50,480
அவை பாடுவது கார்களின் சத்தத்தில்
மழுங்கடிக்கப்பட்டன.

39
00:03:52,482 --> 00:03:57,362
ஆனால் 1950களுக்கு பிறகு போக்குவரத்து
இங்கே மிக குறைவாக இருப்பதால்,

40
00:03:58,614 --> 00:04:04,244
ஆய்வாளர்கள் குருவிகளின் இனசேர்க்கைக்கான
அழைப்பிலுள்ள புதிய ஒலிகளை கேட்டு வியந்தனர்

41
00:04:06,788 --> 00:04:11,877
பல வருடங்களுக்கு அந்த பறவைகள் மிக சிறப்பாக
இனப்பெருக்கம் செய்யும் என நம்பப்படுகிறது.

42
00:04:17,548 --> 00:04:20,552
குறைந்து வருவது இரைச்சல் அளவு மட்டுமில்லை.

43
00:04:22,304 --> 00:04:28,310
உலகெங்கிலும் உள்ள காற்று மாசுபாடு குறையும்
வேகமும் அதிர்ச்சியூட்டுகிறது.

44
00:04:30,229 --> 00:04:31,438
ஒரு சில நாட்களிலேயே,

45
00:04:31,522 --> 00:04:36,944
40 வருடங்களாக இல்லாத அளவிற்கு தூய்மையான
காற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காணப்படுகிறது.

46
00:04:39,112 --> 00:04:44,243
சீனா முழுவதும், வளிமண்டலத்தில் உள்ள நச்சு
வாயுகளின் அளவுகள் பாதியாக குறைந்துள்ளன.

47
00:04:46,245 --> 00:04:52,125
உலகின் மிக கடுமையான காற்று மாசுபாட்டினால்
பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான...

48
00:04:53,585 --> 00:04:56,213
இந்தியாவில் பொதுமுடக்கம் தொடங்கிய
12 நாட்களுக்கு பிறகு...

49
00:04:56,713 --> 00:04:59,216
ஜலந்தர் - இந்தியா
மக்கள் தொகை 1 மில்லியன்

50
00:04:59,299 --> 00:05:01,510
...வியப்பூட்டும் ஒரு காட்சி தெரிகிறது.

51
00:05:01,593 --> 00:05:04,471
நாங்கள் மேஜையில் அமர்ந்து காலை உணவு
சாப்பிட்டு கொண்டிருந்த போது,

52
00:05:04,555 --> 00:05:06,014
என் அப்பா அவசரமாக ஓடி வந்தார்.

53
00:05:06,098 --> 00:05:07,391
அன்ஷுல் சோப்ரா

54
00:05:07,474 --> 00:05:10,060
"மேலே வாங்க. அந்த மலைகள் தெரிகின்றன."
என்று கூறினார்.

55
00:05:10,143 --> 00:05:12,521
பயில்முறை புகைப்படக்காரர் அன்ஷுல்

56
00:05:12,604 --> 00:05:15,858
எதற்காக இந்த உற்சாகம் எல்லாம் என்று
பார்க்கச் செல்கிறார்.

57
00:05:16,817 --> 00:05:19,236
மக்கள் மாடிகளில் நின்றுக் கொண்டு,

58
00:05:19,319 --> 00:05:21,822
"ஆஹா. ஆஹா. மலைகள். மலைகள்" என்று
சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

59
00:05:21,905 --> 00:05:24,533
நான் சற்று நின்றுவிட்டு, பிறகு பார்த்தேன்.

60
00:05:27,327 --> 00:05:30,455
வானம் தெளிவாக இருந்ததால்,
வாழ்நாளில் முதல் முறையாக,

61
00:05:30,539 --> 00:05:32,124
எங்களால் இமயமலையை பார்க்க முடிகிறது.

62
00:05:33,041 --> 00:05:35,210
200 கிலோமீட்டர் தொலைவில்,

63
00:05:35,294 --> 00:05:38,046
பூமியின் மிக உயரமான மலைத்தொடர்,

64
00:05:38,130 --> 00:05:41,842
30 வருடங்களாக புகைமூட்டத்தில்
மறைந்திருந்தது,

65
00:05:41,925 --> 00:05:43,468
ஆனால் திடீரென இப்போது தெரிகிறது.

66
00:05:44,469 --> 00:05:45,888
என் கண்களை என்னால் நம்ப முடியல.

67
00:05:45,971 --> 00:05:49,725
இத்தனை காலமாக புகை மூட்டத்திற்கு பின்னால்,
இமயமலை அங்கேயே தான் இருந்திருக்கிறது.

68
00:05:51,935 --> 00:05:56,523
அன்ஷூல் எடுத்த இந்த
கணத்தின் புகைப்படம் உலகம் முழுக்க பரவியது.

69
00:05:57,608 --> 00:05:59,276
நம் இயக்கம் நின்ற கணமே,

70
00:05:59,359 --> 00:06:04,865
பூமியால் மீண்டும் சுவாசிக்க முடிந்தது
என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

71
00:06:10,495 --> 00:06:13,832
பொதுமுடக்கம் பல வாரங்களுக்கு நீடிக்கிறது.

72
00:06:13,916 --> 00:06:16,043
4 வாரங்கள்

73
00:06:16,126 --> 00:06:20,172
மற்றும் பயண தடைகள் நம்
நடமாட்டத்தை மேலும் கட்டுபடுத்துகின்றன.

74
00:06:21,131 --> 00:06:24,468
நீங்கள் எடுக்கவிருந்த விடுமுறைகளை,
ரத்து செய்து விடுங்கள்.

75
00:06:24,551 --> 00:06:27,346
பயணியர் எண்ணிக்கை
மற்றும் பதிவுகள் குறைந்துவிட்டன.

76
00:06:27,429 --> 00:06:29,556
வான்வழி பயணம் முற்றிலும் குறைந்துவிட்டது.

77
00:06:29,640 --> 00:06:32,726
உலகம் முழுக்க கிட்டத்தட்ட
90% குறைந்துவிட்டது.

78
00:06:33,519 --> 00:06:35,187
ஏப்ரல் 2020,

79
00:06:35,270 --> 00:06:40,526
கடந்த ஆண்டு இதே மாதம் வருகை தந்த
சர்வதேச சுற்றுலா பயணிகளை விட

80
00:06:40,609 --> 00:06:42,778
114 மில்லியன் பேர் குறைவாக வந்துள்ளனர்.

81
00:06:44,571 --> 00:06:50,827
ஸ்பெயினில், வருகையாளர்களின் எண்ணிக்கை ஏழு
மில்லியனில் இருந்து பூஜ்ஜியமானது.

82
00:06:53,664 --> 00:06:55,666
ஃப்ளாரிடா - அமெரிக்கா
மக்கள் தொகை 22 மில்லியன்

83
00:06:55,749 --> 00:07:00,546
ஃப்ளாரிடாவில், வசந்தகால விடுமுறையின் போது
கூட்டம் அலைமோதுகிற கடற்கரைகள்...

84
00:07:01,505 --> 00:07:03,131
விரிச்சோடி காணப்படுகின்றன.

85
00:07:06,385 --> 00:07:11,056
அழிந்துவரும் ஒரு கடற்வாழ் உயிரினத்திற்கு
தன் இனத்தை பெருக்கிக் கொள்வதற்கான

86
00:07:11,139 --> 00:07:12,933
வாய்ப்பாக இது இருக்கக் கூடுமா?

87
00:07:21,066 --> 00:07:24,611
ஒவ்வொரு இரண்டு அல்லது
மூன்று வருடங்களில்,

88
00:07:24,695 --> 00:07:27,739
பெண் ஆமைகள் தாங்கள் முட்டைகளில் இருந்து
குஞ்சாக வெளிவந்த கடற்கரைகளுக்கு

89
00:07:27,823 --> 00:07:29,658
தங்களின் சொந்த முட்டைகளையிட திரும்பும்.

90
00:07:32,077 --> 00:07:36,498
உலகம் முழுக்க, ஆமைகளின் எண்ணிக்கை
மிக அதிகமாக குறைந்து வருகிறது,

91
00:07:36,582 --> 00:07:41,128
ஏனெனில் மக்கள் கூட்டமுள்ள கடற்கரைகளில்
முட்டையிட அவை தயக்கம் காட்டியதும் காரணம்.

92
00:07:46,091 --> 00:07:47,301
ஆனால் இந்த ஆண்டு...

93
00:07:48,760 --> 00:07:49,970
வித்தியாசமானது.

94
00:07:53,140 --> 00:07:56,518
உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுடன் பணிபுரியும்
எங்களின் கேமராமேன்,

95
00:07:56,602 --> 00:07:59,938
அதிர்ஷ்டவசமாக இங்கேயுள்ள
ஜூனோ கடற்கரையில்...

96
00:08:01,190 --> 00:08:05,819
உலகின் மிக அடர்த்தியான பெருந்தலை கடலாமை
முட்டையிடும் இடங்களில் ஒன்றைபடம்பிடித்தார்

97
00:08:10,866 --> 00:08:12,826
இனப்பெருக்க பருவம் தொடங்கியதும்,

98
00:08:14,578 --> 00:08:18,081
இந்த பெண் ஆமை தன் வாழ்க்கையில்
முதல் முறையாக

99
00:08:18,916 --> 00:08:21,752
நிம்மதியாக முட்டையிட முடிகிறது.

100
00:08:38,018 --> 00:08:40,020
பின்தொடர்ந்த வாரங்களில்,

101
00:08:40,102 --> 00:08:42,397
நூற்றுக்கணக்கான ஆமைகளுக்கும்
மேல் அதை செய்தன.

102
00:08:47,694 --> 00:08:50,572
முட்டையிடும் ஆமைகளுக்கு
பெரிய பிரச்சினையாக

103
00:08:50,656 --> 00:08:53,659
நீண்ட காலமாக கருதப்பட்டது
மனித இடையூறு தான்.

104
00:08:56,286 --> 00:09:00,374
ஆனால் அறிவியலாளர்களால் அதன் தாக்கத்தை

105
00:09:00,457 --> 00:09:02,459
துல்லியமாக அளவிட முடிந்தது
இதுவே முதல் முறை.

106
00:09:08,006 --> 00:09:11,260
ஒவ்வொரு காலையும்,
இந்த ஆராய்ச்சியாளர்களின் குழு

107
00:09:11,343 --> 00:09:14,972
முட்டையிடும் இடத்தைச் சென்றடையும்
ஆமை வழித்தடங்களை எண்ணினார்கள்.

108
00:09:18,350 --> 00:09:20,185
கடந்த பத்து ஆண்டுகளில்,

109
00:09:20,269 --> 00:09:23,438
பெருந்தலை ஆமைகள் முட்டையிடுவதன்
சராசரி வெற்றி விகிதம்

110
00:09:23,522 --> 00:09:26,650
வெறும் 40 சதவீதத்திற்கு குறைந்தது.

111
00:09:27,401 --> 00:09:31,864
கடற்கரை தங்களுக்கு மட்டுமே என்றானதில்,
அவை இதற்கு மேல் வெற்றிகரமாக இருந்ததுண்டா?

112
00:09:32,614 --> 00:09:34,783
கடற்கரைகளில் மனிதர்கள்
அனுமதிக்கப்படாத போது,

113
00:09:34,867 --> 00:09:38,412
வெற்றி விகிதம் 61% ஆக உயர்ந்தது, நாங்கள்
பார்த்ததிலேயே இதுதான் மிக உயர்ந்த விகிதம்.

114
00:09:38,495 --> 00:09:39,955
டாக்டர் ஜஸ்டின் பெர்ரால்ட்
ஆமை ஆராய்ச்சியாளர்

115
00:09:41,707 --> 00:09:44,376
இது ஒரு வியத்தகு முன்னேற்றம்.

116
00:09:51,425 --> 00:09:56,138
ஒவ்வொரு கூடுதலான கூட்டில் இருந்தும்
ஏறக்குறைய நூறு குஞ்சுகள் வெளிவரும்,

117
00:09:56,221 --> 00:10:00,767
அவை ஒவ்வொன்றுமே இனப்பெருக்கம் செய்யக்
கூடிய வளர்ந்த ஆமையாக உருவாக முடியும்.

118
00:10:03,145 --> 00:10:06,565
கடற்கரைகள் மூடப்பட்டதால்,
இந்த விலங்குகள் பல லட்ச ஆண்டுகளாக தாங்கள்

119
00:10:06,648 --> 00:10:09,109
செய்து வந்த ஒன்றை, மனித நடமாட்டம்
இருந்த போது செய்ததை விட

120
00:10:09,943 --> 00:10:13,614
தற்போது மிக வெற்றிகரமாகவே
அதை செய்ய முடிந்தது.

121
00:10:42,226 --> 00:10:44,478
6,000 கிலோமீட்டர் தொலைவில்,

122
00:10:44,561 --> 00:10:46,355
அமெரிக்காவின் மேற்கு கரையில்...

123
00:10:49,900 --> 00:10:54,780
அலைகளின் கீழே நிலவும் ஒரு புதிய அமைதி
கடல்வாழ் பெரிய மிருகங்களுக்கு

124
00:10:55,697 --> 00:10:57,824
ஒரு வாய்ப்பை தருகிறது.

125
00:10:59,993 --> 00:11:01,995
தென்கிழக்கு அலாஸ்கா
அமெரிக்கா

126
00:11:02,079 --> 00:11:03,580
வருடாந்திர பார்வையாளர்கள்
1.3 மில்லியன்

127
00:11:03,664 --> 00:11:07,334
ஒவ்வொரு ஆண்டும், 10,000 கூன்முதுகு
திமிங்கிலங்களுக்கு மேல்

128
00:11:07,417 --> 00:11:08,710
ஹவாயிலிருந்து...

129
00:11:10,796 --> 00:11:14,633
அலாஸ்காவில் உள்ள இந்த விரிகுடாக்களுக்கு
இரைத்தேடி வருகின்றன.

130
00:11:23,183 --> 00:11:25,769
வழக்கமாக, வருடத்திற்கு ஒரு மில்லியன்
வருகையாளர்களை கொண்டு வரும்

131
00:11:25,853 --> 00:11:29,690
மிகப்பெரிய கப்பல்களுடன் சேர்ந்து
அவை இந்த கடல் நீரில் பயணிக்கும்.

132
00:11:36,280 --> 00:11:39,366
ஆனால் தற்போது, ஒரு கப்பல் கூட
ஓடாத நிலையில்...

133
00:11:40,284 --> 00:11:45,163
25 மடங்கு அதிகமான அமைதி
தண்ணீருக்கு அடியில் நிலவுகிறது.

134
00:11:46,832 --> 00:11:51,837
இந்த நிசப்தத்தில், அறிவியலாளர்கள்
நீருக்கடியில் பயன்படுத்தும் மைக்கை கொண்டு

135
00:11:51,920 --> 00:11:54,381
ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை
பதிவு செய்துள்ளனர்.

136
00:11:55,132 --> 00:11:58,427
கூன்முதுகுத் திமிங்கிலங்கள் தங்களுக்குள்
அடிக்கடி பேசிக் கொள்கின்றன...

137
00:12:00,637 --> 00:12:02,806
புதிய வழிகளிலும் பேசிக் கொள்கின்றனவாம்.

138
00:12:04,725 --> 00:12:07,144
திமிங்கிலங்கள் நீண்ட நேரம்
தங்களுக்குள் ஒலிகள் எழுப்பிக் கொள்வதை...

139
00:12:07,227 --> 00:12:08,812
கிறிஸ்டீன் கேப்ரியல்
திமிங்கில ஆராய்ச்சியாளர்

140
00:12:08,896 --> 00:12:11,315
...கேட்க உற்சாகமாகவும்,
எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது.

141
00:12:11,982 --> 00:12:14,651
ஒரு திமிங்கிலம் ஒலியெழுப்புகிறது,
அதன் பிறகு ஒரு தாயும், கன்றும்.

142
00:12:14,735 --> 00:12:16,570
அதாவது, நான் இதற்கு முன்பு அதை
கேட்டதே இல்லை.

143
00:12:18,113 --> 00:12:21,074
கூட்ட நெரிசல் உள்ள பாரில் உங்கள்
நண்பர்களுடன் பேச முயற்சி செய்வதை

144
00:12:21,158 --> 00:12:22,492
கற்பனை செய்து பாருங்கள்.

145
00:12:22,576 --> 00:12:25,162
அங்கே அது கடினம், அதிகம் பேச மாட்டீர்கள்,
கத்தினால் தான் கேட்கும்.

146
00:12:25,245 --> 00:12:26,246
டாக்டர் சூஸி டீர்லிங்க்
திமிங்கில ஆராய்ச்சியாளர்

147
00:12:26,330 --> 00:12:28,999
ஆனால் ஒரு அமைதியான காஃபி கடையில்
நீங்கள் இருக்கும் போது,

148
00:12:29,082 --> 00:12:30,751
இரைச்சல் இல்லாத அந்த இடத்தில்

149
00:12:30,834 --> 00:12:34,880
நீங்கள் நெடுநேரம், விரிவாக
உரையாட முடியும்.

150
00:12:38,842 --> 00:12:41,720
ஆனால் இன்னும் ஆச்சரியமான
ஒன்று இருக்கிறது.

151
00:12:45,182 --> 00:12:50,270
இப்போது திமிங்கிலங்களால் இன்னும் அதிக
தூரத்திற்கு இடையூறு இல்லாமல் பேச முடிகிறது

152
00:12:50,854 --> 00:12:55,067
மற்றும் இது போன்ற தாய் திமிங்கிலங்கள்
தங்கள் குட்டிகளை தனியே விட்டு செல்கின்றன.

153
00:12:55,901 --> 00:12:58,403
இது ஒரு மிக மிக அரிதான காட்சி.

154
00:13:01,823 --> 00:13:03,825
தனது குட்டி அழைத்தாலும் அது
தனக்கு கேட்கும் என்பதால்,

155
00:13:03,909 --> 00:13:09,164
தாய் திமிங்கிலத்தால் தற்போது நிம்மதியாக
இரைத்தேடிச் செல்ல முடிகிறது.

156
00:13:15,546 --> 00:13:18,841
பாலூட்டும் தாய் முடிந்தளவிற்கு அதிகமாக
உணவு உட்கொள்ள வேண்டும்,

157
00:13:20,092 --> 00:13:24,096
அதை செய்வதற்கு சிறந்த வழி, மற்ற பெரிய
திமிங்கிலங்களுடன் வேட்டையாடுவது.

158
00:13:30,143 --> 00:13:32,271
திமிங்கிலங்கள் தலைகீழாக பாய்ந்து...

159
00:13:34,439 --> 00:13:36,984
குமிழிகளாலான வட்டச்சுவர்
ஒன்றை உருவாக்கி...

160
00:13:39,152 --> 00:13:42,030
மீன்களை பெருங்கூட்டமாக
ஒன்றுத்திரட்டி நீந்தச் செய்து...

161
00:13:44,825 --> 00:13:47,786
பிறகு ஆயிரங்கணக்கான மீன்களை
ஆவலுடன் அப்படியே விழுங்கிவிடும்.

162
00:13:53,333 --> 00:13:56,545
இது இயற்கையின் மிகச்சிறந்த
அதிசய காட்சிகளில் ஒன்று.

163
00:14:10,017 --> 00:14:12,186
அமைதியான சூழல் தரும் உறுதியினால்,

164
00:14:12,269 --> 00:14:17,024
கூன்முதுகு தாய் திமிங்கிலங்கள் இது போல
அடிக்கடி ஒன்றாக சேர முடிகின்றன.

165
00:14:18,025 --> 00:14:20,402
இந்த ஆண்டு, இவை கடலில்
இடையூறின்றி இருக்கின்றன.

166
00:14:20,485 --> 00:14:24,114
அவை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில்
தங்களுக்கு வேண்டிய எதையும் செய்கின்றன.

167
00:14:24,781 --> 00:14:26,283
முந்தைய ஆண்டுகளில்,

168
00:14:26,366 --> 00:14:30,370
7 சதவிகித குட்டிகள் மட்டுமே
வளர்ந்து பெரியவை ஆகின.

169
00:14:31,538 --> 00:14:35,709
ஆனால், இந்தப் பருவத்தில், அதற்கும் மேலானவை
உயிர்பிழைக்க நிறைய வாய்ப்புள்ளது.

170
00:14:37,836 --> 00:14:40,964
திமிங்கிலங்களால் தாக்குப்பிடிக்க முடியாத
சில கடுமையான ஆண்டுகளுக்கு பின்னர்...

171
00:14:41,048 --> 00:14:42,299
ஜேனட் வில்சன்
திமிங்கில ஆராய்ச்சியாளர்

172
00:14:42,382 --> 00:14:45,761
…இந்த பெருந்தொற்று காலம் அவற்றிற்கு அதிகம்
தேவைப்பட்ட இடைவேளையை அளித்திருக்கிறது.

173
00:14:49,348 --> 00:14:54,561
நீருக்கடியில் உருவான இரைச்சல்
அளவுகளின் மாற்றம் அலாஸ்காவையும் தாண்டியது.

174
00:14:57,064 --> 00:15:02,903
முதல் மூன்று மாத பொது முடக்கதிலேயே, உலக
அளவில் கப்பல் போக்குவரத்து 17% குறைந்தது,

175
00:15:03,695 --> 00:15:07,115
அதனால் பெருங்கடல்களில் வாழ்ந்த
விலங்குகளின் வாழ்க்கை மேம்பட்டது.

176
00:15:07,199 --> 00:15:10,160
ஹுராக்கி வளைகுடா
நியூசிலாந்து

177
00:15:11,453 --> 00:15:13,539
நியூசிலாந்து டால்பின்களால்

178
00:15:13,622 --> 00:15:16,250
தங்களின் தொடர்பு கொள்ளலை மும்மடங்கு
தூரம் அதிகரிக்க முடிந்தது.

179
00:15:20,003 --> 00:15:21,338
சாலிஷ் கடல்
கனடா

180
00:15:21,421 --> 00:15:26,552
வான்கூவர் ஆராய்ச்சியாளர்கள் கப்பல்சத்தம்
நான்கு மடங்கு குறைந்ததை பதிவு செய்தனர்.

181
00:15:27,219 --> 00:15:30,264
அதனால் வேட்டை திமிங்கிலங்களால்
சோனாரை மிகவும்

182
00:15:30,347 --> 00:15:33,016
மேலும் திறமையாக பயன்படுத்தி
வேட்டையாட முடிகிறது.

183
00:15:48,407 --> 00:15:51,201
பெருந்தொற்றுக்குள் விழுந்து
மூன்று மாதங்களாகின்றன.

184
00:15:51,285 --> 00:15:52,452
3 மாதங்கள்

185
00:15:52,536 --> 00:15:57,332
அமெரிக்காவில், வேலை செய்வோரில் பாதி பேர்
வீட்டில் இருந்தபடியே செய்கின்றனர்.

186
00:15:57,416 --> 00:16:01,044
உலகம் முழுக்க, கால்வாசி தொழில்கள்
மூடப்பட்டுள்ளன.

187
00:16:03,005 --> 00:16:06,925
பார்கள், உணவகங்கள்,
காபி கடைகள் மூடியிருக்கின்றன.

188
00:16:07,885 --> 00:16:12,514
அனைத்திற்கும் பிறகு,
ரீடெயில் கடைகள் மூடியிருக்கின்றன.

189
00:16:13,599 --> 00:16:17,311
இப்போது கைவிடப்பட்டது போல
இருக்கிறது. சுற்றி யாரும் இல்லாதது போல.

190
00:16:18,395 --> 00:16:20,731
உலகின் முக்கிய நகரங்களில்,

191
00:16:20,814 --> 00:16:24,985
நடந்து செல்வோர் அளவு 90% மேல்
குறைந்துள்ளது.

192
00:16:27,196 --> 00:16:29,531
நகர மையங்கள் ஏறத்தாழ
வெறிச்சோடி இருப்பதால்…

193
00:16:29,615 --> 00:16:31,450
விலங்குகள் இப்படியான நகர வாழ்வை

194
00:16:31,533 --> 00:16:35,370
அனுகூலமாகப் பயன்படுத்தும் சிறப்பான
புகைப்படங்கள் வெளியாகின.

195
00:16:37,039 --> 00:16:39,041
செயிண்ட் லூசியா
தென்னாப்பிரிகா

196
00:16:39,124 --> 00:16:42,169
பெட்ரோல் பங்கிற்கு ஒரு நீர்யானையின் பயணம்.

197
00:16:46,173 --> 00:16:47,424
டெல் அவிவ்
இஸ்ரேல்

198
00:16:47,508 --> 00:16:50,219
உள்ளூர் பூங்காவில் மகிழ்ந்திருக்கும்
குள்ளநரிகள்.

199
00:16:53,847 --> 00:16:55,057
சாண்டியாகோ
சிலி

200
00:16:55,140 --> 00:16:58,101
ஒரு காட்டுப்பூனைக்கூட நடைப்பாதையில்
சுற்றித்திரிகிறது.

201
00:17:06,068 --> 00:17:10,196
ஆனால் ஒரு மிருகம் கைவிடப்பட்ட நகர
இடங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட

202
00:17:10,280 --> 00:17:12,657
புத்தி கூர்மையுடன்
தன்னை மாற்றிக் கொள்கின்றது.

203
00:17:16,869 --> 00:17:19,205
நாரா
ஜப்பான்

204
00:17:19,289 --> 00:17:22,084
வருடாந்திர வருகையாளர்கள் 13 மில்லியன்

205
00:17:25,253 --> 00:17:29,591
குறைந்தபட்சம் 1300 ஆண்டுகளாக
இந்த நாரா நகரம், சிகா மான்களின்

206
00:17:29,675 --> 00:17:32,845
புகலிடமாக இருந்து வந்திருக்கிறது.

207
00:17:36,223 --> 00:17:39,059
உணவுக்காக அவை நம்பியிருந்த பெரும்பாலான
மலைமுகடுகள்

208
00:17:39,142 --> 00:17:41,812
கட்டிடங்களால் அழிந்துவிட்டன.

209
00:17:41,895 --> 00:17:45,440
ஆனால் இந்தக் கூச்ச சுபாவமுள்ள விலங்குகள்
ஒரு தீர்வைக் கண்டுபிடித்தன.

210
00:17:48,735 --> 00:17:55,367
இந்த மான் நாராகோயிலுக்கு வரும் வருடாந்திர
13 மில்லியன் பார்வையாளர்களிடம் திரும்பியது

211
00:17:56,952 --> 00:17:59,955
மற்றும் கொஞ்சம் மரியாதை காட்டினால்...

212
00:18:02,082 --> 00:18:03,917
இனிமையான வெகுமதிகள் கிடைக்கும்
என கண்டுபிடித்தது.

213
00:18:08,463 --> 00:18:13,010
தவிட்டு ரொட்டிகள் அவற்றின் உணவில்
ஒரு முக்கிய பங்காகி இருந்தன.

214
00:18:22,978 --> 00:18:25,522
ஆனால் இந்தப் பெருந்தொற்று
அதை மாற்றிவிட்டது.

215
00:18:32,154 --> 00:18:35,699
அவற்றின் விருப்பமான உணவு ஒரே இரவில்
காணாமல் போய்விட்டது.

216
00:18:40,996 --> 00:18:44,208
மனிதர்கள் இல்லாமல் ரொட்டிகளும் இல்லை.

217
00:18:53,133 --> 00:18:56,678
அந்த மானுக்கு உணவு கிடைக்காமல் போவது
குறித்த கவலை நிலவுகிறது.

218
00:18:56,762 --> 00:19:00,974
ஆனால் பழைய தலைமுறை மான்களிடம்
ஒரு திட்டமிருப்பதாக தெரிகிறது.

219
00:19:06,104 --> 00:19:10,025
அவை ஒரு குழுவை, கோயில் நிலங்களை விட்டு
வெளியே வழிநடத்தின.

220
00:19:10,526 --> 00:19:12,945
தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதும்
அவற்றிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

221
00:19:21,161 --> 00:19:23,789
அவை பிரதான சாலையை
நோக்கிச் செல்கின்றன...

222
00:19:26,124 --> 00:19:29,336
நகரத்தின் மையமான கான்கிரீட்
காட்டுக்குள்ளே நுழைந்தன.

223
00:19:40,889 --> 00:19:44,643
ஆனால், அவை இந்த விரிவான நகரத்தில் உணவை
எங்கே கண்டுபிடிக்கும்?

224
00:19:52,734 --> 00:19:55,153
ஒரு இரண்டரை கிலோமீட்டர்
நடைப்பயணத்தின் பின்னர்…

225
00:19:56,989 --> 00:19:58,991
அந்தக் குழு ஓரிடத்தில் நின்றது.

226
00:20:04,454 --> 00:20:09,459
ஆளரவமற்ற அந்தப் பகுதி ஒருகாலத்தில்
அவற்றின் மேய்ச்சல் நிலமாக இருந்தது.

227
00:20:10,586 --> 00:20:12,713
நம்பமுடியாத வகையில், முதிய மான்களுக்கு

228
00:20:12,796 --> 00:20:16,592
மேய்ச்சல் நிலமாக இருந்த அந்த
இடம் நினைவில் இருந்தது.

229
00:20:23,807 --> 00:20:26,268
அது அவற்றிக்கு வேண்டிய எல்லாவற்றையும்
கொடுத்து வந்திருக்கிறது:

230
00:20:26,852 --> 00:20:30,439
புத்தம்புது புற்கள், இலைகள்
மற்றும் தாவரங்கள்.

231
00:20:35,152 --> 00:20:36,570
அடுத்து வந்த வாரங்களில்,

232
00:20:36,653 --> 00:20:41,992
அந்த நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை
காட்டிலும் எஞ்சியிருந்த நிலத்தில் மேய்ந்தன

233
00:20:44,286 --> 00:20:48,207
மனிதர்கள் இல்லாததால் மற்றொரு
அனுகூலமும் கிடைத்தது.

234
00:20:50,250 --> 00:20:55,589
மான்களை இந்த புதிய உணவு ஆரோக்கியமாக
வைத்திருப்பதை மட்டும் அல்லாமல்...

235
00:20:57,674 --> 00:21:01,678
ஆட்கள் குறைந்ததால், மான்களை கொல்லக்கூடிய
பிளாஸ்டிக் குப்பைகளும் குறைந்தன என்பதையும்

236
00:21:02,346 --> 00:21:04,056
விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

237
00:21:09,728 --> 00:21:13,273
நம்முடைய இருப்பினால் விலங்குகள்
பலனடைவது போலத் தெரிந்தாலும்...

238
00:21:16,109 --> 00:21:19,738
நிறைய விஷயங்களில் நாம் இல்லாமலேயே
அவை நன்றாக வாழ்கின்றன.

239
00:21:30,958 --> 00:21:33,085
நான்கு மாத பொது முடக்கத்திற்கு பின்னர்
நாம் திரும்பிச் சென்ற இடங்களில்...

240
00:21:33,168 --> 00:21:35,128
புயனஸ் அயர்ஸ், அர்ஜெண்டினா
மக்கள்தொகை: 15.2 மில்லியன்

241
00:21:35,212 --> 00:21:39,633
...நாம் விட்டுசென்ற இடங்கள் காட்டுயிருக்கு
புதிய வாய்ப்புகள் அளிக்கின்றன.

242
00:21:46,765 --> 00:21:48,225
அர்ஜெண்டினாவில்...

243
00:21:49,268 --> 00:21:51,562
வழக்கமாகவே அமைதியாக இருக்கும் கேபிபாரா

244
00:21:51,645 --> 00:21:55,524
தங்களின் முன்னாள் ஈரநிலங்களின் மேல்
கட்டப்பட்டுள்ள இந்த வசதியான புறநகரின்...

245
00:21:57,317 --> 00:22:00,821
கவனமாக கத்தரிக்கப்பட்ட தோட்டங்களுக்கு
செல்கின்றன.

246
00:22:04,032 --> 00:22:08,829
உண்மையில் அவற்றுக்குச் சொந்தமானதை உரிமை
கொண்டாடுவதை எதுவும் தடுக்கப்போவதில்லை.

247
00:22:27,472 --> 00:22:28,682
சரி...

248
00:22:30,392 --> 00:22:31,727
ஏறக்குறைய எதுவுமில்லை.

249
00:22:39,234 --> 00:22:44,781
நாம் எவ்வளவு காலம் காணப்படவில்லையோ அவ்வளவு
துணிச்சலாக இந்த விலங்குகள் மாறுகின்றன.

250
00:22:46,366 --> 00:22:49,995
ஆப்பிரிக்காவில் சஃபாரி சீசன்
ரத்து செய்யப்பட்டுள்ள போது...

251
00:22:50,954 --> 00:22:52,497
முமலங்கா - தென்னாப்பிரிக்கா
ஆண்டிற்கு 4.2 மில்லியன் பார்வையாளர்கள்

252
00:22:52,581 --> 00:22:55,417
...இங்குள்ள ஒரு ஆபத்தான வேட்டை மிருகம்
விதிகளை மாற்றி எழுதுகிறது.

253
00:22:58,086 --> 00:23:01,006
இந்த ஆடம்பர லாட்ஜ் வெறுமையாக
காணப்படுகிறது.

254
00:23:02,841 --> 00:23:07,554
ஆனால், புதிய விருந்தினர்கள் வரத்
தொடங்குவதற்கு அதிக நாட்கள் ஆகாது.

255
00:23:14,811 --> 00:23:18,065
வெர்வெட் குரங்குகள் குளத்தருகில் இடத்தைப்
பிடித்துக்கொண்டன.

256
00:23:24,112 --> 00:23:26,615
அதே நேரம் இம்பாலா மற்றும்
நயாலா ஆண்டிலோப்கள்,

257
00:23:27,407 --> 00:23:29,993
சாலட் பாரில் தங்கள் இடத்தைப் பிடித்தன.

258
00:23:34,039 --> 00:23:36,124
ஆனால் சற்று தூரத்தில்...

259
00:23:38,168 --> 00:23:42,589
முழு வளர்ச்சியுற்ற ஆண் சிறுத்தை
ஒன்றும் இருக்கிறது.

260
00:23:49,763 --> 00:23:54,685
பகல்பொழுதில் இந்த இரவுநேர
வேட்டையாடி வந்திருப்பது

261
00:23:54,768 --> 00:23:57,062
உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

262
00:23:57,145 --> 00:23:59,898
நம்முடையக் குழுவினருக்கும் அப்படித்தான்.

263
00:24:00,524 --> 00:24:02,192
அப்படியே நில்லுங்கள், மக்களே.

264
00:24:41,356 --> 00:24:42,941
ரஸ்ஸெல் மெக்லாக்லின்
காட்டுயிர்களை படம்பிடிப்பவர்

265
00:24:43,025 --> 00:24:46,195
எனக்கு திடுக்கிடும் தருணங்கள் ஏற்பட்டுள்ளன
ஆனால் இது எல்லாவற்றிலும் பெரியது.

266
00:24:50,699 --> 00:24:52,117
ஆப்பிரிக்கா முழுக்க,

267
00:24:52,201 --> 00:24:56,538
சிறுத்தைகள் மனிதர்களிடம் தங்களுடைய
நிலத்தில் 60 சதவிகிதத்தை இழந்துள்ளன,

268
00:24:57,122 --> 00:24:59,875
அது வேட்டையாடுதலை
மிகவும் சவாலாக்கிவிட்டது.

269
00:25:02,503 --> 00:25:05,088
ஆனால் விருந்தினர்கள் யாரும்
இல்லாத நிலையில்,

270
00:25:05,672 --> 00:25:08,425
இந்தச் சிறுத்தை இங்குள்ள வாய்ப்பை
தெரிந்துக்கொண்டு,

271
00:25:09,134 --> 00:25:13,180
தன்னுடைய நடத்தையில் ஒரு குறிப்பிடத்தக்க
மாற்றத்தை செய்துகொண்டது.

272
00:25:17,059 --> 00:25:19,895
அது பகலிலேயே வேட்டையாடத் தொடங்கிவிட்டது.

273
00:25:29,821 --> 00:25:32,157
இதற்கு சில முயற்சிகள்
தேவைப்பட்டிருக்கலாம்...

274
00:25:35,244 --> 00:25:36,912
ஆனால் நீண்ட காலம் ஆகவில்லை...

275
00:25:38,455 --> 00:25:40,457
அதனுடைய புதிய வியூகத்திற்கு...

276
00:25:41,041 --> 00:25:42,251
பலன் கிடைத்துவிட்டது.

277
00:25:49,800 --> 00:25:51,593
ஆப்பிரிக்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை

278
00:25:51,677 --> 00:25:55,597
கடந்த 25 வருடங்களில் 30 சதவிகிதம்
குறைந்துவிட்டது.

279
00:25:56,557 --> 00:26:02,271
ஆனால் இந்தப் பொதுமுடக்க பஃபேயின் முழு
அனுகூலத்தையும் எடுத்துக்கொண்டு,

280
00:26:02,354 --> 00:26:04,356
இந்தச் சிறுத்தை விருத்தியடைகிறது.

281
00:26:05,023 --> 00:26:08,694
இது கிட்டத்தட்ட அதன் தங்குமிடமாகவே
ஆகிவிட்டது. அதனுடைய தனி ராஜாங்கம்.

282
00:26:24,835 --> 00:26:27,921
பெருந்தொற்று காலம்
தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

283
00:26:28,005 --> 00:26:29,965
6 மாதங்கள்

284
00:26:30,048 --> 00:26:35,262
செப்டம்பரில், 40க்கும் மேற்பட்ட நாடுகளில்
கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தன,

285
00:26:37,222 --> 00:26:41,393
இது 3 பில்லியன் மக்களின் செயல்பாட்டை
வரம்பிற்குள் உட்படுத்தியிருக்கிறது.

286
00:26:42,311 --> 00:26:43,645
பெரிய கூட்டங்கள்,

287
00:26:43,729 --> 00:26:49,484
நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை
நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட,

288
00:26:49,568 --> 00:26:54,573
ஒரு தடுப்பூசி போன்ற நம்பத்தகுந்த சிகிச்சை
கிடைக்கும் வரையில் திரும்ப நடக்க முடியாது.

289
00:26:56,408 --> 00:26:59,161
நாம் நம்முடைய புதிய இயல்பு
வாழ்க்கையோடு பொருந்தும்போது,

290
00:26:59,995 --> 00:27:03,207
இயற்கையின் புத்துயிர்ப்பு தொடர்கிறது.

291
00:27:04,917 --> 00:27:06,168
கங்கை
இந்தியா

292
00:27:06,251 --> 00:27:08,462
இந்தியாவில், கங்கை நதி

293
00:27:08,545 --> 00:27:12,674
ஆக்சிஜன் அளவில் 80 சதவிகித
அதிகரிப்பதைக் கண்டது.

294
00:27:15,177 --> 00:27:16,386
அட்லாண்டிக் கடற்கரை
மொராக்கோ

295
00:27:16,470 --> 00:27:18,847
ஆப்பிரிக்க அட்லாண்டிக் கடற்கரையில்,

296
00:27:19,348 --> 00:27:25,270
தண்ணீரின் சுத்தமானது, மோசமானதில் இருந்து
அருமையானதாக மாறியிருக்கிறது.

297
00:27:29,900 --> 00:27:34,363
நாம் வெளியே நடமாடுவது நீண்ட காலமாக
தொடர்ந்து குறைந்திருப்பதால்

298
00:27:34,446 --> 00:27:37,366
அது புதிய தலைமுறை விலங்குகளை
பலனடைய செய்திருக்கிறது.

299
00:27:37,449 --> 00:27:38,992
கேப் டவுன்
தென்னாப்பிரிக்கா

300
00:27:39,076 --> 00:27:40,077
மக்கள் தொகை 4.7 மில்லியன்

301
00:27:40,160 --> 00:27:42,579
இங்குள்ள தென்னாப்பிரிக்க கடற்கரையில்,

302
00:27:42,663 --> 00:27:47,000
சில பெருமைமிகு புதிய பெற்றோர்கள் தங்களுடைய
காலைநேர பயணத்தில் இருக்கிறார்கள்.

303
00:27:53,549 --> 00:27:56,385
அவைதான் ஆப்பிரிக்க ஜாக்காஸ் பென்குயின்கள்.

304
00:28:05,561 --> 00:28:09,022
அவை நமக்கு அருகிலேயே இருப்பிடத்தை
அமைத்துக் கொண்டுள்ளன.

305
00:28:26,540 --> 00:28:28,500
இனப்பெருக்க காலத்தின்போது,

306
00:28:28,584 --> 00:28:32,421
ஒவ்வொரு காலையும் அவை மீன்பிடிக்க
கடலுக்குச் செல்கின்றன.

307
00:28:39,970 --> 00:28:42,389
அவற்றின் குஞ்சுகள் அதிகமான தேவைகள்
உடையவை.

308
00:28:43,765 --> 00:28:48,687
அவை தங்கள் உடலின் 15 சதவிகிதம் அளவுக்கான
மீன்களை உண்ண வேண்டும்.

309
00:28:51,523 --> 00:28:55,319
அதிர்ஷ்டவசமாக, ஜாக்காஸ் பென்குயின்கள்
மிகவும் திறமையான வேட்டையாடிகள்...

310
00:28:56,153 --> 00:28:58,572
அவற்றால் 80 மீட்டர் ஆழம்வரைச் சென்று

311
00:28:59,406 --> 00:29:03,076
ஓடு இருக்கும் மீன்களையும், கூட்டமாகத்
திரியும் மீன்களையும் உட்கொள்ள முடியும்.

312
00:29:09,333 --> 00:29:13,378
ஆனால் தன் பசித்த குஞ்சுகளுக்கு இரையை
கொண்டுவந்து சேர்ப்பதுதான் சவாலானது.

313
00:29:18,675 --> 00:29:22,513
கடந்தாண்டுகளில் இக்கடற்கரைகள்
மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன.

314
00:29:23,639 --> 00:29:26,517
அதனால் பென்குயின்கள் மீன்பிடித்துவிட்டு
திரும்பிவரத் தயாராக இருந்த நேரம்…

315
00:29:27,226 --> 00:29:29,478
தங்களுடைய பாதைகள்
அடைபட்டிருப்பதைக் கண்டன.

316
00:29:30,812 --> 00:29:34,399
அதில் பல சூரியன் மறையும் நேரம் வரை
கரையிலேயே...

317
00:29:36,527 --> 00:29:38,487
மக்கள் கூட்டம் வீடு திரும்பும் வரை
காத்திருந்தன.

318
00:29:47,788 --> 00:29:51,834
ஆனால் இந்த வருடம்,
கடற்கரை ஆளரவமற்றிருக்கிறது.

319
00:29:59,758 --> 00:30:02,427
பென்குயின்கள் தங்கள் பழைய
வழக்கத்தைக் கைவிட்டு

320
00:30:02,511 --> 00:30:06,390
இப்போது, தங்களுடைய குஞ்சுகளின் வயிற்றை
நிரப்பப் போதுமான மீன்களுடன்

321
00:30:07,349 --> 00:30:10,143
சில மணிநேரங்கள் கடலில் இருந்துவிட்டு
திரும்பிவிடுகின்றன.

322
00:30:16,900 --> 00:30:22,531
நிறைய சூரிய ஒளி இருக்கும்போதே, அவற்றால்
மீண்டும் கடலுக்குள் செல்ல முடிகிறது.

323
00:30:28,453 --> 00:30:33,584
இந்தக் குஞ்சுகள் இப்போது ஒருநாளில்
இருமுறைக்கும் மேல் கூட உணவு உண்கின்றன.

324
00:30:36,420 --> 00:30:39,339
அவை இப்போது ஆரோக்கியமானவை மட்டுமல்ல,
வேகமாக வளரக்கூடியவையும் ஆகிவிட்டன,

325
00:30:39,423 --> 00:30:44,970
ஆனால் இதுபோன்ற நிறைய குடும்பங்கள்
வெற்றிகரமாக இரட்டையர்களை வளர்த்துள்ளன.

326
00:30:46,930 --> 00:30:49,099
மேலும் நிறைய நல்ல செய்திகளும் உள்ளன.

327
00:30:49,183 --> 00:30:50,684
அடுத்துவந்த சில வாரங்களில்,

328
00:30:50,767 --> 00:30:56,148
சில பெற்றோர்கள் வெற்றிகரமாக இரண்டாவது
தொகுதி குஞ்சுகளையும் வளர்த்துவிட்டன.

329
00:30:56,690 --> 00:31:00,194
ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளில் அது
இப்போதுதான் முதல்முறையாக நடந்திருக்கிறது.

330
00:31:03,572 --> 00:31:06,909
பல வருடங்களாகவே, பென்குயின்களும் இங்குள்ள
மக்களும் ஒருவரோடு ஒருவர்

331
00:31:06,992 --> 00:31:08,911
இணக்கமாகவே வாழ்ந்ததாக
நாம் நம்பி வருகிறோம்.

332
00:31:12,706 --> 00:31:17,169
ஆனால் உண்மையில், நாம் அவற்றின் வாழ்வை
சிக்கலாக்கியிருக்கிறோம்.

333
00:31:21,548 --> 00:31:24,426
பென்குயின்களின் எண்ணிக்கை
தெற்கு ஆப்பிரிக்காவில்

334
00:31:24,510 --> 00:31:28,597
கடந்த 30 வருடங்களில் 70 சதவிகிதம்
குறைந்துவிட்டதால்...

335
00:31:30,599 --> 00:31:33,018
நம்மால் செய்ய முடிந்த அனைத்து
உதவிகளும் அவற்றிற்கு தேவை.

336
00:31:42,069 --> 00:31:46,406
நகரத்தில் வாழும் விலங்குகளின் குட்டிகள்
மட்டும் செழிக்கவில்லை.

337
00:31:48,075 --> 00:31:51,495
தற்போது, இந்த வருடம் விதிக்கப்பட்ட
கட்டுபாடுகளின் விளைவுகள்

338
00:31:51,578 --> 00:31:55,123
உலகின் காடடர்ந்தப் பகுதிகளில்
கூட உணரப்படுகின்றன.

339
00:31:55,207 --> 00:31:57,417
மஸாய் மாரா - கென்யா
வருடாந்திர பார்வையாளர்கள் 300,000+

340
00:31:57,501 --> 00:32:01,296
தன் குட்டியை பாதுகாக்கும் பெரிய பூனையின்
திறன் உருமாறுதல்.

341
00:32:04,508 --> 00:32:05,759
சிறுத்தை.

342
00:32:11,014 --> 00:32:13,851
பூமியில் உள்ளதிலேயே அதிவேகமான பாலூட்டி.

343
00:32:30,200 --> 00:32:31,660
ஆனால் அவற்றிற்கு ஒரு பலவீனம் உண்டு.

344
00:32:31,743 --> 00:32:36,999
அவற்றின் உடல்வாகினாலேயே சிங்கங்கள் மற்றும்
கழுதைபுலிகள் போன்ற போட்டி வேட்டையாடிகளின்

345
00:32:38,959 --> 00:32:41,420
கொடூர பலம் இல்லாமல் போய்விட்டது.

346
00:32:46,133 --> 00:32:48,635
அவை சிறுத்தையின் உணவை
சந்தோஷமாகத் திருடுகின்றன.

347
00:32:49,386 --> 00:32:51,722
மற்றும் அதன் குட்டியைக் கொல்லவும்
தயங்குவதில்லை.

348
00:33:02,733 --> 00:33:05,444
சிறுத்தைகள் பதுங்கியிருக்க
முயற்சிக்கின்றன.

349
00:33:08,155 --> 00:33:10,157
ஆனால், இரண்டு குட்டிகளுடன், இந்த தாய்,

350
00:33:10,949 --> 00:33:14,995
அவற்றிற்கு உணவளிக்க இரண்டு அல்லது மூன்று
நாட்களுக்கு ஒருமுறை வேட்டையாட தேவையுள்ளது.

351
00:33:31,720 --> 00:33:33,013
அது வேட்டையாடும் போது,

352
00:33:33,096 --> 00:33:37,059
அதனுடைய ஆறுமாதக் குட்டிகள் உயரமான
புல்லுக்குள் மறைந்திருக்கின்றன.

353
00:33:40,145 --> 00:33:45,859
தன்னுடைய வேட்டையை முடித்தவுடனேயே,
அதற்கு தடுமாற்றம் ஏற்படுகிறது.

354
00:33:50,781 --> 00:33:53,158
அது நூற்றுக்கணக்கான மீட்டர்கள்
குட்டியிடமிருந்து தள்ளியிருக்கிறது,

355
00:33:53,617 --> 00:33:56,328
இறந்த உடலை வெகுதூரம்
இழுத்துச்செல்ல வேண்டும்.

356
00:33:58,247 --> 00:34:02,459
அது அதை விட்டுவிட்டாலோ, மற்ற விலங்குகளால்
அது திருடப்படும் ஆபத்துள்ளது.

357
00:34:05,963 --> 00:34:09,466
அதனுடைய ஒரே தீர்வு தன்னுடைய குட்டிகளை
தன்னுடன் சேர்ந்துகொள்வதற்காக...

358
00:34:10,634 --> 00:34:12,386
...மென்மையான கூக்குரல் எழுப்புவதுதான்.

359
00:34:15,179 --> 00:34:16,389
அது கவனமாக இருந்தாக வேண்டும்.

360
00:34:17,099 --> 00:34:19,476
அது சத்தமாகவோ அடிக்கடியோ கூக்குரலிட்டால்,

361
00:34:19,560 --> 00:34:23,146
பாதுகாப்பற்ற தன் குட்டிகளை நோக்கி அதன்
எதிரிகளின் கவனத்தை ஈர்த்துவிடலாம்.

362
00:34:26,483 --> 00:34:28,569
இப்படிப்பட்ட தருணத்தில்தான்

363
00:34:28,652 --> 00:34:32,114
அந்தச் சிறுத்தை தன் குரல் கேட்கப்படுவது
மிகவும் சிரமமாக இருப்பதாக உணர்ந்தது.

364
00:34:36,284 --> 00:34:38,704
பொது முடக்கத்திற்கு முந்தைய ஆண்டுகளில்,

365
00:34:38,786 --> 00:34:42,666
மஸாய் மாராவுக்கு வரும் சுற்றுலாவாசிகளின்
விருப்பப் பட்டியலில்

366
00:34:42,748 --> 00:34:44,751
சிறுத்தை வேட்டையை பார்ப்பது
முதலாவதாக இருந்தது.

367
00:34:45,585 --> 00:34:49,965
ஆனால், வேட்டையாடிய பிறகு தாயைச் சுற்றி
சூழ்ந்த கூட்டத்தினால் பிரச்சினை தோன்றியது.

368
00:34:51,842 --> 00:34:54,094
நிறைய கூச்சல். வாகனங்கள் மேலும் கீழும்
இறங்கிவருகின்றன.

369
00:34:54,178 --> 00:34:55,387
சலீம் மண்டெலா
சிறுத்தை ஆராய்ச்சியாளர்

370
00:34:55,971 --> 00:34:59,349
ரேடியோவில் வழிகாட்டிகள் பேசுகின்றனர்,
மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கின்றனர்.

371
00:35:00,893 --> 00:35:02,936
இந்த கூச்சலினால் குட்டிகளை

372
00:35:03,020 --> 00:35:05,397
அழைக்கும் தாய் சிறுத்தைகளின்
குரல் மறைந்தன.

373
00:35:06,064 --> 00:35:07,816
இந்தச் சத்தங்கள் எல்லாம்

374
00:35:07,900 --> 00:35:12,321
சிறுத்தைகள் உயிர்பிழைக்க நம்பியிருக்கும்
இயற்கைத் தகவல்தொடர்பை மூடிமறைக்கின்றன.

375
00:35:15,699 --> 00:35:20,662
தொடர்ந்து அழைக்க நிர்பந்திக்க
படுவதால், அவை ஆபத்தையும் அழைக்கின்றன.

376
00:35:30,589 --> 00:35:32,174
ஆனால் இந்த வருடம்...

377
00:35:32,257 --> 00:35:36,220
இந்தத் தாய் ஏறக்குறைய மனிதத் தொந்தரவே
இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறது.

378
00:35:41,517 --> 00:35:45,020
வெறுமையான புல்வெளிப் பிரதேசத்திற்குள்
ஒருசில அழைப்புகளிலேயே...

379
00:35:49,066 --> 00:35:50,943
...தாயின் குரலைக் கேட்டு...

380
00:35:57,282 --> 00:35:59,201
குட்டிகள் அதனுடன் சேர்ந்துக் கொள்கின்றன.

381
00:36:03,664 --> 00:36:06,333
அந்தத் தாய் சில அழைப்புகள்
மட்டுமே செய்ததைக் கண்டோம்.

382
00:36:06,416 --> 00:36:09,753
ஒன்று அல்லது இருமுறைகளுக்குள் குட்டிகள்
உடனடியாக பதிலளித்தன.

383
00:36:12,214 --> 00:36:13,924
சுற்றிலும் மனிதர்கள் இல்லாததால்,

384
00:36:14,007 --> 00:36:17,386
சிறுத்தை குட்டிகளால் நன்கு பிழைக்க முடிவதை
ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கின்றனர்.

385
00:36:19,847 --> 00:36:23,725
கோவிட்டிற்கு முந்தைய காலங்களில்,
மூன்றில் ஒரு குட்டி மட்டுமே உயிர்பிழைத்தது

386
00:36:23,809 --> 00:36:25,811
ஆனால் தற்போது,
மூன்று மாதங்களுக்கு மேல் வயதுடைய

387
00:36:25,894 --> 00:36:28,021
குட்டிகள் நிறைய இருப்பதை
நாம் காண்கிறோம்,

388
00:36:28,105 --> 00:36:29,815
நிறைய குட்டிகள் உயிர்பிழைத்திருக்க போவதால்

389
00:36:29,898 --> 00:36:33,026
சிறுத்தைகளும் நிறைய இருக்கப்
போகின்றன என்று

390
00:36:33,110 --> 00:36:34,778
நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

391
00:36:37,739 --> 00:36:41,952
ஆப்பிரிக்காவில் 7000 பெரிய
சிறுத்தைகள் மட்டுமே தற்போது இருப்பதால்...

392
00:36:43,954 --> 00:36:45,831
ஒவ்வொரு குட்டியும் விலைமதிப்பற்றது.

393
00:37:05,309 --> 00:37:08,395
இந்த வருடம் நமக்கு தொடர்ந்து
சவாலாக இருக்கும் வேளையில்...

394
00:37:08,478 --> 00:37:09,813
விந்தி தேசியப் பூங்கா
உகாண்டா

395
00:37:09,897 --> 00:37:11,565
...மேலும் அதிகமான அழிந்துவரும் விலங்குகள்

396
00:37:11,648 --> 00:37:15,485
தாங்கள் உயிர்பிழைப்பதற்கான
உற்சாகத்தை அனுபவித்து வருகின்றன.

397
00:37:20,532 --> 00:37:23,535
2020-ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை குறைந்ததால்

398
00:37:23,619 --> 00:37:24,912
இங்கு இந்த மலைவாழ் கொரில்லாக்கள்

399
00:37:24,995 --> 00:37:28,665
வழக்கத்தைவிட இரு மடங்கு
குட்டிகளை ஈன்றன.

400
00:37:34,588 --> 00:37:36,089
இங்கிலாந்தின் தெற்குகரையில்...

401
00:37:36,173 --> 00:37:37,174
டோர்ஸெட்
இங்கிலாந்து

402
00:37:37,257 --> 00:37:42,679
...பத்தாண்டுகளில் காணப்படாத அளவு,
முட்களுடைய சிறுமீன்கள் காணப்படுகின்றன.

403
00:37:43,180 --> 00:37:48,602
படகுகளின் நங்கூரங்கள் இல்லாமையால்
கடல் புற்கள் மீண்டிருப்பதே இதற்கு காரணம்.

404
00:37:54,024 --> 00:37:55,359
லைகிபியா
கென்யா

405
00:37:55,442 --> 00:37:58,695
மேலும் கென்யாவில், எந்த காண்டாமிருகமும்
அதன் கொம்புகளுக்காக கொல்லப்படாமல் இருப்பது

406
00:37:59,363 --> 00:38:02,699
1999-ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதல் முறை.

407
00:38:11,416 --> 00:38:14,086
பொதுமுடக்கம் தொடங்கி
முழுமையாக ஒருவருடம் ஆகிறது.

408
00:38:14,169 --> 00:38:15,337
12 மாதங்கள்

409
00:38:15,420 --> 00:38:20,217
இயற்கை உலகம் சௌகரியமாக இருப்பதை
நம்மில் பலர் கண்டறிந்த ஒரு வருடம்.

410
00:38:20,926 --> 00:38:25,848
உலகம் அசாதாரணமான வழிகளில்
மாற்றப்பட்டுள்ள ஒரு வருடம்.

411
00:38:29,059 --> 00:38:32,187
வருடாந்திர கார்பன் டையாக்சைடு
உமிழ்வின் அளவானது

412
00:38:32,271 --> 00:38:35,023
6 சதவிகிதம் குறைந்துள்ளது,

413
00:38:35,107 --> 00:38:37,568
இதுதான் இதுவரையிலான மிகப்பெரிய குறைவு.

414
00:38:39,486 --> 00:38:43,824
பூமியின் மேற்பரப்பிலும்கூட குறிப்பிடத்தக்க
மாற்றங்களைக் காணமுடிகிறது.

415
00:38:44,825 --> 00:38:48,620
பயணம் மற்றும் தொழில்துறை சம்மந்தமான
வேலைகள் பாதியாக குறைந்ததால்

416
00:38:48,704 --> 00:38:53,458
பதிவான வரலாற்றிலேயே மிகவும் அமைதியான
காலகட்டத்தை காண முடிந்தது.

417
00:38:57,796 --> 00:39:00,716
ஆனால் பொதுமுடக்கம் நிரந்தரமாக
நீளப்போவதில்லை.

418
00:39:02,217 --> 00:39:05,637
இயற்கைக்கு இடையூறின்றி அதனுடன் இணைந்து
வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிக்க

419
00:39:05,721 --> 00:39:09,474
இத்தருணத்தில் இருந்து நாம் எதை
தூண்டுதலாக எடுத்துக் கொள்ளலாம்?

420
00:39:14,396 --> 00:39:17,900
இந்தியாவில் சிலர்,

421
00:39:17,983 --> 00:39:19,693
அழிவின் விளிம்பில் உள்ள, மிக
வலிமையான விலங்குகளுடன்

422
00:39:19,776 --> 00:39:24,156
இசைவுடன் வாழ்வதற்கான வாய்ப்பை
இப்போதே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

423
00:39:27,659 --> 00:39:32,164
அசாம் - இந்தியா
மக்கள் தொகை 36 மில்லியன்

424
00:39:33,582 --> 00:39:35,626
ஒரு முழு வளர்ச்சியுற்ற ஆசிய யானை

425
00:39:35,709 --> 00:39:40,380
ஒருநாளைக்கு 150 கிலோ உணவை தினமும்
உண்ண வேண்டும்.

426
00:39:41,590 --> 00:39:45,010
ஆனால் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில்
5 சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது,

427
00:39:45,594 --> 00:39:48,972
அவற்றின் பெரும்பாலான வனவசிப்பிடங்கள்
விவசாய நிலங்களாக்கப்பட்டுவிட்டன...

428
00:39:49,056 --> 00:39:53,685
அதனால் இங்குள்ள யானைகள் விவசாயிகளின்
பயிர்களை நோக்கிப் படையெடுக்கின்றன.

429
00:40:05,989 --> 00:40:10,035
இதன் விளைவாக, விவசாயிகள் தங்கள்
நிலங்களைக் காக்க முயற்சிக்கின்றனர்.

430
00:40:11,453 --> 00:40:17,376
ஆனால் அவர்கள் சார்ந்துள்ள நெல் அறுவடையில்
பாதியை தொடர்ந்து இழக்கிறார்கள்.

431
00:40:30,138 --> 00:40:32,057
அவற்றை காட்டுக்குள் துரத்துவதற்கு

432
00:40:32,140 --> 00:40:33,892
இரவு முழுவதும் செலவிட வேண்டியிருக்கும்.

433
00:40:33,976 --> 00:40:35,394
ஆனாலும் அவை திரும்ப
வந்துவிடும் என்பதால்...

434
00:40:35,477 --> 00:40:36,478
பாஷ்கர் பரா

435
00:40:36,562 --> 00:40:39,606
...நாங்கள் திரும்ப அதையே
செய்ய வேண்டியிருக்கும்.

436
00:40:53,745 --> 00:40:57,040
இப்போது விவசாய நிலங்கள்
மட்டுமே ஆபத்தில் இல்லை.

437
00:41:00,043 --> 00:41:03,630
கிராமங்களில் உணவுத் தேடிவரும் யானைகளும்கூட

438
00:41:03,714 --> 00:41:06,341
மனிதர்களுடன் மோத வேண்டியிருக்கிறது.

439
00:41:11,054 --> 00:41:12,055
நாடு முழுவதிலும்,

440
00:41:12,139 --> 00:41:15,809
400 மனிதர்களும் நூறு யானைகளும்

441
00:41:15,893 --> 00:41:18,896
இந்தப் போராட்டத்தில் கொல்லப்படுகின்றனர்.

442
00:41:25,819 --> 00:41:28,864
ஆனால் ஒரு சமூகம் மட்டும்
பிரச்சினையைத் தீர்க்க

443
00:41:28,947 --> 00:41:30,657
ஒரு புதிய வழியில் முயற்சி செய்கிறது.

444
00:41:31,241 --> 00:41:34,411
பொதுமுடக்கத்தினால் தங்களுடைய ஊருக்கு
திரும்பிய நகரத் தொழிலாளர்களால்

445
00:41:34,995 --> 00:41:37,289
ஒரு உள்ளூர் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம்
தொடங்கிய திட்டத்திற்கு

446
00:41:37,372 --> 00:41:41,627
உதவிகரம் நீட்ட முடிந்தது.

447
00:41:43,253 --> 00:41:45,130
காட்டு யானைகளுக்கு பயிரிடுவதற்கு...

448
00:41:45,214 --> 00:41:46,215
மேக்னா ஹஸாரிக்கா
பல்லுயிர் பாதுகாவலர்

449
00:41:46,298 --> 00:41:50,010
...பொதுமுடக்கத்தின் போது ஒரு பெரிய
வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

450
00:41:51,803 --> 00:41:54,890
காட்டின் விளிம்பு பகுதிகளில்,
யானைகள் உண்பதற்கென்று,

451
00:41:54,973 --> 00:42:00,020
வேகமாக வளரக்கூடிய காட்டரிசி, புற்களை ஒரு
நடுநிலை இடத்தை உருவாக்கி நட்டு வைத்தனர்.

452
00:42:02,814 --> 00:42:07,402
500க்கும் அதிகமாக இருந்த
இந்த மொத்தச் சமூகமும் உதவிக்கு வந்தது.

453
00:42:07,486 --> 00:42:08,529
டியூலு போரா
பல்லுயிர் பாதுகாவலர்

454
00:42:09,279 --> 00:42:11,031
ஒரு சில மாதங்களில்

455
00:42:11,114 --> 00:42:17,329
அவர்கள் 400 ஏக்கர்கள் 1.6 சதுர கிலோமீட்டர்
இடத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

456
00:42:19,373 --> 00:42:22,459
இப்போது அவர்கள் யானைகளை
விரட்டியடிப்பதற்கு பதிலாக

457
00:42:22,543 --> 00:42:25,379
அவற்றை வரவேற்கும் விழாவை நடத்திக்
கொண்டிருக்கின்றனர்.

458
00:42:34,346 --> 00:42:36,598
பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

459
00:42:38,225 --> 00:42:41,854
ஆனால் இந்த யானைகள் தங்களுக்கென்று
வைத்த புற்களை உண்ணுமா...

460
00:42:43,897 --> 00:42:46,650
...அல்லது அவை விவசாயிகளின் நிலங்களுக்குப்
படையெடுக்குமா?

461
00:42:51,530 --> 00:42:53,532
வீட்டிற்கு மக்கள் திரும்பிய போது...

462
00:42:54,950 --> 00:42:58,537
காட்டின் விளிம்பில் ஏதோவொன்று
நடக்கத் தொடங்கியது.

463
00:43:06,712 --> 00:43:11,925
ஒன்றன்பின் ஒன்றாக, அவை மரங்களின்
மறைவிலிருந்து வெளிவந்தன.

464
00:43:14,928 --> 00:43:16,263
தாய் யானைகள்.

465
00:43:17,764 --> 00:43:19,266
குட்டிகள்.

466
00:43:19,349 --> 00:43:24,354
ஒரு முழுமையான 26 பசித்த யானைகளைக்
கொண்ட பெரிய குடும்பம்.

467
00:43:26,690 --> 00:43:28,358
அவை எவ்வளவு தூரம் சுற்றித் திரியும்?

468
00:43:33,739 --> 00:43:36,575
காட்டின் விளிம்பில்
நெருக்கமாக இருந்தபடியே...

469
00:43:38,076 --> 00:43:42,915
தங்களுக்கென்று நடப்பட்டிருந்த பயிர்களை
விருந்தாக்கிக் கொள்ளத் தீர்மானித்தன.

470
00:43:46,126 --> 00:43:48,795
முன்னதாக அவற்றை
விரட்டியடித்து இருக்கிறோம்.

471
00:43:48,879 --> 00:43:50,881
ஆனால் இப்போது, விஷயங்கள் மாறிவிட்டன.

472
00:43:50,964 --> 00:43:54,259
இது நன்றாக இருக்கிறது... நாங்கள்
மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

473
00:43:59,181 --> 00:44:01,767
அறுவடைக் காலம்
நெருங்கிக்கொண்டிருக்கையில்...

474
00:44:01,850 --> 00:44:06,438
அந்த யானைகள் எதுவும் விவசாயிகள்
நிலங்களில் சுற்றித்திரியவில்லை

475
00:44:07,064 --> 00:44:08,982
கிராமத்திற்குள்ளும் அவை நுழையவில்லை.

476
00:44:12,486 --> 00:44:14,613
நாம் யானைகளை நேசித்தால்

477
00:44:14,696 --> 00:44:17,574
யானைகளும் நம்மை நேசிக்கும்.

478
00:44:21,203 --> 00:44:22,955
தாவரங்களினால் ஆன
ஒரு இடைப்பட்ட பகுதியால்

479
00:44:23,038 --> 00:44:25,165
ஒரு நெடுங்கால சர்ச்சைக்கு

480
00:44:25,249 --> 00:44:27,459
நீண்டகாலத் தீர்வு கிடைத்திருக்கிறது.

481
00:44:29,920 --> 00:44:32,005
மற்றும் இதனை பக்கத்து கிராமத்தவர்கள்

482
00:44:32,089 --> 00:44:36,844
தாங்களும் செய்வதற்கு உள்ளூர் பாதுகாப்பு
நிறுவனத்துடன் பேசி வருகின்றனர்.

483
00:44:50,274 --> 00:44:53,026
கடந்த வருடத்தை திரும்பிப் பார்த்தால்...

484
00:44:53,110 --> 00:44:56,530
அது நம்மில் பலருக்கும் ரொம்பவே
கடினமானது தான்...

485
00:44:56,613 --> 00:45:01,201
வனவிலங்கிற்கான எதிர்காலத்தையும்,
நம்முடைய எதிர்காலத்தையும் பாதுகாக்க...

486
00:45:01,285 --> 00:45:02,911
நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

487
00:45:05,622 --> 00:45:09,001
நாம் ஒத்திசைந்து வாழ்வது பற்றி
நினைத்துப்பார்க்க வேண்டும்.

488
00:45:10,085 --> 00:45:14,214
வனவிலங்குடன் நம் இடங்களைப்
பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை உணரவேண்டும்

489
00:45:14,882 --> 00:45:16,508
முடக்கம் முடிந்து,

490
00:45:16,592 --> 00:45:19,344
வெளிவருகையில் முன்பு செய்ததையே செய்யலாம்
என சாதாரணமாக இருந்துவிடக் கூடாது.

491
00:45:21,263 --> 00:45:25,184
இயற்கையின் எதிர்வினையினுடைய
வியக்க வைக்கும் வேகமும் வகையும்...

492
00:45:25,267 --> 00:45:29,021
நம் வாழ்க்கையில் நாம் சிறிதளவு
மாற்றத்தை ஏற்படுத்தினாலே...

493
00:45:29,104 --> 00:45:33,650
இயற்கை உலகிற்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர
முடியும் என்பதை நிரூபிக்கிறது.

494
00:45:37,487 --> 00:45:41,158
ஒவ்வொரு கோடையின் போதும்
சிறிய பொதுமுடக்கங்கள் இருக்கலாம்.

495
00:45:41,241 --> 00:45:44,077
இரவுநேர கடற்கரைகள் மூடப்படலாம்.
அது பகல்நேரத்தில் இருக்க வேண்டியதில்லை.

496
00:45:44,161 --> 00:45:47,039
மக்களால் செய்யக்கூடிய
மிகச்சிறிய மாற்றங்கள்

497
00:45:47,122 --> 00:45:50,417
மனிதர்களும் காடும் வெற்றிகரமாக ஒன்றாக
இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தலாம்.

498
00:45:51,627 --> 00:45:54,546
கப்பல்களை மெதுவாகச்
செல்லும்படி நாம் கேட்டுக்கொண்டால்,

499
00:45:54,630 --> 00:45:58,342
கப்பல்களை குழுவாக போகச் செய்தால்,
விளைவுகளை அவை சிறியதாக்க முடியும்

500
00:45:58,425 --> 00:46:01,428
மற்றும் நீரின் ஆழத்தில் ஒலியெல்லையையும்
திமிங்கிலங்களையும் பாதுகாக்கலாம்.

501
00:46:02,304 --> 00:46:05,057
பூங்கா அதிகாரிகளிடம், சுற்றுலாவாசிகள்
மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளிடையே

502
00:46:05,140 --> 00:46:10,437
இந்த விலங்குகளின் உயிர்வாழ்க்கையை
உத்தரவாதப்படுத்துவதை உறுதிப்படுத்தும்

503
00:46:10,521 --> 00:46:12,981
நல்ல நடத்தைகளை மேம்படுத்தும்
நோக்கத்தைப் பரிந்துரைத்துள்ளோம்.

504
00:46:14,066 --> 00:46:18,403
பூமி மாறிய வருடமான
இந்த அசாதாரணமான வருடம்,

505
00:46:18,987 --> 00:46:22,741
காட்டுயிர்கள் செழிக்க நம்மால் உதவ முடியும்
என்பதை மட்டுமல்லாமல்

506
00:46:23,534 --> 00:46:25,661
நாம் அவ்வாறு செய்யத் தீர்மானித்தால்

507
00:46:26,245 --> 00:46:30,165
இந்த கிரகத்தின் ஆரோக்கியத்தையும் நம்மால்
மாற்றமுடியும் என்பதை காட்டியுள்ளது.

508
00:46:31,375 --> 00:46:33,544
மாசுபாட்டை குறைக்க நம்மால்
இயன்ற சிறிய வழிகளிலெல்லாம்

509
00:46:33,627 --> 00:46:37,965
பங்களிக்க இதுதான் சரியான
நேரம் என எனக்குத் தெரியும்.

510
00:46:38,715 --> 00:46:42,302
இயற்கையிலிருந்து தனித்து
இருப்பதற்கு மாறாக…

511
00:46:44,096 --> 00:46:48,725
நம்முடைய வாழ்வு அதனுடன் ஆழமாகவும்

512
00:46:48,809 --> 00:46:51,311
ஆச்சரியமான வழிகளிலும் இணைந்துள்ளது
என்பது நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.

513
00:46:53,355 --> 00:46:55,816
நாம் எதிர்காலத்தில் செழிக்க வேண்டுமானால்,

514
00:46:55,899 --> 00:46:58,902
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுடன்

515
00:46:59,736 --> 00:47:02,573
நம் கிரகத்தை பகிர்ந்துக் கொள்வதற்கான
வழிகளை கண்டறிய...

516
00:47:04,491 --> 00:47:06,869
இது தான் முக்கிய தருணம்.

517
00:48:11,517 --> 00:48:13,519
நரேஷ் குமார் ராமலிங்கம்



